🔴 LIVE | முப்பெரும் விழா 2023


ஒன்றியக்குழு உறுப்பினர் பொள்ளாச்சி - திருமதி.புவனேஷ்வரி சரவணகுமார்

திருமதி.புவனேஷ்வரி சரவணகுமார் அவர்கள் 1975-இல் கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகேயுள்ள நரசிங்காபுரம் கிராமத்தில் திரு.போகராஜ்-திருமதி.முத்துலட்சுமி தம்பதியினருக்கு விவசாயக் குடும்பத்தில் மகளாகப் பிறந்தார். மேல்நிலைப்பள்ளி வரை கல்வி பயின்றவர், பொள்ளாச்சி அருகேயுள்ள மண்ணூர் கிராமத்தைச் சேர்ந்த திரு. R. சரவணகுமார் அவர்களை மணமுடித்துள்ளார். 

திரு.சரவணகுமார் M.A., அவர்கள் 25.02.1972 ஆம் ஆண்டு கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள மண்ணூர் கிராமத்தில் தெய்வத்திரு K.ராமராஜ் – திருமதி.பொம்முக்கண்ணு தம்பதியினருக்கு விவசாயக் குடும்பத்தில் மகனாகப் பிறந்தார். திரு.சரவணகுமார் அவர்கள் பொள்ளாச்சியில் புகழ்பெற்ற N.G.M கல்லூரியில் பொருளாதாரத்தில் இளங்கலை (B.A.,)பட்டமும், கோவை அரசு கலை அறிவியல் கல்லூரியில் முதுகலைப் (M.A.,)பட்டமும் பெற்றார். திரு.சரவணகுமார்-திருமதி.புவனேஷ்வரி தம்பதியினருக்கு S.சரண் ரகுநந்தன் மற்றும் S.சியாம் நிர்மல் என்ற இரு மகன்களும் உள்ளனர். 


திரு.சரவணகுமார் தம்பதியினர் இருவரும் பாரம்பரியமிக்க குடும்ப பின்னணி கொண்டவர்கள். திரு.சரவணகுமார் அவர்களின் பாட்டனார் திரு.குப்புசாமி நாயக்கர் அவர்கள் பொள்ளாச்சி அருகேயுள்ள ஊஞ்சவேலாம்பட்டி கிராம முன்சீப்பாகவும், தந்தையார் திரு,இராமராஜ் அவர்கள் மண்ணூர் கிராம முன்சீப் ஆகவும், இரண்டு தலைமுறையாக முன்சீப்பாக இருந்தபடியால் பொள்ளாச்சி வட்டத்தில் மணியகாரர் குடும்பம் என்று அழைக்கப்பட்ட ஒருசில குடும்பங்களில் ஒன்று. அதேபோல் திருமதி.புவனேஷ்வரி அவர்கள் இராமபட்டிணம் ஜமீன் வம்சாவளியில் வந்த நரசிங்காபுரம் அரண்மனையார் பேத்தி ஆவார்.

திரு.சரவணகுமார் அவர்களின் குடும்பம் தீவிர திராவிட இயக்கப் பாரம்பரியத்தைக் கொண்டது. பாட்டனாரும், தகப்பனாரும் திமுக அடையாளத்துடன் இருந்தாலும், இவரது தாய்மாமன் கோவை மாவட்ட தி.மு.க-வில் கம்பளத்தாரின் முகமாகவும், தி.மு.கழகத்தின் ஆரம்பகால உறுப்பினராகவும், பொள்ளாச்சி பகுதியில் கழகத்திற்காக அர்ப்பணித்து வாழ்ந்தவருமான திரு.சு.பொம்முராசு அவர்களின் அரவணைப்போடு சிறுவதிலிருந்தே இயக்கப்பணிகளிலும், தேர்தல் பணிகளிலும், தி.மு.கழக பொதுக்கூட்டங்களுக்கும் அழைத்துச் செல்லப்பட்டு அரசியல் பயிற்றுவிக்கப்பட்டவர் திரு.சரவணகுமார் அவர்கள். தவிர, தந்தையார் திரு.இராமராஜ் அவர்கள் கிராம முன்சீப்பாக இருந்து  ஜாதி,மதங்களுக்கு அப்பாற்பட்டு சிறப்பாக பணியாற்றிய காரணத்தால், அனைத்து தரப்பு மக்களின் அன்பையும், ஆதரவையும் பெற்று 1986-இல் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் மண்ணுர் ஊராட்சி மன்றத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு 1988-இல் மறையும் வரை இரண்டாண்டுகள் பதவி வகித்தார். தாய்மாமனும்,தந்தையும் காட்டிய வழியில் அரசியல் பயணத்தை தொடர்ந்து வந்தவர், 1996 மற்றும் 2001 ஆண்டுகளில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் சகோதரரை களமிறக்கி வெற்றிவாகைசூடி சுமார் 10 ஆண்டுகள் ஊராட்சி மன்ற உறுப்பினராகப் பதவி வகிக்கச்செய்தார். இளம் வயதில் தந்தையாரை இழந்திருந்தாலும், கிராமத்தில் நிலவிய குடிநீர் தட்டுப்பாட்டைப்போக்க அரசு உயர்மட்ட டேங்க் அமைக்க 1990-களில் முன்வந்தபொழுது, தன் பொறுப்புணர்ந்து தன் சொந்த நிலத்தில் சிறுபகுதியை அரசுக்கு தானமாக வழங்கியுள்ளார் திரு.சரவணகுமார்.

