🔴 LIVE | முப்பெரும் விழா 2023


ஊராட்சி மன்றத் தலைவர்-இராசிபுரம்.திருமதி.முத்துலட்சுமி சிவக்குமார்

திருமதி.முத்துலட்சுமி சிவக்குமார் அவர்கள் 1982-இல் நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகேயுள்ள  நாகப்பமுதலிபுதூரில் திருமதி.ரங்கசாமி நாயக்கர் – திருமதி. சின்னம்மாள் தம்பதியினருக்கு விவசாயக் குடும்பத்தில் மகளாகப் பிறந்தார். நடுநிலைப்பள்ளி வரை பயின்றுள்ளவர் திரு.சிவக்குமார் அவர்களை மணமுடித்துள்ளார். இத்தம்பதியினருக்கு S.ஜீவன் பிரகாஷ் என்ற மகனும், S.விஷ்ணுப்ரியா மகளும் உள்ளனர்.


திரு.சிவக்குமார் அவர்கள் 1978-இல், நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் அருகேயுள்ள சின்னப்பநாயக்கன்பட்டி கிராமத்தில் திரு.முத்துசாமி – திருமதி.ரங்காயி அம்மாள் தம்பதியினருக்கு விவசாயக்குடும்பத்தில் மகனாகப் பிறந்தார். இவர் மேல்நிலைப்பள்ளி வரை பயின்றுள்ளார். தனது மேல்நிலைக்கல்விக்குப் பின் LPG- டேங்கர் லாரியில் கிளீனர் பணியில் சேர்ந்தார். சுமார் இரண்டாண்டுகாலம் அப்பணியில் தொடர்ந்தவர், அதற்குப்பின், 1998 முதல் டாரஸ் டேங்கர் லாரி டிரைவராக பணியாற்றினார். இந்த வாய்ப்பின் மூலம் இந்தியா முழுவதும் சென்றுவரும் வாய்ப்பைப் பெற்றார். சுமார் பத்தாண்டுகள் டேங்கர் லாரியில் டிரைவராகப் பணியாற்றியபின், 2008 ஆம் ஆண்டு சொந்தமாக இரு டாரஸ் லாரிகளை வாங்கி டிரான்ஸ்போர்ட்டராக உருவெடுத்தார். இதுதவிர 2015-ஆம் ஆண்டு முதல் ரியல் எஸ்டேட் துறையில் கால்பதித்து இன்றுவரை தொடர்கிறார்.

அரசியலில் 1996-இல் களம் கண்டவர், திமுக வில் அடிப்படையாக உறுப்பினராக இணைந்தார். 2000-ஆம் ஆண்டு கனகபொம்மன்பட்டி கிளைக்கழகப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார். அதன் பின்னர் 2005-ஆம் ஆண்டு கிளைக்கழகச் செயலாளராக நியமிக்கப்பட்டார். 2015 ஆம் ஆண்டுமுதல் ஊராட்சிக் கழக செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார். கட்சியில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றிய திரு.சிவக்குமார் அவர்கள், முதியோர் பென்சன், குடிதண்ணீர் வசதி, ஆழ்துளை கிணறுகள், ஏழை-எளியோருக்கு மருத்துவ வசதி, என அரசின் பல்வேறு நலத்திட்டங்களை அடித்தட்டு மக்களுக்கு கொண்டு சேர்த்தார். தவிர, உள்ளூரில் நடக்கும் சுக-துக்கங்கள், விழாக்கள் என பொதுநலன் சார்ந்த அனைத்து விசயங்களிலும் முன்னின்று பணியாற்றினார். முக்கியமாக மிக எளிய மனிதராக, பொதுமக்கள் எந்த நேரத்திலும் எளிதில் தொடர்பு கொள்ளக்கூடியவராக இருக்கிறார் திரு.சிவக்குமார் அவர்கள்.


கால்நூற்றாண்டுகாலமாக அரசியலில் இருந்தாலும் தேர்தல் அரசியல் பக்கம் தலைகாட்டாமல் இருந்து வந்தவர், கடந்த 2019-டிசம்பர் மாதம் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் கனகபொம்மன்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் வேட்பாளராக தனது துணைவியார் திருமதி.முத்துலட்சுமி சிவக்குமார் களமிறக்கினார். அனைத்து தரப்பினரும் ஏற்றுக்கொள்ளக் கூடியவராக பொதுவாழ்வில் பணியாற்றி வந்த திரு.சிவக்குமார் அவர்களின் சேவையை அங்கீகரிக்கும் வகையில், திருமதி.முத்துலட்சுமி சிவக்குமார் அவர்களை போட்டியின்றி ஏகமனதாக தேர்ந்தெடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் இராசிபுரம் ஒன்றியத்தில் மொத்தமுள்ள 20 ஊராட்சி மன்றங்களில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஒரே ஊராட்சி மன்றத் தலைவர் என்ற பெருமை திருமதி.முத்துலட்சுமி அவர்களைச் சேர்ந்தது. தான் சந்தித்த முதல் தேர்தலிலேயே அனைவரின் ஆதரவையும் பெற்று கனகபொம்மன்பட்டி ஊராட்சி மன்றத் தலைவராக பொறுப்பேற்றுள்ள திருமதி.முத்துலட்சுமி தம்பதினர், அம்மக்களின் எதிபார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், சாதி,மத, இன, மொழி பாகுபாடின்றி பணியாற்றி, வாய்ப்பளித்த கட்சிகும், சமுதாயத்திற்கு பெருமை சேர்க்க வேண்டுமாய் அன்புடன் வேண்டி வாழ்த்துகிறோம்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved