ஊராட்சி மன்றத் தலைவர் - ஆண்டிபட்டி - திருமதி.செல்லமணி மகாலிங்கம்.
திருமதி.M.செல்லமணி அவர்கள் 1977- இல் தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகேயுள்ள மரிக்குண்டு கிராமத்தில் திரு.தேவர்சாமி – திருமதி.வேலுத்தாய் தம்பதியினருக்கு விவசாயக்குடும்பத்தில் மகளாகப் பிறந்தார். திரு.M.மகாலிங்கம் அவர்களை திருமணம் மணமுடித்துள்ளார்.
திரு.M.மகாலிங்கம் அவர்கள் 1970 - இல் தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகேயுள்ள மரிக்குண்டு கிராமத்தில் திரு.முத்தால்சாமி நாயக்கர் – திருமதி.லட்சுமி அம்மாள் தம்பதியினருக்கு விவசாயக்குடும்பத்தில் மகனாகப் பிறந்தார். தொடக்கப்பள்ளிவரை பயின்றவர், ஒப்பந்ததாரராக பணியாற்றி வருகிறார். திரு.மகாலிங்கம் – திருமதி. செல்லமணி தம்பதியினருக்கு M.கோடிராஜ் என்ற மகனும் M.முருகலட்சுமி, M.அஞ்சலி என்ற இருமகளும் உள்ளனர்.
தனது இளைமைக்காலம் முதற்கொண்டு தி.மு.கழகத்தின் ஆதரவாளராக வளர்ந்த திரு.மகாலிங்கம் அவர்கள் பதினெட்டாவது வயதில் தி.மு.க-வில் அடிப்படை உறுப்பினராக இணைந்து தீவிரமாகப் பணியாற்றி வருகிறார். அதன்பின் தி.மு.கழகத்தில் ஊராட்சிக்கழக செயலாளராகவும், தற்பொழுது கிளைக்கழக செயலாளராக பணியாற்றி வருகிறார். தி.மு.கழக உறுப்பினராலும் கூட, எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும், அரசின் மக்கள் நலத்திட்டங்கள், இலவச உதவிகள், போன்றவற்றை அடித்தட்டு மக்களுக்குப் பெற்றுத்தந்திருக்கிறார். அத்துடன் கிராமத்திற்கு தேவையான வளர்ச்சித்திட்டங்களை பெற்றுக்கொடுப்பதுடன், அடிப்படைக்கட்டமைப்பை மேம்படுத்த உதவியுள்ளார். தவிர உள்ளூரில் அனைத்து முக்கிய நிகழ்விலும் மக்களின் சுக, துக்கங்களிலும் கலந்து கொண்டு மக்களோடு மக்களாக, மக்கள் எளிதில் அணுகும் அரசியல் தலைவராக இருந்து வருகிறார் திரு.மகாலிங்கம்அவர்கள்.
2011-ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித்தேர்தலில் முதல்முறையாக தேர்தல் களத்தை சந்தித்தவர், தனது துணைவியாரை ஊராட்சிமன்றத் தலைவர் வேட்பாளராகக் களமிறக்கி வெற்றி வாய்ப்பை இழந்தார். ஆனாலும் தொடர்ந்து அரசியல் களத்திலும் , பொதுமக்கள் சேவையிலும் அக்கரை கொண்டு செயல்பட்டு வந்த திரு.மகாலிங்கம் அவர்கள், கடந்த 2019-டிசம்பர் மாதம் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் ஆண்டிப்பட்டி ஒன்றியம் மரிக்குண்டு ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு தன் துணைவியார் திருமதி.செல்லமணி அவர்களை வேட்பாளராகக் களமிறக்கி வெற்றிபெறச் செய்துள்ளார். இப்புதிய பொறுப்பின் மூலம் திரு.மகாலிங்கம் – திருமதி. செல்லமணி தம்பதியினர் சாதி,மத,இன, மொழி பாகுபாடின்றி அனைத்து தரப்பு மக்களுக்கும் சேவையாற்றி, சார்ந்திருக்கும் கட்சிக்கும், சமுதாயத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டுமாய் அன்புடன் வேண்டி வாழ்த்துகிறோம்.