🔴 LIVE | முப்பெரும் விழா 2023


கேரள அரசியலை கலக்கும் கம்பளத்தார்-பாலக்காடு.திரு.கண்ணன்

திரு.T.கண்ணன் அவர்கள் 15.05.1973-இல் கேரளா மாநிலம், பாலக்காடு மாவட்டம், கஞ்சிக்கோடு அருகேயுள்ள சடையன்களாய் கிராமத்தில் திரு.தங்கராஜ் நாயக்கர் – திருமதி.ரங்காயி அம்மாள் தம்பதியினருக்கு விவசாயக் குடும்பத்தில் மகனாகப் பிறந்தார். பத்தாம் வகுப்பு வரை கல்வி பயின்றுள்ளார். கோவை மாவட்டம் காரமடை அருகேயுள்ள சின்னதொட்டி பாளையம் கிராமத்தைச் சேர்ந்த தெய்வத்திருமதி.K.விமலாதேவி என்பவரை மணமுடித்தார். இத்தம்பதியினருக்கு K.அஸ்வின் என்ற மகனும், K.அக்ஷயா என்ற மகளும் உள்ளனர்.


தனது பள்ளிப்படிப்பை முடித்தவுடன் விவசாயப்பணியிணூடே கறவை மாடுகள் மூலம் பால் உற்பத்தியை பெறுக்கினார். அதன்பின் கஞ்சிக்கோட்டிலுள்ள டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தில் மெக்கானிக்காக சுமார் பத்தாண்டுகள் பணியாற்றினார். அதன்பின் டெக்ஸ்டைல்ஸ் தூரயின் வீழ்ச்சிக்குப்பின், 2005-ஆம் ஆண்டுமுதல் சுயதொழிலில் கால்பதித்தவர், டிராக்டர், டிப்பர் லாரிகள் மூலம் கட்டுமானப்பொருட்கள் விநியோகமும், விவசாயப்பணிகளுக்கு வாடைகைக்கு இயக்கியும் வருகிறார்.

1985-இல் மாணவப் பருவத்திலிருந்தே R.S.S அமைப்பில் இணைந்து தீவிரமாகப் பணியாற்றியவர், அப்பகுதியில் முக்கிய பொறுப்பாளராக இருந்துள்ளார். அதன்பின்னர் பாரதிய யுவ மோர்ச்சா அமைப்பில் மண்டலத்தலைவராக பொறுப்பு வகித்துள்ளார். டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தில் பணியாற்றியபொழுது பாரதிய மஸ்தூர் சங்கத்தின் செயலாளராக பொறுப்புவகித்துள்ளார் திரு.கண்ணன் அவர்கள். 2010 முதல் பாரதிய ஜனதா கட்சியில் புதுச்சேரி பிரிவின் தலைவராக பணியாற்றி வருகிறார்.

2010-ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பாலக்காடு மாவட்டம் புதுச்சேரி பஞ்சாயத்தின் 2-ஆவது வார்டு கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தக் காலகட்டத்தில் சாலைவசதி, கழிப்பிட வசதி, சாக்கடை வசதி, குடிநீர் வசதி, என ரூபாய் ஒரு கோடிக்கும் அதிக மதிப்பிலான பல்வேறு பணிகளை நிறைவேற்றியுள்ளார் திரு.கண்ணன் அவர்கள். மேலும், 25 ஏழைகளுக்கு வீடு பெற்றுத்தந்துள்ளார், 275-க்கும் மேற்பட்ட முதியவர்களுக்கு உதவித்தொகை பெற்றுத்தந்துள்ளார். ரேசன் கார்டு ஓரே நாளில் பெற்றுக்கொடுத்து சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


2016 ஆம் ஆண்டு நடைபெற்ற அரசியல் வன்முறையில் தனது துணைவியார் திருமதி.விமலாதேவியை பறிகொடுத்தார் திரு.கண்ணன் அவர்கள். திருமதி.விமலாதேவியின் மரணத்தையொட்டி கேரள மாநிலம் முழுவதும் முழுக்கடையடைப்பு நடத்தப்பட்டதுடன், மத்திய, மாநில அமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட இறுதி ஊர்வலம் நடைபெற்றது. அதையடுத்து 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், அக்கட்சியின் அப்போதைய தேசியத் தலைவரும், தற்போதைய இந்திய ஒன்றியத்தின் உள்துறை அமைச்சருமான திரு.அமித்ஷா அவர்கள் கலந்துகொண்ட தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் திரு,கண்ணன் – திருமதி.விமலாதேவி தம்பதியினரின் குழந்தைகள் அஸ்வின் மற்றும் அக்ஷ்யா ஆகியோர் தேசிய கீதம் பாடி  கூட்டத்தை துவக்கி வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கேரள மாநிலத்திலும், தேசிய அரசியலிலும் கம்பளத்தாரின் முகமாக இருக்கும் திரு.கண்ணன் அவர்கள், கட்சிக்காக தனது துணைவியாரை பலிகொடுத்திருப்பது வேதனையாது. கணவரின் அரசியல் பயணத்தில் தன் இன்னுயிரைத் துறந்துள்ள திருமதி.விமலாதேவியின் தியாகம் வீண்போகாது, திரு.கண்ணன் அவர்கள் அரசியலில் தனது ஒவ்வொரு அடியையும் பாதுகாப்பாக எடுத்துவைத்து, மனைவியின் தியாகத்தை அர்த்தமுள்ளதாக்கிட வேண்டும். இளம் வயதில் தனது தாயரைப் பறிகொடுத்து வாழும் குழந்தைகள் அஸ்வின் மற்றும் அக்ஷயா ஆகியோருக்கு ஆறுதல் படுத்திட சமுதாயத்திடம் வார்த்தைகள் கிடையாது. வரும்காலங்களில் அவர்கள் பெறப்போகும் ஒவ்வொரு வெற்றியிலும் அவர்களின் தாயாரின் தியாகமும், திருவுருவமும் நினைவுகொள்ளப்படும் என்பதை நினவில் நிறுத்தி செயல்பட வேண்டுமாய் அன்புடன் வேண்டி திரு.கண்ணன் மற்றும் குழந்தைகளை சமுதாயத்தின் சார்பில் வாழ்த்துகிறோம்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved