🔴 LIVE | முப்பெரும் விழா 2023


நகர்ப்புற உள்ளாட்சி வெற்றித் திருமகன் செல்வராஜ்.

திரு.L.செல்வராஜ் (47) விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகேயுள்ள அயர்ன்ரெட்டியபட்டி கிராமத்தில் திரு.லட்சுமண நாயக்கர் - திருமதி.சின்னம்மாள் தம்பதியினருக்கு விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். தொடக்கப்பள்ளி வரை படித்துள்ளவர், அதன் பிறகு பெற்றோர்களுக்கு உதவியாக விவசாயப்பணியில் ஈடுபட்டார். இவருக்குத் திருமணமாகி S.பாண்டிஜோதி என்ற மனைவியும் S.சபரிநாதன், S.நாகவேல் என்று இருமகன்களும் உள்ளனர்.

விவசாயத்தை முழுநேரத் தொழிலாகக் கொண்டு வாழ்ந்துவரும் திரு.செல்வராஜ், சிறு வயதாக இருந்தபொழுது அயர்ன்ரெட்டியபட்டி கிராமத்திலுள்ள தனது நெறுங்கிய உறவினர்கள் இல்லங்களுக்கு அடிக்கடி வருகைதரும் அன்றைய அமைச்சர் தங்கபாண்டியன், மிக எளிமையாக கட்சியினரோடு அமர்ந்து தேனீர் கடைகளில் தேனீர் அருந்தியபடி கட்சிப்பணி குறித்து விவாதித்துச்செல்வது வழக்கம். இதையெல்லாம் சிறுவனாக இருந்து கவனித்து வந்ததும், அரசியில் இருந்த நெருங்கிய உறவினர்களுக்கு உதவியாக இருந்ததும், அரசியல் மீதான ஈர்ப்பு வந்ததாக சொல்கிறார். கடந்த பதினைந்து ஆண்டுகாலமாக தீவிர அரசியலில் ஈடுபட்டு வரும் செல்வராஜ் அவர்கள், 2016-இல் அறிவிக்கப்பட்ட உள்ளாட்சித்தேர்தலில் போட்டியிட மனு அளித்திருந்த நிலையில்  தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

கழகப்பணியிலும், சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களிலும் தொடர்ந்து தீவிரமாக ஈடுபட்டு வந்த செல்வராஜ் , மீண்டும் கடந்த 2022-பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதிநடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மல்லாங்கிணறு பேரூராட்சிக்குட்பட்ட 12-வது வார்டில் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு மகத்தான வெற்றிபெற்றுள்ளார். முதல்முறையாக பேரூராட்சி உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு.செல்வராஜ் அவர்கள் சிறப்புடன் பணியாற்றி மென்மேலும் உயர வாழ்த்துகிறோம்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved