அரசியல் வானில் ஒளிரும் நட்சத்திரம்-ஆப்பக்கூடல் திரு.B.பழனிச்சாமி
திரு.B.பழனிச்சாமி அவர்கள் 1962-ஆம் ஆண்டு ஈரோடு மாவட்டம், பவானி தாலுகா, ஆப்பக்கூடல் அருகேயுள்ள செட்டிகுட்டை கிராமத்தில் திரு.பொம்மநாயக்கர் – திருமதி.மல்லம்மாள் தம்பதியினருக்கு விவசாயக் குடும்பத்தில் மகனாகப் பிறந்தார். தொடக்கக் கல்விவரை பயின்றவர், பெற்றோர்களுக்கு ஆதரவாக விவசாயப்பணியில் ஈடுபட்டார். இவருக்கு திருமணமாகி திருமதி.P.சென்னம்மாள்(இவர் பற்றி மேலும் விபரங்களை அறிய நீலநிறத்திலுள்ள பெயரை க்ளிக் செய்யவும்) என்ற மனைவியும், P.தேவராஜ் மற்றும் Er.P.சரண்ராஜ்.B.E., என்ற இருமகன்களும், P.கங்காதேவி என்ற மகளும் உள்ளனர்.
கால்நூற்றாண்டுகள் விவசாயப்பணிகளில் ஈடுபட்டு வந்தவர், 1990-ஆம் ஆண்டு சுயதொழிலில் ஆர்வம் ஏற்பட்டு சொந்த ஊரில் அரிசிக்கடை ஒன்றை துவங்கி நடத்திவந்தார். சுமார் 10 ஆண்டுகள் அதை திறம்பட நடத்தியநிலையில், அப்பகுதில் பிரபலமாக இருக்கும் செங்கள் சூளை தொழிலில் 2003-ஆம் ஆண்டு வாக்கில் கால்பதித்தார். அன்று முதல் இன்றுவரை சுமார் 17 ஆண்டுகளாக அத்தொழிலில் ஈடுபட்டு வரும் திரு.பழனிச்சாமி அவர்கள், செங்கள் சூளைகளுக்குத் தேவையான பொருட்களை கொண்டுவர 2 டிப்பர் லாரிகளும், தயாரிக்கப்படும் செங்கற்களை வெளியிடங்களுக்கு கொண்டுசெல்ல 2 லாரிகளையும் சொந்தமாக வைத்து இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறுவயதிலேயே எம்.ஜி.ஆர் அவர்களின் நடிப்பில் கவரப்பட்ட இரசிகராக இருந்து, பின்னாளில் புரட்சித்தலைவர் 1972-ல் கட்சியை துவங்கியதிலிருந்து, அஇஅதிமுக அடையாளத்துடனே இருந்த திரு.பழனிச்சாமி அவர்கள், 1977-ல் அஇஅதிமுக சந்தித்த முதல் பொதுத்தேர்தலில் தனது முதல் வாக்கை அக்கட்சிக்கு செலுத்தினார். பின்னர் 1982-ல் செட்டிகுளம் கிராமத்தில் அதிமுக கிளையைத்துவங்கி, கிளைக்கழக செயலாளராக ஏறக்குறைய 38 –ஆண்டுகளாக அப்பதவியை வகித்து வருகிறார். கிளைக்கழக செயலாளராக அரசின் நலத்திட்டங்களை மக்களுக்கு கொண்டு சேர்ப்பதுடன், தேர்தல் நேரங்களில் முழுமையாக கட்சிப்பணிகளில் தீவிரமாக செயல்படுபவர் திரு.பழனிச்சாமி அவர்கள். அப்பகுதியிலுள்ள 300-க்கும் மேற்பட்ட செங்கள் சூளைகள் நேரடியாகவும், மறைமுகமாகவும் 10000-க்கும் மேற்பட்டோரின் வாழ்வாதாரமாக விளங்குகிறது. இப்படிப்பட்ட நிலையில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் நிபந்தனைகளையொட்டி ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு, பல்வேறு தரப்பினரையும் இணைத்துக்கொண்டு போராடி அனுமதி பெற்றுக்கொடுத்து, அவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்துக் கொடுத்தார் திரு.பழனிச்சாமி அவர்கள்.
முப்பத்தி எட்டாண்டுகள் கட்சியின் கிளைக்கழக செயலாளராக இருந்தாலும், நேரடியாக தேர்தல் களத்தில் இறங்கியதில்லை. பதவிகள் மேலோ, முழுநேர அரசியல் மீதோ அதிக நாட்டமின்றி இருந்து வந்த திரு.பழனிச்சாமி அவர்களை, அஇஅதிமுக மாவட்ட கழகம் 2019-டிசம்பர் மாதம் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் புண்ணம் ஊராட்சி மன்றத் தலைவர் வேட்பாளராக போட்டியிட பணித்ததையொட்டி, மகளிருக்கு ஒதுக்கப்பட்ட அந்த ஊராட்சியில் தனது துணைவியார் திருமதி.சென்னம்மாள் (இவர் பற்றி மேலும் விபரங்களை அறிய நீலநிறத்திலுள்ள பெயரை க்ளிக் செய்யவும்) அவர்களை களமிறக்கி மகத்தான வெற்றிவாகை சூடியுள்ளார். நீண்ட காலமாக அரசியலில் இருந்தபொழுதும் அதிகாரத்தை விரும்பிப்போகாதவருக்கு தானாக தேடிவந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி, தங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு ஜாதி,மத,இனம்,மொழி பாகுபாடின்றி அனைவருக்கும் சிறப்பான முறையில் சேவையாற்றி வாய்ப்பளித்த கட்சிகும், சமுதாயத்திற்கும் பெருமை சேர்த்திட அன்புடன் வேண்டி வாழ்த்துகிறோம்.