ஊராட்சி மன்றத் தலைவர் - நாமக்கல் - திருமதி.பழனியம்மாள் சின்னத்தம்பி
திருமதி.பழனியம்மாள் அவர்கள்
1966-இல் நாமக்கல் மாவட்டம், நாமக்கல் அருகேயுள்ள
நரவலூர்- தொட்டிபாளையம் கிராமத்தில் திரு.முத்து நாயக்கர் – திருமதி.நாகம்மாள்
தம்பதியினருக்கு விவசாயக்குடும்பத்தில் மகளாகப் பிறந்தார். தொடக்கக் கல்விவரை பயின்றவர் திரு.சின்னத்தம்பி அவர்களை மணமுடித்துள்ளார்.
திரு.சின்னத்தம்பி அவர்கள் 07.08.1963-இல் நாமக்கல் மாவட்டம், நாமக்கல் அருகேயுள்ள நரவலூர் - தொட்டிபாளையம் கிராமத்தில் திரு.பொம்ம நாயக்கர் – திரு. பழனியம்மாள் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். நடுநிலைப்பள்ளி வரை கல்வி பயின்றுள்ளார். திரு.சின்னத்தம்பி – திருமதி.பழனியம்மாள் தம்பதியினருக்கு C.ராதிகா என்ற மகள் உள்ளார்.
பாரம்பரிய காங்கிரஸ் குடும்பத்தைச் சேர்ந்தவரான திரு.சின்னத்தம்பி அவர்கள், அன்னை.இந்திராகாந்தி அவர்களின் மறைவுக்குப் பிறகு 1985-இல் திமுக-வில் இணைந்தார். அன்றிலிருந்து இன்றுவரை, கடந்த 35-வருடங்களாக கிளைக்கழக செயலாளராகப் பொறுப்பு வகித்து வருகிறார். கட்சிப்பணிகளில் தீவிரமாக பணியாற்றி வரும் திரு.சின்னத்தம்பி அவர்கள், கட்சி அழைப்பு விடுக்கும் மறியல், ஆர்ப்பாட்டம், போராட்டங்களில் கலந்துகொண்டு பலமுறை கைதாகியுள்ளார். தவிர கட்சி நடத்தும் நிகழ்ச்சிகள், மாநாடுகள், பொதுக்கூட்டங்கள் ஆகியவற்றில் பெருமளவு தொண்டர்களுடன் கலந்து கொண்டுள்ளார்.
நீண்ட
காலத்திற்குப் பிறகு
1996-இல் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றதிலிருந்து தொடர்ந்து தேர்தல்களை
சந்தித்து வரும் திரு.சின்னத்தம்பி அவர்கள். 1996- நடைபெற்ற
உள்ளாட்சித் தேர்தலில் வெறும் ஆறு ஓட்டுகளில் வெற்றி வாய்ப்பை இழந்தார்.
அதற்குப்பின் நடைபெற்ற 2001, 2006 மற்றும்
2011 தேர்தல்களிலும் போட்டியிட்டு தோல்வியை சந்தித்தார். தொடர் தோல்விகளை சந்தித்தாலும் மனம் தளராமல் அடுத்தடுத்த தேர்தல்களில் போட்டியிட்டு
வந்த திரு.சின்னத்தம்பி அவர்கள், 2016-உள்ளாட்சித்
தேர்தலிலும் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில் தேர்தல் இரத்து செய்யப்பட்டது.
கடந்த 2019-டிசம்பர் மாதம் நடைபெற்ற உள்ளாட்சித்
தேர்தலில், மகளிருக்கு ஒதுக்கப்பட்டிருந்த நரவலூர் தொட்டிபாளையம் ஊராட்சி மன்றத் தேர்தலில் தன் துணையார் திருமதி.பழனியம்மாள் சின்னத்தம்பி அவரகளைக் களமிறக்கி மகத்தான வெற்றி வாகைசூடி தொடர்
தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இந்த வெற்றியை அன்றைய நாளிதழ்கள் பரபரப்பு
செய்தியாக வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. அரசியலில் நீண்ட அனுபவம் வாய்ந்த
திரு.சின்னத்தம்பி தம்பதியினர் இப்புதிய பொறுப்பில் சாதி,மத, இன்,மொழி பாகுபாடின்றி அனைவருக்கும்
பணியாற்றி, சார்ந்துள்ள கட்சிக்கும், சமுதாயத்திற்கும்
பெருமை சேர்க்க வேண்டுமாய் அன்புடன் வேண்டி வாழ்த்துகிறோம்.