ஊராட்சி மன்ற துணைத்தலைவர் - இராசிபுரம் - திரு.D.சரவணன்.B.Pharm.,
திரு.D.சரவணன். B.Pharm., அவர்கள் 07.04.1986-இல் நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் அருகேயுள்ள தம்பநாயக்கன்பட்டி கிராமத்தில் திரு.துரைசாமி - திருமதி.இராஜம்மாள் தம்பதியினருக்கு விவசாயக் குடும்பத்தில் மகனாகப் பிறந்தார். B.Pharm, பட்டம் பெற்றுள்ள திரு.சரவணன் S.S.மெடிக்கல்ஸ் என்ற பெயரில் மருந்து விற்பனையகம் நடத்தி வருகிறார். திரு.சரவணன் அவர்களுக்கு திருமணமாகி திருமதி.S.ஜெயந்தி என்ற மனைவியும் S.வசந்த் மற்றும் S.லித்திக் என்ற இருமகன்கள் உள்ளனர்.
பொதுவாழ்க்கைக்கு புதியவரான திரு.சரவணன் அவர்கள், கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பட்டியலின மக்களுக்கு ஒதுக்கப்பட்ட போடிநாயக்கன்பட்டி ஊராட்சி மன்றத்திற்குட்பட்ட தம்பநாயக்கன்பட்டி கிராமம் 5-ஆவது வார்டில் ஊராட்சி மன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர், ஊராட்சி மன்ற துணைத்தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இப்புதிய பொறுப்பின் மூலம் சாதி,மதம்,இனம்,மொழி பாகுபாடின்றி அனைத்து தரப்பு மக்களுக்கும் சிறப்பாக சேவையாற்றி, சமுதாயத்திற்கு பெருமை சேர்த்திட வேண்டுமாய் அன்புடன் வேண்டி வாழ்த்துகிறோம்.