ஊராட்சி மன்றத் தலைவர் - விளத்திகுளம் - திருமதி.K.மகாலட்சுமி கண்ணன்
திரு.K.மகாலட்சுமி அவர்கள் 20.04.1983-இல் தூத்துக்குடி மாவட்டம், விளாத்திக்குளம் அருகேயுள்ள P.ஜெகவீரபுரம் கிராமத்தில் திரு.சோலையப்ப நாயக்கர் – திருமதி.இராமலட்சுமி தம்பதியினருக்கு விவசாயக்குடும்பத்தில் மகளாகப் பிறந்தார். நடுநிலைப்பள்ளி வரை பயின்றுள்ளவர், திரு.கண்ணன் அவர்களை மணமுடித்துள்ளார்.
திரு.A.கண்ணன்.M.A.(M.Phil),PGDCA., அவர்கள் 10.05.1979-இல் தூத்துக்குடி மாவட்டம், விளாத்திக்குளம் அருகேயுள்ள முத்துப்பட்டி கிராமத்தில் திரு.ஜெயராஜ் (எ) அய்யரப்ப நாயக்கர் – திருமதி.சின்னம்மாள் தம்பதியினருக்கு விவசாயக் குடும்பத்தில் மகனாகப்பிறந்தார். திரு.கண்ணன் - திருமதி. K.மகாலட்சுமி தம்பதியினருக்கு K.மாதவன், K.அரிபிரசாத் என இருமகன்கள் உள்ளனர்.
அ.இ.அ.தி.மு.கழகத்தைச் சேர்ந்தவரான திரு.கண்ணன் அவர்கள் “தீபம் பீப்பிள் டெவலப்மெண்ட் சொசைட்டி” என்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்நிறுவனத்தின் மூலம் விளாத்திக்குளம் பகுதியில் நூற்றுக்கணக்கான மகளிர் சுய உதவிக்குழுக்களை உருவாக்கி தொழில்கடன், சுயதொழில் ஆலோசனை, இயற்கை மருத்துவம் மற்றும் யோகா,விழிப்புணர்வு முகாம் போன்ற பல்வேறு சேவைகளை வழங்கி, அடித்தட்டு மக்களை வறுமைக்கோட்டிலிருந்து பொருளாதார ரீதியில் முன்னேற்றும் வகையில் செயல்பட்டு வருகிறார். மேலும், தூய்மை பாரத இயக்கத்தில் வட்டார ஒருங்கிணைப்பாளராக பணியாற்றும் திரு.கண்ணன் அவர்கள், தூய்மையான ஊராட்சியை உருவாக்குதல் போன்ற பணிகளை மேற்கொண்டு வருகிறார். தவிர, உள்ளூர் மக்களின் தேவைகளையும், கோரிக்கைகளையும் நிறைவேற்றிக்கொடுப்பதில் அதிக முனைப்புடன் செயல்படுபவர், உள்ளூர் நிகழ்வுகள் அனைத்திலும் முன்னின்று செயலாற்றுவதுடன்,, மக்களின் சுக-துக்கங்களில் பங்கெடுத்து அவர்களுக்கு ஆதரவாக இருந்து வருகிறார். கட்சியின் அனைத்து நிகழ்விலும் கலந்துகொள்பவர், கழக ஆட்சியில் நிறைவேற்றப்படும் நலத்திட்டங்களையும், உதவிகளையும் அடித்தட்டு மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் திறம்பட செயலாற்றி வருகிறார்.
கடந்த 2019-டிசம்பர் மாதம் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் கீழ அருணாசலபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு தனது துணைவியார் திருமதி.மகாலட்சுமி அவர்களை களமிறக்கி வெற்றிபெற வைத்துள்ளார். தொடர்ந்து அடித்தட்டு மக்களோடு பயணித்து, மக்களின் அபிமானத்தையும், அன்பையும் பெற்றவரான திரு.கண்ணன் மற்றும் திருமதி.மகாலட்சுமி தம்பதியினர், தொடர்ந்து அனைத்து மக்களுக்காகவும் பணியாற்றி சார்ந்துள்ள கட்சிக்கும், சமுதாயத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டுமாய் அன்புடன் வேண்டி வாழ்த்துகிறோம்.