ஊராட்சி மன்றத் தலைவர்-திண்டுக்கல்.திருமதி.சுந்தரி அன்பரசு
திருமதி.சுந்தரி அன்பரசு அவர்கள் 1980-ஆம் ஆண்டு திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள வேலன்சேர்வைக்காரன்பட்டி கிராமத்தில் திரு.வெள்ளைச்சாமி – திருமதி.பவுன்தாய் அம்மாள் தம்பதியினருக்கு விவசாயக் குடும்பத்தில் மகளாகப் பிறந்தார். நடுநிலைப்பள்ளி வரை கல்வி பயின்றுள்ளவர், திண்டுக்கல் மாவட்டம் ரெங்கப்பநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த திரு.அன்பரசு (இவர் பற்றி மேலும் விபரங்களை அறிய நீலநிறத்திலுள்ள பெயரை க்ளிக் செய்யவும்) அவர்களை மணம் முடித்துள்ளார். இத்தம்பதியினருக்கு A.விஜய் பிர்யதர்ஷன் என்ற மகனும், A.விஷ்வஹரினி என்ற மகளும் உள்ளனர்.
திருமதி.சுந்தரி அவர்களுக்கு இளம்வயதிலேயே சுயதொழில் துவங்கவேண்டும் என்ற ஆர்வமிருந்தாலும், திருப்பூரில் தொழிலதிபராக இருந்த திரு.அன்பரசு அவர்களை திருமணம் முடித்தநிலைவில். சரியான வாய்ப்பிற்காக காத்துக்கொண்டிருந்தார். ஆனால் திருப்பூர் வாழ்க்கை அவருக்கு அந்த சந்தர்ப்பத்தை வழங்கவில்லை என்றாலும் ஏழை-எளியவர்கள் மற்றும் மகளிர் நலன் சார்ந்த சேவை செய்யவேண்டும் என்ற எண்ணத்திற்கு விதைபோட்டிருந்தது. கணவரின் தொழில், குழந்தை வளர்ப்பு, கல்வி என பரபரப்பான சூழலில், தனது கனவு நிறைவேறாத நிலையில், சொந்த ஊருக்கு குடிபெயர்ந்தனர். தனியாக சுயதொழில் துவங்கும் முன் கணவர் துவங்கிய செந்தூர் கிரஷர் ஒர்க்ஸில் பங்குதாரராக நிர்வாகப் பொறுப்பை கவனித்துக் கொண்டார். இதற்கிடையில் புதிய தொழில், மகளிர் நலன், குழந்தை வளர்ப்பு, சுகாதாரம் மற்றும் மகளிர் சுயஉதவிக்குழு போன்றவற்றிற்கு முன்னுரிமை கொடுத்து, அது சார்ந்த பணிகளில் ஈடுபட்டார். “விஷ்வ துளசி” என்ற பெயரில் மரச்செக்கு எண்ணெய் தயாரிக்கும் பணியை துவங்கினார் படிப்படியாக விற்பனை சந்தையை விரிவு படுத்திக்கொண்டு சந்தையின் டிமாண்டையும் கருத்தில் கொண்டு மசாலா பொருட்களை தயாரித்தும் விற்பனை செய்து வருகிறார்.
தொழில் மற்றும் பொதுவாழ்க்கை இரண்டையும் கணவரின் ஆதரவுடன் சிறப்பாக கையாண்டவரை 2019-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலின் மூலம் தங்கள் ஊராட்சி மன்றத்தலைவராக்க மக்கள் விரும்பினர். இந்த கோரிக்கையையும், மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வாய்ப்புகளையும் ஆராய்ந்து ஏற்றுக்கொண்ட திருமதி.சுந்தரி அன்பரசு அவர்களுக்கு அமோக ஆதரவளித்து கொத்தப்புள்ளி ஊராட்சி மன்றத்தலைவராக வெற்றிபெற வைத்துள்ளனர் அம்மக்கள்.
திருமதி.சுந்தரி அன்பரசு அவர்கள் ஏற்கனவே மேற்கொண்டு வரும் பொதுப்பணியுடன் இன்னும் கூடுதலான பணிகளையும், அரசின் திட்டங்களையும் சிறப்பான முறையில் அனைத்து தரப்பினரும் பயன்பெரும் வகையில் செயல்படுத்திட, புதிதாக கிடைத்துள்ள ஊராட்சித் தலைவர் என்ற அதிகாரம் உதவும் என்பதில் ஐயமில்லை. திருமதி.சந்தரி அன்பரசு தம்பதியினர் மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் சிறப்பாக செயல்பட்டு வாக்களித்த மக்களுக்கும் சமுதாயத்திற்கும் பெருமை சேர்த்திட வேண்டுமாய் அன்புடன் வேண்டி வாழ்த்துகிறோம்.