ஊராட்சி மன்ற துணைத்தலைவர்-இராசிபுரம்-திரு.M.ரங்கசாமி

திரு.M.ரங்கசாமி அவர்கள் 15.06.1970-இல் நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் அருகேயுள்ள அப்பநாயக்கன்பட்டி கிராமத்தில் திரு.முத்து நாயக்கர் - திருமதி.சின்னம்மாள் தம்பதியினருக்கு விவசாயக் குடும்பத்தில் மகனாகப் பிறந்தார். எஸ்.எஸ்.எல்.சி.வரை கல்வி பயின்றநிலையில், பெற்றோர்களுக்கு உதவியாக விவசாயப்பணிக்கு திரும்பினார். இவருக்கு திருமணமாகி திருமதி.R.ஸ்ரீதேவி என்ற மனைவியும் R.மோனிஷா மற்றும் R.உமா என்ற இருமகள்களும் R.தங்கவேல் என்ற மகனும் உள்ளனர்.
தனது 20-ஆவது வயதில் திமுக வில் அடிப்படை உறுப்பினராக இணைந்து பொதுவாழ்வைத் துவங்கியவர், கிளைக்கழக பிரதிநிதியாக நான் கு வருடங்களும், கிளைக்கழக செயலாளராக நான் கு வருடங்களும் பணியாற்றியவர், தற்பொழுது திமுகழகத்தில் ஊராட்சிக் கழக செயலாளராகப் பொறுப்பு வகித்து வருகிறார். ஏறக்குறைய முப்பதாண்டுகளுக்கு மேலாக பொதுப்பணியில் ஈடுபட்டு வரும் திரு. ரங்கசாமி அவர்கள், கட்சி அழைப்பு விடுக்கும் மறியல், ஆர்ப்பாட்டம்,போராட்டங்களில் பலமுறை கலந்துகொண்டு கைதாகியுள்ளார். மேலும், கட்சியின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வதுன், மாநாடுகள், பொதுக் கூட்டங்களுக்கு பெருமளவு கட்சியினரை அழைத்துச்சென்று கலந்து கொண்டு வருகிறார். திமுகழகம் ஆட்சிக்கட்டிலில் இருந்த காலத்தில் அரசின் அனைத்து நலத்திட்டங்களையும், உதவிகளையும் மக்களுக்குப் பெற்றுக் கொடுத்துள்ளார். மேலும் கிராமத்தின் அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றிட உறுதுணையாக இருந்ததுடன், முதியோர் உதவித்தொகை, விவசாயிகளுக்கு வங்கிக்கடன், சுய உதவிக்குழு அமைத்தல் போன்ற பல்வேறு வகைகளில் மக்களுக்கு சேவையாற்றி வருகிறார்.
ஏழை-எளிய மக்கள் எளிதில் அணுகும் வண்ணம் மக்களோடு ஐக்கியப்படுத்திக்கொண்டு அரசியலில் பயணித்து வரும் திரு.ரங்கசாமி அவர்கள். முப்பதாண்டுகால பொதுவாழ்வில் தேர்தல் அரசியலில் இருந்து ஒதுங்கியே இருந்தவர், கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் தாழ்த்தப்பட்டோருக்கு ஒதுக்கப்பட்ட அரசபாளையம் ஊராட்சி மன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர், ஊராட்சி மன்ற துணைத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இப்புதிய பொறுப்பின் மூலம் சாதி,மதம்,இனம்,மொழி பாகுபாடின்றி அனைத்து தரப்பு மக்களுக்கும் சிறப்பாக சேவையாற்றி, சார்ந்துள்ள கட்சிக்கும்,சமுதாயத்திற்கும் பெருமை சேர்த்திட வேண்டுமாய் அன்புடன் வேண்டி வாழ்த்துகிறோம்.