ஒன்றியத் துணைப்பெருந்தலைவர்- இராசிபுரம்-திரு.R.ராம்குமார்
திரு.R.ராம்குமார் அவர்கள் 06.01.1977-இல் நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் அருகேயுள்ள இராமநாயக்கன்பட்டி கிராமத்தில் திரு.இராமமூர்த்தி - திருமதி.போத்தாயம்மாள் தம்பதியினருக்கு விவசாயக் குடும்பத்தில் மகனாகப் பிறந்தார். எஸ்.எஸ்.எல்.சி.வரை கல்வி பயின்ற நிலையில், பெற்றோர்களுக்கு உதவியாக விவசாயப்பணிக்கு திரும்பினார். இவருக்கு திருமணமாகி திருமதி.R.முத்துலட்சுமி என்ற மனைவியும் R.கோகுலக்கண்ணன் மற்றும் R.கிருத்திகா என்ற மகளும் உள்ளனர்.
விவசாயம் தவிர டிரான்ஸ்போர்ட் துறையில் கால்பதித்தவர் சொந்தமாக லாரிகளை இயக்கி வந்தார். அதன்பின் “ரிக் இயந்திரம்” பொறுத்திய லாரிகள் மூலம் ஆழ்துளை கிணறுகள் அமைக்கும் பணியில் சிலகாலம் ஈடுபட்டு வந்தார். திரு.இராம்குமார் அவர்கள் பயணித்த கார் விபத்திற்குள்ளானதையடுத்து நெடும்பயணத்தை தவிர்க்கும் பொருட்டு, விவசாயப் பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்.
தீவிர திராவிட இயக்கக் குடுமபத்திலிருந்து வந்தவரான திரு.இராம்குமார் அவர்களின் தந்தையார் திரு.இராமமூர்த்தி அவர்கள், அக்கிராமத்தில் முதன்முதலில் திமுகழக கிளையை அமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. திமுக கிளைக்கழகம் தோற்றுவிக்கப்பட்ட பின் சந்தித்த முதல் தேர்தலில் 10 வாக்குகளை மட்டுமே கழகம் பெறமுடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது. தனது தந்தையாரால் சிறுவயது முதலே திமுக நிகழ்ச்சிகள், கூட்டங்கள் மற்றும், தேர்தல்பணிக்கும் அழைத்துச் செல்லப்பட்டு, கட்சிபணிகளில் அறிமுகப் படுத்தப்பட்ட திரு.ராம்குமார் அவர்கள், தனது 18-ஆவது வயதில் அடிப்படை உறுப்பினராக இணைத்துக்கொண்டார். தனது கால்நூற்றாண்டு அரசியல் பயணத்தில் சுமார் பத்தாண்டு காலம் கிளைக்கழக பிரதிநிதியாகவும், எட்டாண்டுகள் மாவட்ட பிரதிநிதியாகவும், 2016-முதல் கடந்த நான்காண்டுகள் ஒன்றிய துணைச்செயலாளராகவும் பணியாற்றி வருகிறார். ஆரம்பத்தில் பத்து வாக்குகளை மட்டுமே பெற்ற வாக்குச்சாவடியில் இன்று 50% சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெருமளவிற்கு கட்சியை தன் பகுதில் வளர்த்தெடுத்துள்ளார் திரு.ராம்குமார் அவர்கள். தவிர கட்சி அழைப்பு விடுக்கும் மறியல்,ஆர்ப்பாட்டம்,போராட்டங்களில் பலமுறை கலந்துகொண்டு கைதாகியுள்ளார். மேலும், கட்சியின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வதுன், மாநாடுகள், பொதுக்கூட்டங்களுக்கு பெருமளவு கட்சியினரை அழைத்துச்சென்று கலந்து கொண்டு வருகிறார் திரு.ராம்குமார் அவர்கள். கழகம் ஆட்சிக்கட்டிலில் இருந்த காலத்தில் அரசின் அனைத்து நலத்திட்டங்களையும், உதவிகளையும் மக்களுக்குப் பெற்றுக் கொடுத்துள்ளார். மேலும் கிராமத்தின் அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றிட உறுதுணையாக இருந்ததுடன், தன்னை நாடிவரும் மக்களின் கோரிக்கைகளை முடிந்தமட்டில் நிறைவேற்றி வருகிறார்.
ஏழை-எளிய மக்கள் எளிதில் அணுகும் வண்ணம் மக்களோடு ஐக்கியப்படுத்திக்கொண்டு அரசியலில் பயணித்து வரும் திரு.ராம்குமார் அவர்களின் தந்தையார் திரு.இராமமூர்த்தி அவர்கள், 2011-ஆம் ஆண்டு அசுர பலத்துடன் அதிமுக ஆட்சியமைத்தவுடன் நடைபெற்ற உள்ளாட்சித்தேர்தலில் திமுகழகத்தின் சார்பில் புதுச்சத்திரம் ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட திரு.ராம்குமார் அவர்களின் தந்தையார் திரு.இராமமூர்த்தி அவர்கள் தோல்வியைத்தழுவினார். கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் திமுகழகத்தின் சார்பில் புதுச்சத்திரம் ஒன்றியம் 2-ஆவது வார்டு ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட திரு.இராம்குமார் அவர்கள் மகத்தான வெற்றி பெற்றதுடன், புதுச்சத்திரம் ஒன்றிய துணைப்பெருந்தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தலைமுறை தாண்டி அரசியலில் பயணித்து வரும் திரு.இராம்குமார் அவர்கள், சாதி,மதம்,இனம்,மொழி பாகுபாடின்றி அனைத்து தரப்பு மக்களுக்கும் சிறப்பாக சேவையாற்றி, வாய்ப்பளித்த கட்சிக்கும்,சமுதாயத்திற்கும் பெருமை சேர்த்திட வேண்டுமாய் அன்புடன் வேண்டி வாழ்த்துகிறோம்.