ஒன்றியக்குழு உறுப்பினர் - அரவக்குறிச்சி. திரு.P.சின்னசாமி.
திரு.P.சின்னசாமி அவர்கள், 12.02.1974-இல் கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகேயுள்ள புதுப்பட்டி கிராமத்தில் திரு.பிச்சைமுத்து – திருமதி.பொம்மாயி அம்மாள் தம்பதியினருக்கு விவசாயக் குடும்பத்தில் மகனாகப்பிறந்தார். உயர்நிலைப்பள்ளி வரை கல்வி பயின்றவர் பின் பெற்றோர்களுக்கு ஆதரவாக விவசாயப்பணிக்கு திரும்பினார். இவருக்கு திருமணமாகி திருமதி.C.ஜோதிமணி என்ற மனைவியும் C.ரமேஷ் மற்றும் C.தானப்பிரகாஷ் என்ற இருமகன்களும் உள்ளனர்.
இளம்வயதிலேயே அஇஅதிமுக-ஆதரவாளராக இருந்தவர், தீவிர அரசியலில் ஈடுபடாமல் அடிப்படை உறுப்பினராகவே இருந்தார். 2000-ஆவது ஆண்டு முதல் தீவிர அரசியலுக்கு வந்தவர், அரவக்குறிச்சி ஒன்றிய இளைஞரணி செயலாளராக நியமிக்கப்பட்டார். 2005-ஆம் ஆண்டுவரை அப்பதவியில் தொடர்ந்தவர், கட்சிப்பணிகளில் தீவிரமாக செயல்பட்டார். திரு.சின்னசாமி அவர்கள் இளைஞரணி செயலாளராகப் பதவி வகித்த காலத்தில் ,கட்சி அதிகாரத்தில் இருந்தபடியால், அரசின் பல்வேறு திட்டங்களை மக்களுக்கு கொண்டு சேர்த்தார். மேலும் தன்னை நாடி வரும் பொதுமக்களுக்கு குடும்ப அட்டை, பட்டா மாறுதல், இலவச மிக்சி-கிரைண்டர் கிடைக்க வழிவகை செய்தார்.
தீவிர அரசியலில் சுமார் 20 ஆண்டுகாளமாக இருந்தாலும் தேர்தல் அரசியல் பக்கம் ஆர்வம் காட்டாதவர், கடந்த 2019-டிசம்பர் மாதம் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் அரவக்குறிச்சி ஒன்றியம் 4-ஆவது வார்டு ஒன்றியக்குழு உறுப்பினர் தேர்தலில் அஇஅதிமுக வேட்பாளராகப்போட்டியிட்டு மகத்தான வெற்றி பெற்றுள்ளார். 20 ஆண்டுகால அரசியல் அனுபவம் வாய்ந்த திரு.சின்னசாமி அவர்கள் முதல்முறையாக தேர்தல் களம் கண்டு வெற்றிவாகை சூடியுள்ளவர், தனக்கு கிடைத்த இந்த வாய்ப்பை சிறந்த முறையில் பயன்படுத்தி, சாதி,மதம்,மொழி,இன பாகுபாடின்றி, அனைவருக்குமான ஒன்றியக் கவுன்சிலராகப்பணியாற்றி, வாய்ப்பளித்த கட்சிக்கும், சமுதாயத்திற்கும் பெருமை சேர்த்திடுமாறு அன்புடன் வேண்டி வாழ்த்துகிறோம்.