🔴 LIVE | முப்பெரும் விழா 2023


ஊராட்சி மன்றத் தலைவர்-கமுதி.திருமதி.சுப்பம்மாள்

திருமதி.சுப்பம்மாள், அவர்கள் 1948-இல் இராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள மேலமுடிமன்னார்கோட்டை கிராமத்தில் திரு.நாகப்ப நாயக்கர்- திருமதி.அப்பக்கம்மாள் தம்பதியினருக்கு விவசாயக் குடும்பத்தில் மகளாகப் பிறந்தார். அதே ஊரைச்சேர்ந்த தன் தாய் மாமனும், கிராம முன்சீப்-புமான திரு.அப்பையா அவர்களை மணமுடித்துள்ள இத்தம்பதியினருக்கு திரு.A.சிவக்குமார்.M.Sc.,B.Ed., திரு.A.ராமச்சந்திரன்.D.Agri, திரு.சங்கரபாண்டியன்.M.Com, திரு.A.வீரபாண்டியன் மற்றும் திரு.M.R.A.K.சாமி.M.A.,(இவர் பற்றி மேலும் விபரங்களை அறிய நீலநிறத்திலுள்ள பெயரை க்ளிக் செய்யவும்)என ஐந்து மகன்களும் திருமதி.ராஜலட்சுமி.D.Pharm., திருமதி.பழனியம்மாள் என இரு மகள்களும் உள்ளனர்.


கிராம நிர்வாக அதிகாரி (விஎஓ) பதவி 1980-மத்தியில் தோற்றுவிக்கப்படும் முன், ஒவ்வொரு கிராமத்திலும் கிராம முன்சீப்-களின் கைகளிலேயே அதிகாரங்கள் குவிந்து கிடந்தன. கிராம முன்சீப் பதவி என்பது குட்டி ராஜக்கள் போன்ற அந்தஸ்துள்ள பதவி. அப்படிப்பட்ட கிராம முன்சீப் அவர்களின் துணைவியாராக கிராம மக்களின் மீது அதிகாரத்தை செலுத்தாமல், அன்பைப் பொழிந்தவர் திருமதி.சுப்பம்மாள் அவர்கள். கிராமத்திலுள்ள ஒவ்வொரு குடும்பத்திலும் கிராம முன்சீப் அவர்களின் குடும்பத்தின் பங்களிப்பு ஏதாவது ஒருவிதத்தில் பின்னிப்பிணைந்திருக்கும் என்பதை சற்று உற்றுநோக்கினால் அறியலாம். இயல்பாகவே கிராம மக்களின் குடிநீர், உணவு தானியங்கள், குழந்தைகளுக்கு பால், வறியவர்களுக்கு உணவு என ஏதாவது ஒரு ரூபத்தில் கிராம முன்சீப் அவர்களின் குடும்ப பங்களிப்பு கண்டிப்பாக இருந்திருக்கும்.தன் குழந்தைகளுக்கு மட்டுமல்ல ஊரார் வீட்டுக் குழந்தையையும் ஊட்டி வளர்த்த குடும்பத்தலைவியாகவே திருமதி.சுப்பம்மாள் அவர்களும் இருந்திருக்க முடியும் என்பதை யாரும் சொல்லித் தெரியவேண்டியதில்லை.


கிராம முன்சீப்-அவர்களின் துணைவியாராக தன் மட்டும் பொறுப்பானவராக இல்லாமல், தன் பிள்ளைகளையும் மிகச்சிறந்த கல்வியாளர்களாக, பொறுப்புமிக்க குடிமக்களாக, சமூக சேவகர்களாக வளர்த்து சமுதாயப்பெண்களுக்கு முன்னுதாரணமாக உள்ளார் திருமதி.சுப்பம்மாள் அவர்கள். தன்னுடைய பிள்ளைகள் பலரும் சமுதாயத்தில் அந்தஸ்துள்ள பதவிகளில் பல்வேறு இடங்களில் பணியாற்றும்பொழுதும், தாய்ப்பறவையின் முன் அனைவரும் ஒரு கூட்டுக்கிளியாக ஒரே கூட்டுக்குடும்பமாக வாழ்வது நவீன காலத்து தலைமுறையினர் கற்றுக்கொள்ள வேண்டிய பண்பு என்றால் மிகையல்ல. அந்தப்பண்பும், அரவணைப்பும் தான் மக்கள் மத்தியில் அந்தக்குடும்பத்திற்கு கௌரவத்தைப் பெற்றுத்தருகிறது என்பது நிதர்சனம்.

தாயாரின் அதே பண்பு நலன்களைப் பெற்றுள்ள பிள்ளைகளும், தங்கள் குடும்பத்தின் பாரம்பரியத்தைக் கைவிடாமல், தாங்களால் இயன்ற அளவில் பொதுநல சேவையில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தவகையில் தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறடி பாயும் என்ற சொல்லுக்கிணங்க திருமதி.சுப்பம்மாள் அவர்களின் குமாரன் திரு.சாமி அவர்கள் பல்வேறு பொதுநலப்பணிகளிலும், சமுதாயப்பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.


இளம் வயதிலிருந்தே குடும்ப பாரம்பரியத்தையும்,கௌரவத்தையும் கைவிடாது காப்பாற்றி வரும் திருமதி.சுப்பம்மாள் அவர்கள், 72-வயதிலும் அதை நிரூபித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தங்கள் குடும்பம் இன்றளவும் மக்களுக்கு சிறப்பான சேவையை வழங்கமுடியும் என்பதை நிரூபிக்கும் வகையில் கடந்த 2019-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில், மேலமுடி மன்னார்கோட்டை ஊராட்சி மன்றத்தலைவர் வேட்பாளராக களமிறங்கி மகத்தான வெற்றிபெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே சமூகப்பணிகளில் மிகவும் ஆர்வமுடன் பல்வேறு தளங்களில் சிறப்புடன் பணியாற்றி வரும் திரு.சாமி (இவர் பற்றி மேலும் விபரங்களை அறிய நீலநிறத்திலுள்ள பெயரை க்ளிக் செய்யவும்)அவர்கள், தாயார்.திருமதி.சுப்பம்மாள் அவர்களின் அதிகாரத்தையும், தன்னார்வ தொண்டு அமைப்புகளையும் இணைத்து சாதி.மதம், இனம்,மொழி கடந்து அனைத்து தரப்பினருக்கும் பணியாற்றி,அடிப்படைத்தேவைகளை நிறைவேற்றி, மேலமுடி மன்னார்கோட்டையை முன்மாதிரி ஊராட்சியாக மாற்றுவதுடன், வெளிப்படைத்தன்மையுடன் சிறந்த நிர்வாகத்தையும் மக்களுக்கு வழங்கி, சமுதாயத்திற்கு பெருமை சேர்த்திட வேண்டுமாய் அன்புடன் வேண்டி வாழ்த்துகிறோம்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved