ஊராட்சி மன்றத் தலைவர் -கமுதி- திருமதி.N.சாந்தி நாகராஜன்
திருமதி. N.சாந்தி அவர்கள் 1985-இல் விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகேயுள்ள வெள்ளையாபுரம் கிராமத்தில் திரு.பெரிய ராமையா - திருமதிஅஞ்சலிதேவி தம்பதியினருக்கு விவசாயக் குடும்பத்தில் மகளாகப் பிறந்தார். தொடக்கப்பள்ளி வரை கல்வி பயின்றவர், திரு.நாகராஜன் அவர்களை மணமுடித்துள்ளார்.
திரு.G.நாகராஜன் அவர்கள் 1976-இல் இராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள N.வாலசுப்பிரமணியபுரம் கிராமத்தில் திரு.குருசாமி நாயக்கர் – திருமதி. வரதம்மாள் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். நடுநிலைப்பள்ளி வரை பயின்றுள்ளவர், பெற்றோர்களுக்கு உதவியாக விவசாயப்பணிக்கு திரும்பினார். திரு.நாகராஜன் – திருமதி.சாந்தி தம்பதினருக்கு N.இந்திரஜித் என்ற மகனும் N.நாகஜோதி, N.வரதலட்சுமி என்ற இருமகள்களும் உள்ளனர்.
திரு.நாகராஜன் 1993-இல் திரு.வைகோ அவர்கள் மதிமுக-வைத் தொடங்கிய காலத்திலிருந்து அக்கட்சியில் இணைந்து கால்நூற்றாண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறார். மதிமுக-வில் ஊராட்சி செயலாளராகப் பொறுப்பு வகித்து வரும் திரு.நாகராஜன் அவர்கள், கட்சி அழைப்பு பல்வேறு போராட்டங்களில் கலந்துகொண்டு பலமுறை கைதாகியுள்ளார். மேலும், கட்சியின் பொதுக்கூட்டம், மாநாடு என அனைத்து நிகழ்விலும் தவறாமல் கலந்துகொண்டு வருகிறார்.
உள்ளூர் பிரச்சினைகள், நிகழ்ச்சிகள், சுக-துக்கங்களில் பங்கேற்று மக்களோடு மக்களாக, யாரும் எந்தநேரத்திலும் அணுகக்கூடிய அளவில் எளிமையானவரான திரு.நாகராஜன் கடந்த 2019-டிசம்பர் மாதம் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் நீராவி கரிசல்குளம் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு பொதுவேட்பாளராக தனது துணைவியார் திருமதி.சாந்தி அவர்களை களமிறக்கி எழுபது சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று வெற்றியடையச் செய்துள்ளார். இப்புதிய பொறுப்பின் மூலம் திருமதி.சாந்தி நாகராஜன் தம்பதியினர் சாதி, மதம், மொழி, இனம் கடந்து அனைத்து தரப்பு மக்களுக்கும் பாடுபட்டு, வாய்ப்பளித்த மக்களுக்கும், சமுதாயத்திற்கும் பெருமை சேர்த்திட வேண்டுமாய் அன்புடன் வேண்டி வாழ்த்துகிறோம்.