ஊராட்சி மன்ற துணைத்தலைவர் - சத்தி- திரு.N.சிவக்குமார்
திரு.N.சிவக்குமார் அவர்கள் 29.05.1980-இல் ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகேயுள்ள செண்பகப்புதூர் கிராமத்தில் திரு.நடராஜ் – திருமதி.சரோஜா தம்பதியினருக்கு விவசாய குடும்பத்தில் மகனாக பிறந்தார். இவர் நடுநிலைப்பள்ளி கல்வி வரை பயின்றுள்ளார். இவருக்கு திருமணமாகி திருமதி.S.சுமித்ரா என்ற மனைவியும் S.சிநேகா, S.தீபா என்ற இரு மகள்களும் S.சசிகணேசன் என்ற மகனும் உள்ளனர்.
திரு.சிவக்குமார் அவர்களின் தந்தையார் திராவிட முன்னேற்றக்கழகத்தின் தீவிர ஆதரவாளராகப் பணியாற்றிவர். அதனடிப்படையில் திராவிட இயக்க குடும்பத்திலிருந்து வந்தவரான திரு.சிவக்குமார் அவர்கள் மாணவப் பருவத்திலிருந்தே கழக நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். தனது 18-ஆவது வயதில் தி.மு.க அடிப்படை உறுப்பினராக இணைத்துக்கொண்ட திரு.சிவக்குமார் அவர்கள், கிளைச்செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார். திமுகழக நிகழ்ச்சிகள், பொதுக்கூட்டங்கள், மாநாடுகளில் கலந்து கொள்வதுடன் கட்சி அழைப்பு விடுக்கும் அனைத்து போராட்டங்கள், மறியல்களில் கலந்துகொண்டு வருபவர்.
2006-ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் செண்பகப்புதூர் ஊராட்சி மன்ற 1-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றிபெற்றவர் மக்களின் அடிப்படைத் தேவைகளான காங்கிரீட் சாலைகள், தெருவிளக்குகள், குடிநீர் வசதி, மயானவசதி, அங்கன்வாடி, பள்ளிகளுக்கு சுற்றுச்சுவர், முதியோர் உதவித்தொகை, ரேசன்கார்டு, தொகுப்புவீடு, சமையல் எரிவாயு, விவசாய மானியம் போன்ற பல்வேறு நலத்திட்டங்களையும், வளர்ச்சித்திட்டங்களையும் மேற்கொண்டுள்ளார். இச்சிறப்பான பணியின் காரணமாக 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் மீண்டும் ஊராட்சி மன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கட்ட திரு.சிவக்குமார் அவர்கள் ஊராட்சி மன்ற துணைத்தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இப்புதிய பொறுப்பில் அனைத்து தரப்பு மக்களுக்கும் சாதி,மத,இன,மொழி பாகுபாடின்றி பணியாற்றி சார்ந்துள்ள கட்சிக்கும், சமுதாயத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டுமாய் அன்புடன் வேண்டுகிறோம்.