ஊராட்சி மன்றத் தலைவர் - விருதுநகர் - திருமதி. M.பாண்டியம்மாள்
திருமதி.M.பாண்டியம்மாள் அவர்கள் 1968-இல் விருதுநகர் மாவட்டம், விருதுநகர் அருகேயுள்ள மருதநத்தம் கிராமத்தில் திரு.செல்லச்சாமி - திருமதி.லட்சுமியம்மாள் தம்பதியினருக்கு விவசாயக் குடும்பத்தில் மகளாகப் பிறந்தார். திரு.மன்மதன் (எ) M.மகாலிங்கம் அவர்களை மணமுடித்துள்ளார்.
திரு.M.மகாலிங்கம் அவர்கள் 1965-இல் விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகேயுள்ள வலுக்கலொட்டி கிராமத்தில் திரு.இரா.மல்லையா - திருமதி.லிங்கம்மாள் தம்பதியினருக்கு விவசாயக் குடும்பத்தில் மகனாகப் பிறந்தார். தொடக்கக்கல்வி வரை பயின்றவரான திரு.மகாலிங்கம் அவர்கள் விவசாயப்பணியுடன், கால்நடைப்பண்ணை நடத்தி வருகிறார். திரு.மகாலிங்கம் – திருமதி.பாண்டியம்மாள் தம்பதியினருக்கு, M.கோட்ராஜ், M.வீரபாண்டியன், M.கார்த்திகைச்செல்வன் என்ற மூன்று மகன்களும், M.மணிப்பிரியா மகளும் உள்ளனர்.
தீவிர அதிமுக தொண்டரான திரு.மகாலிங்கம் அவர்கள், வலுக்கலொட்டி கிளைக்கழக செயலாளராக நீண்ட நாட்களாகப் பதவிவகித்து வருகிறார். தமிழகத்தில் ஆளும் கட்சியாக கழகம் இருக்கின்றபொழுது ,அரசின் மக்கள் நலத்திட்டங்களையும், மானியம், பிற உதவிகள் அனைத்தும் எளிய மக்களைச் சென்றடையும் வகையில் பணியாற்றியுள்ளார். உள்ளூர் மக்களின் சுக-துக்கங்கள் அனைத்திலும் பங்கெடுத்துப்பதுடன், தேவையான உதவிகளையும் செய்து வருகிறார் திரு.மகாலிங்கம்.
வலுக்கலொட்டி கிராம தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கித் தலைவராக கடந்த 17-வருடங்களாக பொறுப்பு வகித்துவருபவரான திரு.மகாலிங்கம் அவர்கள், கடந்த 2019-டிசம்பர் மாதம் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில், தனது துணைவியார் திருமதி.பாண்டியம்மாள் அவர்களை வலுக்கலொட்டி ஊராட்சி மன்றத் தலைவர் வேட்பாளராகக் களமிறக்கி மகத்தான வெற்றி பெற்றுள்ளார். இப்புதிய பொறுப்பின் மூலம் திரு.மகாலிங்கம் –திருமதி.பாண்டியம்மாள் தம்பதியினர் சாதி, மத, இன,மொழி வேறுபாடின்றி அனைத்து தரப்பு மக்களுக்கும் பணியாற்றி வெற்றிகளைக் குவித்து, வாய்ப்பளித்த மக்களுக்கும், சமுதாயத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டுமாய் அன்புடன் வேண்டி வாழ்த்துகிறோம்.