ஊராட்சி மன்றத் தலைவர் - ஆண்டிபட்டி - திரு.T.பழனிசாமி
திரு.T.பழனிசாமி அவர்கள் 1970 - இல் தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகேயுள்ள மேலமஞ்சிநாயக்கன்பட்டி கிராமத்தில் திரு.தேவர் பொம்மி நாயக்கர் – திருமதி. தென்னம்மாள் தம்பதியினருக்கு விவசாயக் குடும்பத்தில் மகனாகப் பிறந்தார். தொடக்கக்கல்வி வரை பயின்றுள்ளவருக்கு திருமணமாகி திருமதி.P.சரோஜா என்ற மனைவியும் P.பழனிக்குமார்,P.சரவணகுமார் என்ற இரு மகன்களும் P.குணவள்ளி, P.சண்முகவள்ளி என்ற இருமகள்களும் உள்ளார்.
தி.மு.கழகத்தில் தனது 20 வயது முதல் இணைந்து தீவிரமாக பணியாற்றி வரும் திரு.பழனிசாமி அவர்கள், கிளைக்கழக பிரதிநிதியாக நீண்டவருடங்களாக இருந்து வருகிறார். தவிர மலைமாடு வளர்ப்போர் சங்கத்தின் தலைவராக ஐந்தாண்டுகாலம் பதவி வகித்துள்ளவர், தற்பொழுது அதன் உபதலைவராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கழக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட மக்கள் நலத்திட்டங்களையும், உதவிகளையும் அடித்தட்டு மக்களிடம் கொண்டு சேர்த்தவர் திரு.பழனிசாமி அவர்கள். உள்ளூர் மக்களுக்குத் தேவையான உதவிகளை மனமுவந்து செய்துகொடுப்பவர், அம்மக்களின் கோரிக்கைகளை நிர்வாகத்திடம் முன்வைத்து தீர்வுகாண உழைத்து வருகிறார். மேலும் மக்களின் சுக-துக்கங்களில் முன்னின்று பங்கெடுத்துக்கொள்பவர், உள்ளூர் நிகழ்வுகள், விஷேசங்கள் அனைத்திலும் முக்கியப்பொறுப்பேற்று நடத்திய வருகிறார் திரு. பழனிச்சாமி அவர்கள்.
கடந்த 2019-டிசம்பர் மாதம் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் ராஜதானி ஊராட்சி மன்றத் தலைவர் வேட்பாளராக முதல்முறையாக தேர்தல் களம்கண்டு வெற்றி பெற்றுள்ளார். மிக எளிய மனிதராகவும், உயர்ந்த பண்புள்ளவராகவும் விளங்கும் திரு.பழனிசாமி அவர்கள், இப்புதிய பொறுப்பின் மூலம் சாதி, மதம், இனம், மொழி கடந்து அனைத்து தரப்பு மக்களுக்கும் சிறப்பாக செயல்பட்டு சார்ந்துள்ள கட்சிக்கும், சமுதாயத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டி அன்புடன் வாழ்த்துகிறோம்..