ஒன்றியக்குழு உறுப்பினர் - ஆண்டிப்பட்டி - திருமதி.S.கிருஷ்ணம்மாள்
திருமதி.S.கிருஷ்ணம்மாள் அவர்கள் 1965-இல் தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகேயுள்ள இராஜக்காள்பட்டி கிராமத்தில் திரு.பெருமாள் நாயக்கர் – திருமதி.போலம்மாள் தம்பதியினருக்கு விவசாயக்குடும்பத்தில் மகளாகப் பிறந்தார். திரு.E.செல்வராஜ் அவர்களை திருமணம் மணமுடித்துள்ளார்.
திரு.E.செல்வராஜ் அவர்கள் 1958- இல் தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகேயுள்ள இராஜக்காள்பட்டி கிராமத்தில் திரு.எர்ரம நாயக்கர் – திருமதி.பொன்னம்மாள் தம்பதியினருக்கு விவசாயக்குடும்பத்தில் மகனாகப் பிறந்தார். உயர்நிலைப்பள்ளிவரை பயின்றவர் விவசாயப்பணியில் ஈடுபட்டு வருகிறார். திரு.செல்வராஜ் – திருமதி. கிருஷ்ணம்மாள் தம்பதியினருக்கு S.பாக்கியராஜ் என்ற மகனும் S.கயல்விழி, S.இராஜலட்சுமி என்ற இருமகளும் உள்ளனர்.
இளமையிலிருந்தே புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களின் இரசிகராக இருந்தவர், 1977-இல் அ.தி.மு.கழகம் துவங்கியபொழுது அடிப்படை உறுப்பினராக இணைத்துக்கொண்டு, இராஜக்காள்பட்டி கிளைக்கழக செயலாளராக முப்பதாண்டுகாலத்திற்கும் மேலாக பணியாற்றியுள்ளார். தற்பொழுது ஆண்டிப்பட்டி ஒன்றிய எம்.ஜி.ஆர் மன்றச்செயலாளராக கடந்த இரண்டு வருடங்களாக பணியாற்றி வருகிறார். கழக ஆட்சியில் நிறைவேற்றப்படும் அனைத்து வளர்ச்சி திட்டங்களையும் சீரிய முறையில் இராஜக்காள்பட்டி ஊராட்சியில் நிறைவேற்றிட உறுதுணையாக இருக்கும் திரு.செல்வராஜ் அவர்கள், அடித்தட்டு மக்களுக்கு வழங்கப்படும் மிக்சி, கிரைண்டர், இலவச ஆடுகள், விவசாய மானியம், வங்கிக்கடன் முழுதும் பயனாளிகளுக்கு சென்றடைய உதவிவருகிறார். மேலும் 1982-முதல் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தின் தலைவராக தொடர்ந்து பொறுப்பு வகித்துவரும் திரு.செல்வராஜ் அவர்கள், தேனி மாவட்ட ஆவின் இயக்குனராகவும் பொறுப்புவகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. உள்ளூரில் அனைத்து முக்கிய நிகழ்விலும் மக்களின் சுக, துக்கங்களிலும் கலந்து கொண்டு மக்களோடு மக்களாக, மக்கள் எளிதில் அணுகும் அரசியல் தலைவராக இருந்து வருகிறார் திரு.செல்வராஜ் அவர்கள்.
2001-ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் முதல்முறையாக தேர்தல் களத்தை சந்தித்த திரு.செல்வராஜ் அவர்கள் ஆண்டிப்பட்டி ஒன்றியம் 18-ஆவது வார்டு ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு அதிமுகழக வேட்பாளராக போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.இதனைத்தொடர்ந்து 2001-முதல் 2006 வரை ஆண்டிப்பட்டி ஒன்றிய துணைப்பெருந்தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். மீண்டும் கடந்த 2019-இல் டிசம்பர் மாதம் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில், தனது துணைவியார் திருமதி.கிருஷ்ணம்மாள் அவர்களை ஆண்டிப்பட்டி ஒன்றியம் 19-ஆவது வார்டு ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு அஇஅதிமுக சார்பில் களமிறக்கி வெற்றிபெறச் செய்துள்ளார். இப்புதிய பொறுப்பின் மூலம் திரு.செல்வராஜ் – திருமதி.கிருஷ்ணம்மாள் தம்பதியினர் சாதி,மத,இன, மொழி பாகுபாடின்றி அனைத்து தரப்பு மக்களுக்கும் சேவையாற்றி, சார்ந்திருக்கும் கட்சிக்கும், சமுதாயத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டுமாய் அன்புடன் வேண்டி வாழ்த்துகிறோம்.