🔴 LIVE | முப்பெரும் விழா 2023


வெற்றி மங்கை திருமதி.சுமதி சந்திரன்!

திருமதி.சுமதி சந்திரன் (31) விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகேயுள்ள மல்லாங்கிணறு கிராமத்தில் திரு.சந்திரன்-திருமதி.சந்திரன் தம்பதிகளுக்கு வர்த்தக குடும்பத்தில் மகளாகப்பிறந்தார். இவர் சிவகாசியிலுள்ள சங்கரலிங்கம் புவனேஸ்வரி காலேஜ் ஆப் பார்மசி கல்லூரியில் D.Pharm பட்டயம் பெற்றுள்ளார். சொந்த அத்தை மகனான M.அழகர்சாமி B.Tech., என்பவரை மணமுடித்துள்ள இத்தம்பதிகளுக்கு அ.மாதவன், அ.ஜெயராகவன் என இரண்டு மகன்கள் உள்ளனர்.


கடந்த 30 ஆண்டுகாலமாக அரசியல் பொதுவாழ்க்கையில் கிளைக்கழக செயலாளர், ஒன்றிய பிரதிநிதி, மாவட்டப் பிரதிநிதி, பகுதிச் செயலாளர் என்று பல்வேறு பொறுப்புகளில் சிறப்பாக பணியாற்றிக்கொண்டிருக்கும் திரு.சந்திரன் அவர்கள் தனது அரசியல் வாரிசாக அன்புமகள் சுமதிக்கு இந்த வாய்ப்பை பெற்றுத்தந்துள்ளார். தீப்பெட்டி தயாரிக்கும் இயந்திரத்தை உற்பத்தி செய்யும் நிறுவனத்தை நடத்திவரும் திரு.சந்திரன் அவர்கள், கட்சிப்பணியிலும் தீவிரமாக ஈடுபாடுடையவர்.  பல்வேறு போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொண்டு சிறைசென்றுள்ளவர், 2001-இல் திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் கைதுசெய்யப்பட்டபொழுது, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டு ஒருவாரகாலம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.



சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பட்டியலின தொகுதியாக அறிவிக்கப்பட்டிருந்ததால் தேர்தல் களத்தில் நேரடியாக போட்டியிடும் வாய்ப்பு கிட்டாத நிலையில், பொதுத்தொகுதியாக மாற்ற நீண்ட போராட்டம் நடத்தி வெற்றிகண்டார். 2021-இல் பொதுப்பிரிவினருக்கு வழங்கப்பட்ட மல்லாங்கிணறு பேரூராட்சிக்குட்பட்ட 13-வது வார்டில் கடந்த பிப்ரவரி 19-இல் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுகழக  வேட்பாளராக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு மகத்தான வெற்றி பெற்றுள்ளார் திருமதி.சுமதி சந்திரன். இளம் வயதில் பேரூராட்சி மன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திருமதி.சுமதி சந்திரன் அனைத்து தரப்பு மக்களுக்கும் சாதி, மத,இன பாகுபாடின்றி பணியாற்றி அரசியலில் அடுத்தத்தடுத்த நிலைகளை அடைய வாழ்த்துகிறோம்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved