ஊராட்சி மன்றத் தலைவர்-நாமக்கல்-திருமதி.இராஜேஸ்வரி பாலு
திருமதி.B.இராஜேஸ்வரி அவர்கள் 28.04.1968-இல் நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் அருகே இருளப்பட்டி கிராமத்தில் திரு.சின்னுசாமி – திருமதி. முத்தாயம்மாள் தம்பதியினருக்கு விவசாயக் குடும்பத்தில் மகளாகப் பிறந்தார், எஸ்.எஸ்.எல்.சி வரை பயின்றுள்ள திருமதி.இராஜேஸ்வரி அவர்கள் திரு.பாலுச்சாமி அவர்களை மணமுடித்துள்ளார்.
திரு.C.பாலுச்சாமி அவர்கள் 09.09.1964-இல் நாமக்கல் மாவட்டம், மோகனூர் அருகேயுள்ள சின்னபெத்தம்பட்டி கிராமத்தில் திரு. சின்னம நாயக்கர் – திருமதி. பங்காரு தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். மேல்நிலைப்பள்ளி இறுதியாண்டு வரை படித்தவர், பெற்றோருக்கு உதவியாக விவசாயப்பணிக்கு திரும்பினார். திரு.பாலுச்சாமி – திருமதி.இராஜேஸ்வரி தம்பதியினருக்கு B.சங்கீதா, B.சாந்தி, B.சத்யா என்ற மூன்று மகள்கள் உள்ளனர்.
இளம்வயது முதலே திமுக அனுதாபியாக வளர்ந்தவர், அக்கட்சியில் கிளைக்கழக செயலாளராக பொறுப்பு வகித்துள்ளார். 2000-ஆவது ஆண்டில் விடுதலைக்களம் அமைப்பு தொடங்கப்பட்டதில் முக்கிய பங்காற்றியவர், விடுதலைக்களத்தின் நாமக்கல் மாவட்டச் செயலாளராக 2008-வரை பதவி வகித்துள்ளார். விடுதலைக்களம் அமைப்பை தமிழகத்தின் மூளை முடுக்கெல்லாம் கொண்டு செல்ல அரும்பணியாற்றியவர்களில் திரு.பாலுச்சாமி அவர்களும் ஒருவர். தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு சமுதாயப் பணியாற்றியுள்ள திரு.பாலுச்சாமி அவர்கள், 2008-ஆம் ஆண்டு நாமக்கல் மாவட்டத்தில் விடுதலைக்களம் சார்பில் பிரமாண்ட மாநாட்டை நடத்துவதில் முக்கியப்பங்காற்றியவர். சாதிச்சான்றிதழ் பெறுவதில் உள்ள தடைகளை உடைத்தெரிய முக்கிய காரணமாக விளங்கிய இம்மாநாட்டிற்காண பெருமளவு நிதிச்சுமையை தன் தோள்களில் தாங்கிக்கொண்டவர், 2010-முதல் விடுதலைக்களம் அமைப்பின் மாநில துணைத்தலைவராக பொறுப்புவகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
விவசாயம் தவிர “ஏழுமலையான்” என்ற பெயரில் மளிகைக் கடையும், பேக்கரியும் நடத்தி வருகிறார் திரு.பாலுச்சாமி. சமுதாயம் சந்தித்த பல்வேறு பிரச்சினைகளுக்கு முன்னின்று உதவியவர், போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களையும் முன்னெடுத்து நடத்தியுள்ளார். உதவி,கோரிக்கை என்று தன்னை நாடிவரும் மக்களுக்கு தன்னாலான உதவிகளை செய்து கொடுத்துள்ளார். தவிர உள்ளூரில் அனைத்து முக்கிய நிகழ்விலும் மக்களின் சுக, துக்கங்களிலும் கலந்து கொண்டு மக்களோடு மக்களாக, மக்கள் எளிதில் அணுகும் அரசியல் தலைவராக இருந்து வருகிறார் திரு.பாலுச்சாமி அவர்கள்.
2011-ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் சின்னபெத்தாம்பட்டி ஊராட்சி மன்றத்தலைவர் தேர்தலில் போட்டியிட்டு சொற்ப வாக்குகளில் வெற்றி வாய்ப்பைத் தவறவிட்ட திரு.பாலுச்சாமி அவர்கள், மீண்டும் 2019-டிசம்பர் மாதம் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் தனது துணைவியார் திருமதி.இராஜேஸ்வரி அவர்களை சின்னபெத்தம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் வேட்பாளராகக் களமிறக்கி மகத்தான வெற்றி பெறச்செய்துள்ளார். இப்புதிய பொறுப்பின் மூலம் சாதி,மத,இன, மொழி பாகுபாடின்றி அனைத்து தரப்பு மக்களுக்கும் சேவையாற்றி, சார்ந்திருக்கும் கட்சிக்கும், சமுதாயத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டுமாய் அன்புடன் வேண்டி வாழ்த்துகிறோம்.