ஊராட்சி மன்றத் தலைவர்-கமுதி-திருமதி.புலியம்மாள் மாரிமுத்து
திருமதி.புலியம்மாள் மாரிமுத்து அவர்கள் 1980-இல் இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள சலவநாயக்கன்பட்டி கிராமத்தில் திரு.குருசாமி-திருமதி.இராமக்காள் தம்பதியினருக்கு விவசாயக் குடும்பத்தில் மகளாகப் பிறந்தார். ஆரம்பப்பள்ளி அளவில் கல்வி கற்றவர், உள்ளூரைச் சேர்ந்த திரு.S.மாரிமுத்து என்பவரை மணந்துள்ளார்.
திரு.S.மாரிமுத்து அவர்கள் 1975-இல் இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள சலவநாயக்கன்பட்டி கிராமத்தில் திரு.சுப்பையா - திருமதி.சுப்பம்மாள் தம்பதியினருக்கு விவசாயக் குடும்பத்தில் மகனாகப் பிறந்தார். நடுநிலைப்பள்ளிவரை பயின்றுள்ளவர், பெருநிலக்கிழாராவார். திரு.மாரிமுத்து - திருமதி.புலியம்மாள் தம்பதியினருக்கு M.செல்வக்குமார், M.அரவிந்த் என்ற இருமகன்கள் உள்ளனர்.
திரு.மாரிமுத்து அவர்களின் தந்தையார் திமுக அடையாளத்துடன், ஆதரவாளராக செயல்பட்டபடியால் திரு.மாரிமுத்து அவர்களும் சிறுவயது முதலே திமுக ஆதரவாளராக வளர்ந்தார், உரிய வயதில் திமுக-வில் உறுப்பினராக இணைந்து அடிப்படை உறுப்பினராக உள்ளார். கட்சிக்கூட்டங்கள், பொதுக்கூட்டங்கள், மாநாடுகளில் ஆர்வமுடன் கலந்து கொள்பவர், எந்த பொறுப்புகளும் ஏற்காமல் கழக தொண்டராகவே நீண்டகாலம் பயணித்து வந்தார்.
அரசியல் தவிர சமுதாயப்பணிகளிலும் மிகுந்த ஆர்வமுடையவர் பாஞ்சாலங்குறிச்சி வீரசக்க தேவியின் தீவிர பக்தர். சுமார் 15 வருடங்களுக்கு மேலாக சித்திரை திருவிழாற்கு அப்பகுதி மக்களை இணைத்து ஜோதி ஏந்தி தொடர் ஓட்டமாக செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளார். இதில் கலந்துகொள்பவர்களுக்கு உணவு, போக்குவரத்து உள்ளிட்டவற்றிற்கு தன் சொந்தக்காசை செலவளித்து நடத்தி வருகிறார் திரு.மாரிமுத்து அவர்கள்.
அரசியலிலும், பொதுசேவையிலும் தொடர்ந்து பல ஆண்டுகள் பயணித்து வந்தாலும் தேர்தல் அரசியலை தொடர்ந்து தவிர்த்து வந்தார். கடந்த 2019-டிசம்பர் மாதம் நடைபெற்ற உள்ளாட்சி மன்றத் தேர்தலில் கே.நெடுங்குளம் ஊராட்சி மன்றத் தலைவர் வேட்பாளாராக தன் துணைவியார் திருமதி.புலியம்மாள் அவர்களைக் களமிறக்கி மகத்தான வெற்றி பெற்றார் திரு.மாரிமுத்து அவர்கள். தன் முதல் முயற்சியிலேயே மக்களின் நம்பிக்கையைப் பெற்று வெற்றிவாகை சூடியுள்ள திருமதி.புலியம்மாள் மாரிமுத்து தம்பதியினர், சாதி,மதம்,இனம்,மொழி கடந்து அனைவருக்கும் பணியாற்றி சார்ந்திருக்கும் கட்சிக்கும், சமுதாயத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டுமாய் அன்புடன் வேண்டி வாழ்த்துகிறோம்.