ஊராட்சி மன்றத் தலைவர்- ஆப்பக்கூடல்.திருமதி.சென்னம்மாள் பழனிச்சாமி
திருமதி.சென்னம்மாள் பழனிச்சாமி அவர்கள் 1966-ஆம் ஆண்டு ஈரோடு மாவட்டம், பவானி தாலுகா, சித்தோடு அருகேயுள்ள வளையக்காரன்பாளையம் கிராமத்தில் திரு.போத்த நாயக்கர் – திருமதி.ரங்கம்மாள் தம்பதியினருக்கு விவசாயக் குடும்பத்தில் மகளாகப் பிறந்தார். தொடக்கக் கல்விவரை பயின்றுள்ளவர், ஆப்பக்கூடல் அருகேயுள்ள செட்டிகுட்டையைச் சேர்ந்த திரு.B.பழனிச்சாமி (இவர் பற்றி மேலும் விபரங்களை அறிய நீலநிறத்திலுள்ள பெயரை க்ளிக் செய்யவும்)அவர்களை மணமுடித்துள்ள இத்தம்பதிக்கு, P.தேவராஜ் மற்றும் Er.P.சரண்ராஜ்.B.E., என்ற இருமகன்களும், P.கங்காதேவி என்ற மகளும் உள்ளனர்.
சுமார் 38-ஆண்டுகளுக்கு மேலாக அஇஅதிமுக-வில் கிளைக்கழக செயலாளராக திரு.பழனிசாமி அவர்கள் இருந்தாலும், தீவிர கட்சிப்பணியிலோ அல்லது பொதுநலப்பணியிலோ அதிக ஈடுபாடு கொண்டவரல்ல. எனவே திருமதி.சென்னம்மாள் அவர்களுக்கு சாதாரண குடிமகனுக்குண்டான அரசியல் புரிதல் மட்டுமே உண்டு. ஆனால் விவசாயப்பணியிலும், செங்கள் சூளைப்பணியிலும் முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டவராதலால், அடித்தட்டு மக்களின் கஷ்ட-நஷ்டங்களை முழுமையாக அறிந்தவர் திருமதி.சென்னம்மாள் அவர்கள்.
கட்சிப்பணிகளில் மட்டும் தேர்தல் காலங்களில் பணியாற்றிவிட்டு, அதிகார பதவியே வேண்டாம் என்று நீண்ட நாட்களாக ஒதுங்கியிருந்த திரு.பழனிச்சாமி அவர்களை, கடந்த 2019-டிசம்பர் மாதம் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில், புண்ணம் ஊராட்சியை கழகத்திற்கு வென்றுகொடுக்க கட்சியிட்ட கட்டளயைத் தொடர்ந்து, மகளிருக்கு ஒதுக்கப்பட்ட அந்த ஊராட்சியில், தன் கணவர் திரு.பழனிச்சாமி(இவர் பற்றி மேலும் விபரங்களை அறிய நீலநிறத்திலுள்ள பெயரை க்ளிக் செய்யவும்)அவர்களுக்கு கட்சியில் பெருமை சேர்க்கும் பொருட்டு, திருமதி.சென்னம்மாள் அவர்கள் ஊராட்சி மன்றத் தலைவர் வேட்பாளராக போட்டியிட்டு மகத்தான வெற்றிவாகை சூடியுள்ளார். நீண்ட காலமாக விவசாயப்பணியிலும், சூளைப்பணியிலும் இருந்தவர் திருமதி.சென்னம்மாள் பழனிச்சாமி தம்பதியினர், அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை நேரடியாக தினந்தேறும் பார்ப்பவர்கள். எனவே தானாக தேடிவந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி, தங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு ஜாதி,மத,இனம்,மொழி பாகுபாடின்றி அனைவருக்கும் சிறப்பான முறையில் சேவையாற்றி, வாய்ப்பளித்த கட்சிகும், சமுதாயத்திற்கும் பெருமை சேர்த்திட அன்புடன் வேண்டி வாழ்த்துகிறோம்.