ஊராட்சி மன்றத் தலைவர்- பெருந்துறை.திருமதி.பேபி வெங்கடாசலம்
திருமதி.பேபி வெங்கடாசலம் அவர்கள் 1987-இல் திருப்பூர் மாவட்டம் விஜயமங்கலம் அருகேயுள்ள எர்ரநாயக்கனூர் கிராமத்தில் திரு.பொன்னுசாமி – திருமதி. இராஜம்மாள் தம்பதியினருக்கு மகளாகப்பிறந்தார். தொடக்கப்பள்ளி வரை கல்வி பயின்றவர் திரு.வெங்கடாசலம் அவர்களை மணமுடித்துள்ளார். இத்தம்பதிக்கு V. ஹேமா மிருணாளினி என்ற ஒரே மகள் உள்ளார்.
திரு.சந்திரன் (எ) வெங்கடாசலம் அவர்கள் 16.01.1974-இல் ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகேயுள்ள ஊத்துப்பாளையம் கிராமத்தில் திரு.வெங்கடாசலம் – திருமதி.இராஜம்மாள் தம்பதியினருக்கு விவசாயக்குடும்பத்தில் மகனாகப் பிறந்தார். இவர் மேல்நிலைப்பள்ளி முடித்தவுடன் DRA- (Dark Room Assistant) துறையில் ஒருவருடப் பயிற்சி முடித்துள்ளார்.
DRA-பயிற்சி முடித்தவர், சொந்த ஊரில் விசைத்தறி (பவர்லூம்) தொழிலில் சுமார் பத்தாண்டுகாலம் ஈடுபட்டு வந்தார். விசைத்தறி தொழில் வீழ்ச்ச்யைத் தொடர்ந்து, தமிழ்நாடு ரோடு டிரான்ஸ்போர்ட் (T.R.T) நடத்திவந்த பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் (தற்பொழுது அரேசே நடத்துகிறது) DRA-பிரிவில் சுமார் பத்தாண்டுகாலம் பணியாற்றியவர், 2008-முதல் எல்ஐசி ஏஜெண்டாக பணியாற்றி வருகிறார்.
1991-லிருந்து திமுக-வில் அடிப்படை உறுப்பினராகவுள்ள திரு.சந்திரன் அவர்கள், 2000-ஆவது ஆண்டு முதல் அக்கட்சியில் கிளைக்கழக செயலாளராக பெறுப்பேற்றவர், 2012-ஆம் ஆண்டு முதல் ஊராட்சிக்கழக செயலாளராக பதவி வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏறக்குறைய 30 ஆண்டுகாலமாக திமுக-வில் பயணித்து வருபவர், டாக்டர்.கலைஞர் மற்றும் தளபதி.ஸ்டாலின் ஆகியோரின் பிறந்த நாட்களில் கட்சியின் கொடி ஏற்றுவித்து நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். மேலும் பள்ளி மாணவ-மாணவியருக்கு நோட்டுப் புத்தகங்கள், பேனா, பென்சில்கள் வழங்கி வருகிறார். மிக எளிய மனிதராக, பொதுமக்கள் எந்த நேரத்திலும் எளிதில் தொடர்பு கொள்ளக்கூடியவராக இருக்கிறார் திரு.சந்திரன் அவர்கள்.
கால்நூற்றாண்டுகளுக்கு மேலாக அரசியலில் இருந்தாலும் தேர்தல் அரசியல் பக்கம் தலைகாட்டாமல் இருந்து வந்தவர், கடந்த 2019-டிசம்பர் மாதம் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் செல்லப்பம்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் வேட்பாளராக தனது துணைவியார் திருமதி.பேபி வெங்கடாசலத்தைக் களமிறக்கினார். அனைத்து தரப்பினரும் ஏற்றுக்கொள்ளக் கூடியவராக பொதுவாழ்வில் பணியாற்றி வந்த திரு.வெங்கடாசலைத்தை, அனைவரும் ஒருமித்த கருத்துடன் ஏற்றுக்கொண்டபடியால், திருமதி.பேபி வெங்ககடாசலம் அவர்கள் போட்டியின்றி ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. தான் சந்தித்த முதல் தேர்தலிலேயே அனைவரின் ஆதரவையும் பெற்று செல்லப்பம்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவராக பொறுப்பேற்றுள்ள திருமதி.பேபி சந்திரன் தம்பதினர், அம்மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், சாதி,மத, இன, மொழி பாகுபாடின்றி பணியாற்றி, வாய்ப்பளித்த கட்சிக்கும், சமுதாயத்திற்கு பெருமை சேர்க்க வேண்டுமாய் அன்புடன் வேண்டி வாழ்த்துகிறோம்.