2002-ஆம் ஆண்டு அ.இ.அ.தி.மு.க-வில் இணைத்துக்கொண்ட திரு.சரவணகுமார் அவர்கள், அடிப்படை உறுப்பினராக இருந்தபோதிலும் முன்கள வீரராகப் பணியாற்றி வந்தார். அதன்பின் அதிமுக கிளைக்கழக செயலாளராக பொறுப்பேற்றுக்கொண்டார். அதிமுக அரசின் அனைத்து மக்கள் நலத்திட்டங்களையும் மக்களுக்குப் பெற்றுக்கொடுத்துள்ளார். முதியோர் உதவித்தொகை, திருமண உதவித்தொகை, கிராமப்புற பொருளாதாரத்தை உயர்த்துவதற்காக அதிமுக அரசு கொண்டு வந்த ஆடு வளர்ப்பு திட்டத்தில் பயனாளிகளுக்கு பெற்றுதருதல், விவசாயிகளுக்கு உரமானியம், குடிமராமத்து பணியின்பொழுது விவசாய நிலங்களுக்கு வண்டல் மண், நூற்றுக்கணக்கான தென்னை விவசாயிகளுக்கு பூச்சிக்கொள்ளி மருந்து, மருந்து தெளிப்பான், தென்னையின் நடுவே ஊடுபயிராக மரக்கன்று சாகுபடி செய்தல், விவசாயிகளை ஒருங்கிணைத்து குழு அமைத்தல், கொப்பரை கொள்முதல்,பசுமை வீடு, மகளீர் சுய உதவிக் குழு மற்றும் ஆண்கள் சுய உதவிக்குழுக்களை உறுவாக்கி தலா ஒரு கோடி வரை கடன் பெற்று கொடுத்துள்ளார்.மேலும். கோயம்புத்தூர் தென்னை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் இயக்குனராகவும் உள்ள திரு.சரவணகுமார் 1000 க்கும் மேற்பட்ட விவசாயிகளை சங்கத்தின் உறுப்பினர்களாக சேர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தனது முதல் தேர்தலை 2006-ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலின் பொழுது சந்தித்து, ஊராட்சி மன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர், மீண்டும் 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலிலும் போட்டியிட்டு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். பத்தாண்டுகால ஊராட்சி மன்ற உறுப்பினராக பல்வேறு வளர்ச்சிப்பணிகளை மேற்கொண்டு வந்துள்ளார். மண்ணூர் ஊராட்சியை ஒரு தன்னிறைவு பெற்ற முன்மாதிரி ஊராட்சியாக கட்டமைத்ததில் முக்கிய பங்காற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இதன் தொடர்ச்சியாக கடந்த 2019- டிசம்பர் மாதம் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் மூன்றாவது முறையாக ஊராட்சி மன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் திரு.சரவணகுமார் அவர்கள். மேலும் இவரது துணைவியார் திருமதி.புவனேஷ்வரி அவர்களை பொள்ளாச்சி வடக்கு ஊராட்சி ஒன்றியத்தின் 8-ஆவது வார்டு ஒன்றியக்குழு உறுப்பினர் வேட்பாளராக அஇஅதிமுக-வின் சார்பில் களமிறக்கி மகத்தான வெற்றி பெறச்செய்துள்ளார். தலைமுறை, தலைமுறையாக தொடர்ந்து மக்கள் பணியில் ஈடுபட்டு வரும் திரு.சரவணகுமார் தம்பதியினர், இப்புதிய பொறுப்பின் மூலம் சாதி, மதம், இனம், மொழி பாகுபாடின்றி அனைவருக்கும் பணியாற்றி வாய்ப்பளித்த கட்சிக்கும், சமுதாயத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டுமாய் வேண்டி வாழ்த்துகிறோம்.


  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved