ஒன்றியக்குழு உறுப்பினர் - திருச்செங்கோடு-திரு.C.குணசேகர்
திரு.C.குணசேகர் அவர்கள் 09.04.1973-இல் நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகேயுள்ள வரப்பாளையம் கிராமத்தில் திரு.சின்னப்பன் – திருமதி. பழனியம்மாள் தம்பதியினருக்கு விவசாயக் குடும்பத்தில் மகனாகப் பிறந்தார். ஆரம்பக் கல்வியை முடித்த நிலையில் பெற்றோர்களுக்கு உதவியாக விவசாயப் பணியில் ஈடுபட்டு வந்தார். இவருக்கு திருமணமாகி திருமதி.G.ஜெயமணி என்ற மனைவியும்,G. சுகனேஷ்வர் என்ற மகனும் G.நந்தினி என்ற மகளும் உள்ளனர்.
திரு.குணசேகர் அவர்கள் சிறுவயது முதலே அதிமுக ஆதரவாளராக வளர்ந்தவர், தனது 20-ஆவது வயதில் கட்சியில் அடிப்படை உறுப்பினராக இணைத்துக் கொண்டார். 2010 ஆம் ஆண்டு வரப்பாளையம் அருகேயுள்ள சின்னப்ப நாயக்கர் நகரில் அதிமுகழக கிளையை நிறுவி அதன் செயலாளராக சுமார் பத்தாண்டுகளுக்கும் மேலாக பதவி வகித்து வருகிறார். ஆளும்கட்சியின் கிளைக்கழக செயலாளராக அரசின் மக்கள் நலத்திட்டங்களை அடித்தட்டு மக்களுக்கு கொண்டு சேர்த்துள்ளார் திரு.குணசேகர் அவர்கள். மேலும் ஏழை-எளிய மக்களின் கோரிக்கைகளை நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்த்துவைத்து வருகிறார். மேலும் கட்சி நிகழ்ச்சிகள், பொதுக்கூட்டங்கள், மாநாடுகள் ஆகியவற்றில் கலந்துகொண்டு வருகிறார்.
நீண்ட காலமாக அரசியல் பணியாற்றி வந்தாலும், தேர்தல் அரசியலில் பங்கெடுக்காமல் தவிர்த்து வந்த திரு.குணசேகர் அவர்கள், கடந்த 2019-டிசம்பர் மாதம் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் திருச்செங்கோடு ஒன்றியம் 8-ஆவது வார்டு ஒன்றியக்குழு உறுப்பினர் வேட்பாளராக அஇஅதிமுக சார்பில் களம்கண்டு மகத்தான வெற்றி பெற்றுள்ளார் திரு.குணசேகர் அவர்கள். களமிறங்கிய முதல்தேர்தலிலேயே வெற்றி பெற்றுள்ள திரு.குணசேகர் அவர்கள் சாதி,மத,இன,மொழி பாகுபாடின்றி அனைத்து தரப்பு மக்களுக்கும் பணியாற்றி வாய்ப்பளித்த கட்சிக்கும், சமுதாயத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டுமாய் அன்புடன் வேண்டி வாழ்த்துகிறோம்.