ஊராட்சி மன்றத் தலைவர் - க.மயிலாடும்பாறை - திருமதி.B.இராஜாத்தி பால்ச்சாமி
திருமதி.B.இராஜாத்தி அவர்கள் 1977- இல் தேனி மாவட்டம், க.மயிலாடும்பாறை அருகேயுள்ள வேலாயுதபுரம் கிராமத்தில் திரு.தேவர்சாமி – திருமதி.வேலுத்தாய் தம்பதியினருக்கு விவசாயக்குடும்பத்தில் மகளாகப் பிறந்தார். தொடக்கப்பள்ளி வரை பயின்றுள்ளவர், திரு.V.பாலுச்சாமி அவர்களை திருமணம் மணமுடித்துள்ளார்.
திரு.V.பால்ச்சாமி அவர்கள் 31.01.1959-இல் தேனிமாவட்டம் க.மயிலாடும்பாறை அருகேயுள்ள வேலாயுதபுரம் கிராமத்தில் திரு.வேலுச்சாமி நாயக்கர் – திருமதி.சுப்புலட்சுமி தம்பதியினருக்கு மகனாகப்பிறந்தார். நடுநிலைப்பள்ளி வரை கல்வி பயின்றுள்ளார். “VENKOB” என்ற பெயரில் பிராயலர் வியாபாரத்திலும், கோழி வளர்ப்பிலும் ஈடுபட்டு வருகிறார். திரு.பாலுச்சாமி-திருமதி. இராஜாத்தி தம்பதியினருக்கு, B.சுப்புலட்சுமி என்ற மகளும், B.பாபுராஜ் என்ற மகனும் உள்ளனர்.
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் தீவிர இரசிகராக இருந்து, அ.தி.மு.கழகத்தை 1977-இல் எம்.ஜி.ஆர் அவர்கள் துவங்கிய காலத்திலிருந்து, முப்பதாண்டு காலத்திற்கும் மேலாக கிளைக்கழக செயலாளராக பணியாற்றிய பெருமைக்குறிய திரு.பால்ச்சாமி அவர்கள், இளைஞர்களிடம் கட்சிப்பொறுப்பை ஒப்படைத்துவிட்டு சாதாரண தொண்டராகவே இருந்து வருகிறார். கழக ஆட்சியில் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள், வளர்ச்சிப் பணிகளை சொந்த கிராமத்திற்கும் மக்களுக்கு கொண்டு செல்வதில் வல்லவரான திரு.பாலுச்சாமி அவர்கள், முதியோர் ஓய்வூதியம், குடும்ப அட்டை, பட்டா மாற்றம், விவசாயிகளுக்கு நிவாரணம் போன்றவற்றையும் பெற்றுக் கொடுத்துள்ளார். மேலும், உள்ளூர் மக்களின் அனைத்து தேவைகளையும், உதவிகளையும் தன்னாலான அளவில் நிறைவேற்றிக் கொடுத்து மக்களின் அன்பைப் பெற்றவர் திரு.பால்ச்சாமி அவர்கள்.
கடந்த 2019-டிசம்பர் மாதம் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் எட்டையராஜபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு முதல்முறையாக தனது துணைவியார் திருமதி.இராஜாத்தி அவர்களை களமிறக்கி வெற்றி பெறச்செய்துள்ளார். நீண்ட காலம் அரசியலிலும், பொதுப்பணியிலும் ஈடுபட்டு வரும் திரு.பால்ச்சாமி எளிய மனிதராகவும், பண்புள்ளவராகவும், இளைய தலைமுறைக்கும், சமுதாயத்திற்கும் வழிகாட்டியாக உள்ளார். இப்புதிய பொறுப்பில் திரு.பாலுச்சாமி-திருமதி. இராஜாத்தி தம்பதியினர், சாதி, மதம், இனம், மொழி கடந்து அனைத்து தரப்பு மக்களுக்கும் சிறப்பாக செயல்பட்டு சார்ந்துள்ள கட்சிக்கும், சமுதாயத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டி அன்புடன் வாழ்த்துகிறோம்..