ஒன்றியக்குழு உறுப்பினர் - ஆண்டிபட்டி - திரு.D.முருகன்
திரு.D.முருகன் அவர்கள் 04.06.1988- இல் தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகேயுள்ள T.அழகாபுரி கிராமத்தில் திரு.துரையன்– திருமதி. விஜயா தம்பதியினருக்கு விவசாயக் குடும்பத்தில் மகனாகப் பிறந்தார். மதுரை காமராஜர் பல்கலைக்கழக கல்லூரியில் எலக்ட்ரிகல்ஸ் & எலக்ட்ரானிக்ஸ் துறையில் இளங்கலை அறிவியல் (B.Sc.,) பட்டம் பெற்றுள்ளார். இவர் தற்பொழுது அழகாபுரியில் ஜெராக்ஸ் மற்றும் செல்போன் கடை நடத்தி வருகிறார்.
கேப்டன்.விஜயகாந்த் அவர்களின் தீவிர இரசிகரான திரு.முருகன், கல்லூரி மாணவராக இருந்தபொழுதிலிருந்து கேப்டன் இரசிகர் மன்றத்தில் இருந்து வருகிறார். 2005-இல் தே.மு.தி.க உதயமானதிலிருந்து அடிப்படை உறுப்பினராக இருந்துவரும் திரு.முருகன் அவர்கள், கடந்த நான்கு வருடங்களாக ஆண்டிப்பட்டி ஒன்றிய தே.மு.தி.க. துணைச்செயலாளராக பணியாற்றி வருகிறார். சமுதாயப்பணிகளில் அதிக ஈடுபாடுள்ள திரு.முருகன், த.வீ.க.ப.கழகத்தின் ஒன்றிய அவைத்தலைவராக இருந்து மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனின் பிறந்தநாளை படுவிமர்சையாக கொண்டாடுவதின் மூலம் அப்பகுதி மக்களின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்தவர். எதிலும் துடிப்புடனும், ஆர்வத்துடனும் செயல்படும் திரு.முருகன், சமுதாயம் சர்ந்த விசயங்களில் அதிக முக்கியத்துவம் கொடுக்கும் அதேவேளையில், அடித்தட்டு மக்களின் தேவைகளுக்கும், கோரிக்கைகளுக்கும் உடனடியாக களமிறங்கி நிறைவேற்றுவதின் மூலம் அனைத்து தரப்பு மக்களின் அன்பைப்பெற்றவர் திரு.முருகன். மேலும் மக்களின் சுக-துக்கங்களில் முன்னின்று பங்கெடுத்துக் கொள்பவர், உள்ளூர் நிகழ்வுகள், விஷேசங்கள் அனைத்திலும் முக்கிய பங்காற்றி வருகிறார்.
கடந்த 2019-டிசம்பர் மாதம் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் ஆண்டிப்பட்டி ஒன்றியம் 19-ஆவது வார்டு ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு தே.மு.தி.க வேட்பாளராகக் களம்கண்டு வெற்றி பெற்றுள்ளார். இளம் அரசியல்வாதியான திரு.முருகன் அவர்கள், இப்புதிய பொறுப்பில் சாதி, மதம், இனம், மொழி கடந்து அனைத்து தரப்பு மக்களுக்கும் சிறப்பாக செயல்பட்டு சார்ந்துள்ள கட்சிக்கும், சமுதாயத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டி அன்புடன் வாழ்த்துகிறோம்..