ஊராட்சி மன்றத் தலைவர்- ஆண்டிப்பட்டி-திரு.B.பன்னீர்செல்வம்
திரு.B.பன்னீர்செல்வம் அவர்கள் 20.05.1956 - இல் தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகேயுள்ள தெப்பம்பட்டி கிராமத்தில் திரு.பொம்மைய நாயக்கர் – திருமதி. ஜக்கம்மாள் தம்பதியினருக்கு விவசாயக் குடும்பத்தில் மகனாகப் பிறந்தார். மதுரை வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில் புதுமுக வகுப்பு (PUC) வரை பயின்றுள்ளார். இவருக்கு திருமணமாகி திருமதி.P.செந்தாமரைச்செல்வி என்ற மனைவியும் P.ஜீவலதா,P.ஜனனி மற்றும் P.வினோதினி என்ற மூன்று மகள்களும் உள்ளார்.
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் தீவிர இரசிகராக இருந்து, அ.தி.மு.கழகத்தை 1977-இல் எம்.ஜி.ஆர் அவர்கள் துவங்கிய காலத்திலிருந்து நாற்பதாண்டு காலத்திற்கும் மேலாக உறுப்பினராக உள்ள பெருமைக்குறியவர் திரு.பன்னீர்செல்வம் அவர்கள். ஆண்டிபட்டி ஒன்றிய அவைத்தலைவராக கடந்த சில வருடங்களாக பொறுப்பு வகித்து வரும் திரு.பன்னீர்செல்வம் அவர்கள், இதற்கு முன் ஒன்றிய விவசாய அணித் தலைவராக சுமார் ஏழாண்டுகாலம் பதவி வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 1986-ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித்தேர்தலில் முதல்முதலாக தெப்பம்பட்டி ஊராட்சி மன்றத்தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டவர், அதனைத் தொடர்ந்து, 1996 மற்றும் 2001 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற உள்ளாட்சி மன்றத் தேர்தல்களிலும் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதின் மூலம், தொடர்ந்து மூன்றுமுறை போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட பெருமைக்கூறிய அந்தஸ்தைப் பெற்றவர் திரு.பன்னீர் செல்வம் அவர்கள். எனவே, தெப்பம்பட்டி ஊராட்சியின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் ஒரே காரணகர்த்தாவான திரு.பன்னீர்செல்வம் அவர்கள், அவ்வூராட்சியின் அடிப்படைத் தேவைகளான குடிநீர் வசதி, தெருவிளக்குகள், சாலை வசதி, சுகாதார கழிப்பிட வசதி, மயானப்பாதை மற்றும் தகனமேடை, நிழல்கொடை, சாக்கடை வசதி, அங்கன்வாடி, பள்ளிக்கட்டிடம், சுற்றுச்சுவர் போன்ற பல்வேறு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். மேலும், ஏழை-எளியவர்களுக்கு பசுமை வீடுகள், தொகுப்பு வீடுகள், முதியோர் உதவித்தொகை, விவசாய மானியம், இலவச ஆடு என அனைத்து நலத்திட்டங்களையும் செம்மையாக நிறைவேற்றியுள்ளார்.
2006-ஆம் ஆண்டு முதல் தெப்பம்பட்டி ஊராட்சி பட்டியலின மக்களுக்கு ஒதுக்கப்பட்டதால் ஆண்டிப்பட்டி ஒன்றியக்குழு உறுப்பினர் தேர்தலில் அதிமுகழக வேட்பாளராக களமிறங்கி வெற்றி பெற்று ஆண்டிப்பட்டி ஒன்றிய துணைப்பெருந் தலைவராகவும் பொறுப்பு வகித்தார். அப்பதவியிலும் சிறப்பாக செயல்பட்டு மக்களின் மனங்களை வென்ற திரு.பன்னீர்செல்வம் அவர்கள், மீண்டும் 2011 –ஆம் ஆண்டு மீண்டும் ஒன்றியக்குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒன்றியக்குழு உறுப்பினர் நிதியின் மூலம் பல்வேறு கிராமங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்திக் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2019-டிசம்பர் மாதம் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் மீண்டும் தெப்பம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் வேட்பாளராக நான்காவது முறையாக களமிறங்கினார். இம்முறை தேர்தல் களம்கண்டு வெற்றி பெற்றுள்ளார். நீண்ட நெடிய அரசியல் வாழ்க்கைக்கு சொந்தக்காரரான திரு.பன்னீர்செல்வம் அவர்கள், மிக எளிய மனிதராகவும், உயர்ந்த பண்புள்ளவராகவும் இளைய தலைமுறைக்கும், சமுதாயத்திற்கும் வழிகாட்டியாக உல்ளார்.பதவிகளால் தொடர்ந்து அலங்கரிக்கப்பட்டு வரும் திரு.பன்னீர்செல்வம் அவர்கள், சாதி, மதம், இனம், மொழி கடந்து அனைத்து தரப்பு மக்களுக்கும் சிறப்பாக செயல்பட்டு சார்ந்துள்ள கட்சிக்கும், சமுதாயத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டி அன்புடன் வாழ்த்துகிறோம்.