🔴 LIVE | முப்பெரும் விழா 2023


ஊராட்சி மன்றத் தலைவர்-மதுரை.திருமதி.பிச்சையம்மாள்

திருமதி. பிச்சையம்மாள் அவர்கள் 1964-ஆம் ஆண்டு மதுரை மாவட்டம், பேரையூர் அருகேயுள்ள ஆவாரம்பட்டி கிராமத்தில் திரு.சின்னுசாமி – திருமதி.வேலம்மாள் தம்பதியினருக்கு விவசாயக் மகளாகப் பிறந்தார். தொடக்கப்பள்ளி வரை கல்வி பயின்றிருப்பவர், மதுரை, உச்சபட்டியைச் சேர்ந்த தெய்வத்திரு.பாலு நாயக்கர் அவர்களை மணமுடித்தார். இத் தம்பதினருக்கு திரு.ஈஸ்வரன் என்ற மகனும், இருமகள்களும் உள்ளனர்.


நடுத்தரக் குடும்பத்தலைவியாக பல்வேறு சுக-துக்கங்களுக்கிடையிலும் குழந்தைகளைப் சமூகப் பொறுப்புடன் வளர்த்துள்ளார் திருமதி.பிச்சையம்மாள் அவர்கள். வானம் பார்த்த பூமியில் விளையும் விளைச்சலை நம்பிக் குடும்பம் நடத்தினாலும், இருப்பதைக்கொண்டு சிறப்பாக வாழ்ந்தவர், தன் மகன் ஈஸ்வரன் மாணவப் பருவத்திலிருந்தே பொதுநல சேவையில் ஆர்வத்துடன் இருந்ததைக் கண்டு, குடும்ப சூழலுக்கும், எதிர்காலத்திற்கும் வருவாய் ஈட்டித்தராது என்றெல்லாம் கவலைகொள்ளாமல், அவரின் சமூகநலப்பணிக்கு தன்னால் இயன்றதைக் கொடுத்து தொடர்ந்து ஆதரித்து வந்தார். தன் தாயின் ஆதரவால் உத்வேகத்துடன், முழுவீச்சுடனும் கேப்டன் விஜயகாந்த் இரசிகர் மன்றப் பொறுப்பிலும், தேமுதிக-வில் ஒன்றிய அளவிலான பல்வேறு பொறுப்புகளில் சிறப்புடன் பணியாற்றி வந்தார் திரு.ஈஸ்வரன்.


நல்லொழுக்கத்தை மகனுக்கு போதித்து, தேசத்தின் சிறந்த குடிமனாக, சமூக சேவகனாக, வளர்த்தவருக்கு அதற்குண்டான பலனை இயற்கை வழங்காமலில்லை. கணவரை இழந்து, நேரடி அரசியலுக்கு சம்மந்தமில்லாமல், தனது முதுமைக்காலத்தில் இப்படியெல்லாம் வாய்ப்பு வரும் என்று கற்பனையில்கூட நினைத்துப்பார்க்காதவர் திருமதி.பிச்சையம்மாள். ஊராட்சி மன்றத்தலைவர் பதவிக்கு போட்டியிட வேண்டும் என்ற மகனின் விருப்பத்தை ஏற்றுக்கொண்டவர், உற்றார், உறவினர் எண்ணிக்கையை நம்பாமல், தன் மகன் இருபதாண்டுகளுக்குமேலாக ஆற்றிவரும் பொதுநலப்பணியில் நம்பிக்கைகொண்டு, கடந்த -2019-டிசம்பர் மாதம் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் உச்சபட்டி ஊராட்சி மன்றத் தலைவர் வேட்பாளராக களமிறங்கி வெற்றி வாகை சூடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை மகனின் நற்பணிகளுக்கு ஆதரவளித்து வந்தவர், அரசியலிலும் நேரடியாக வழிகாட்ட வந்ததில் சமுதாயம் மகிழ்ச்சி கொள்கிறது. திருமதி.பிச்சையம்மாள் அவர்கள் நீடூடி வாழ்ந்து தன் மகனுக்கும், சமுதாயத்திற்கும் உறுதுணையாக இருக்கவேண்டுமாய் அன்புடன் வேண்டி வாழ்த்துகிறோம்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved