ஊராட்சி மன்றத் தலைவர் - ஆண்டிபட்டி - திருமதி.S.ரம்யா சிவரங்கு

திருமதி.S.ரம்யா அவர்கள் 1995-இல் தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகேயுள்ள சித்தார்பட்டி கிராமத்தில் திரு.தங்கவேல்சாமி - திருமதி.தனபதி தம்பதியினருக்கு விவசாயக் குடும்பத்தில் மகளாகப் பிறந்தார். தொடக்கக் கல்வி வரை பயின்றுள்ளவர், அதே ஊரைச் சேர்ந்த திரு.சிவரங்கு அவர்களை மணமுடித்துள்ளார்.
திரு.P.சிவரங்கு அவர்கள் 25.05.1984-இல் தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகேயுள்ள சித்தார்பட்டி கிராமத்தில் திரு.பொன்னுசாமி - திருமதி.இராஜாமணி தம்பதியினருக்கு விவசாயக் குடும்பத்தில் மகனாகப் பிறந்தார். உயர் நிலைப்பள்ளி வரை கல்வி பயின்றவனரான திரு.சிவரங்கு அவர்கள் விவசாயப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். திரு.சிவரங்கு – திருமதி.ரம்யா தம்பதியினருக்கு S.கீர்த்திகாஸ்ரீ, S.விபினாஸ்ரீ என்ற இரு மகள்கள் உள்ளனர்.
காங்கிரஸ் பாரம்பரிய குடும்பத்திலிருந்து பொதுவாழ்க்கைக்கு வந்தவரான திரு.சிவரங்கு அவர்களின் தகப்பனார் திரு.பொன்னுசாமி அவர்கள், கிராம காங்கிரஸ் கமிட்டித் தலைவராக பொறுப்பு வகித்துள்ளார். திரு.சிவரங்கு அவர்கள் ஆண்டிப்பட்டி ஒன்றிய காங்கிரஸ் செயற்குழு உறுப்பினராக உள்ளார். அரசியலில் அதிக ஆர்வமுள்ள இளைஞரான திரு.சிவரங்கு அவர்கள், உள்ளூர் மக்களின் சுக-துக்கங்களில் முதன்மையானவராக கலந்து கொண்டு சமூக சேவையாற்றி வருகிறார்.
கடந்த 2019-டிசம்பர் மாதம் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில், தனது துணைவியார் திருமதி.ரம்யா அவர்களை சித்தார்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் வேட்பாளராகக் களமிறக்கி மகத்தான வெற்றி பெற்றுள்ளார். வளர்ந்து வரும் இளம் அரசியல் தலைவரான திரு.சிவரங்கு தம்பதியினர், இப்புதிய பொறுப்பின் மூலம் சாதி, மத, இன,மொழி வேறுபாடின்றி அனைத்து தரப்பு மக்களுக்கும் பணியாற்றி வெற்றிகளைக் குவித்து, வாய்ப்பளித்த மக்களுக்கும், சமுதாயத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டுமாய் அன்புடன் வேண்டி வாழ்த்துகிறோம்.