ஒன்றியக்குழு உறுப்பினர் - சிவகாசி - திருமதி.தனலட்சுமி கண்ணன்
திருமதி.K.தனலட்சுமி அவர்கள் 10.07.1981-இல் விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள அனுப்பங்குளம் கிராமத்தில் திரு.லட்சுமணன் – திருமதி.பிச்சையம்மாள் தம்பதியினருக்கு மகளாகப் பிறந்தார். ஆசிரியர் பயிற்சியில் பட்டயம் பெற்றுள்ள திருமதி.தனலட்சுமி அவர்கள் திரு.கண்ணன் அவர்களை மணமுடித்துள்ளார்.
திரு.C.கண்ணன் அவர்கள் 06.06.1978-இல் விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள அனுப்பங்குளம் கிராமத்தில் திரு.சின்னராமசாமி-திருமதி.லட்சுமி அம்மாள் தம்பதியினருக்கு விவசாயக் குடும்பத்தில் மகனாகப்பிறந்தார். தஞ்சாவூரிலுள்ள புகழ்பெற்ற சண்முக பாலிடெக்னிக் கல்லூரியில் எலக்ட்ரிகல்ஸ் & கம்யூனிகேசன் துறையில் பட்டயபடிப்பு முடித்துள்ளார். ஸ்ரீ கண்ணன் கம்பெனி மற்றும் ஸ்ரீ கண்ணன் ஏஜென்சீஸ் என்ற பெயரில் பட்டாசு வணிகத்தில் ஈடுபட்டு வருகிறார். திரு.கண்ணன் – திருமதி.தனலட்சுமி தம்பதியினருக்கு K.மித்ரா மற்றும் K.மகித்ரா என்ற இரு மகள்கள் உள்ளனர்.
மாணவப் பருவத்திலிருந்தே தி.மு.க ஆதரவாளராக இருந்து வந்தவர், கேப்டன் திரு.விஜயகாந்த் அவர்கள் தே.மு.தி.க-வைத் துவங்கியபொழுது அக்கட்சியில் இணைந்து ஒன்றிய பட்டதாரி அணி செயலாளராக பெறுப்பேற்றார். மாணவப்பருவத்திலிருந்தே பொதுநல சேவைகளில் அதிக ஈடுபாடு கொண்ட திரு.கண்ணன் அவர்கள், மக்களின் அத்தியாவசிய தேவைகள், முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, சமையல் எரிவாயு கனெக்ஷன் போன்றவற்றை பெற்றுத்தந்தும், கிராம திருவிழாக்கள், சுக-துக்கங்கள் என அனைத்திலும் கலந்து கொண்டு மக்களோடு மக்களாக உறுதுணையாக இருந்து வந்துள்ளார். 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிக சார்பில் ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். தோல்வியை கண்டு அஞ்சி ஒதுங்கி விடாமல் தொடர்ந்து அரசியல் பணிகளில் ஈடுபட்டு வந்தார். 2014-இல் மீண்டும் தாய்க்கழகமான தி.மு.கழகத்திற்கு திரும்பியவர், கட்சிப்பணிகளில் முனைப்புடன் செயல்பட்டார். கட்சியின் அனைத்து நிகழ்ச்சிகள், பொதுக்கூட்டங்கள், மாநாடுகள், போராட்டங்களில் கலந்து கொண்டு கழக முன்னனியினரின் ஆதரவைப்பெற்றார். திரு.கண்ணன் அவர்களின் சுறுசுறுப்பான கட்சிப்பணிகளைப் பார்த்த மாவட்ட கழகம் 2016-நடைபெறவிருந்த உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை வழங்கியது. மேலும் ஒன்றிய வர்த்தக அணி செயலாளர் பதவியையும் வழங்கி கௌரவித்தது.
இந்நிலையில் மீண்டும் கடந்த 2019-டிசம்பர் மாதம் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் சிவகாசி ஒன்றியம் 31-ஆவது வார்டு ஒன்றியக்குழு உறுப்பினர் தேர்தலில் திமுகழக வேட்பாளராக தனது துணைவியார் திருமதி.தனலட்சுமி அவர்களை களமிறக்கி மகத்தான வெற்றிபெறச் செய்துள்ளார். இப்புதிய பொறுப்பில் திரு.கண்ணன் – திருமதி.தனலட்சுமி தம்பதினர் சாதி,மதம், இனம், மொழி கடந்து அனைவருக்கும் பணியாற்றி வாய்ப்பளித்த கட்சிக்கும், சமுதாயத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டுமாய் அன்புடன் வேண்டி வாழ்த்துகிறோம்.