வளரும் நட்சத்திரம் - வாசுதேவநல்லூர் - திரு.N.நாகராஜன்
திரு.N.நாகராஜன் அவர்கள் 15.04.1965-இல் தென்காசி மாவட்டம், சிவகிரி அருகேயுள்ள வாசுதேவநல்லூர் கிராமத்தில் திரு.நா.நல்லையா நாயக்கர் – திருமதி ந. துளசியம்மாள் தம்பதியினருக்கு விவசாய குடும்பத்தில் மகனாகப் பிறந்தார். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத்துறையில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார். இவருக்கு 1994,ல் தன்மானத் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி தலைமையில் திருமணமாகி திருமதி.N.மஞ்சுளா என்ற மனைவியும், Dr.N.லாவண்யா BHMS, N.நந்தினிB.sc,B.Ed என்ற இரு மகள்களும் N.நல்லையராஜா என்ற மகனும் உள்ளனர்.
காங்கிரஸ் பாரம்பரியக்குடும்பத்தைச் சேர்ந்தவரான திரு.நாகராஜனின் தந்தையார் திரு.நல்லையா நாயக்கர், இராஜகம்பள நாயக்கர் சமுதாய நாட்டாண்மையாகவும், காங்கிரஸ் பேரியக்கத்தில் பல்வேறு பொறுப்புகளையும் வகித்துள்ளார். இதன் தொடர்ச்சியாக திரு.N.நாகராஜன் அவர்களும் 1984 ஆம் ஆண்டு முதல் காங்கிரஸ் கட்சியில் உறுப்பினராக இணைந்து தீவிரமாக பணியாற்றி், தன் கடும் உழைப்பினால் வாசுதேவநல்லூர் நகர காங்கிரஸ் கமிட்டித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு 13 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றினார். தற்பொழுது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொதுக்குழு உறுப்பினராக இருந்து வரும் திரு.N.நாகராஜன் அவர்கள், வாசுதேவநல்லூர் தொடக்க கூட்டுறவு வேளாண்மை வங்கி இயக்குநராகவும், வேளாண்மை பொறியல் துறை இயக்குனராகவும் பொறுப்பு வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அரசியல் மட்டுமல்லாது சமுதாயப்பணியிலும் ஆர்வமுடையவரான திரு.நாகராஜன் அவர்கள், 2001, ல் முதன்முதலாக வீரபாண்டிய கட்டபொம்மன் அறக்கட்டளையை நிறுவி,பதிவு செய்து,(பதிவு எண்:48/2001) சமுதாயப்பணியாற்றி வருகிறார். மேலும் அறக்கட்டளை மூலமாக நாகாஸ் தொழிற்பயிற்சி பள்ளி என்ற நிறுவனத்தை நிறுவி மகளிருக்கு தற்போது தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மூலமாக உதவித்தொகையுடன் கூடிய திறன் மேம்பாட்டு பயிற்சியளித்து கிராமப்புற மகளிரை பயனடையச் செய்துள்ளார்.மேலும்,மாணவர்களுக்கு தொழிற்பயிற்சி அளித்து வருகிறார்.
அரசியல் மற்றும் சமுதாயப்பணிகளில் நீண்ட நெடிய அனுபவமுள்ளவரான திரு.N.நாகராஜன் அவர்கள் வரும் காலங்களில் பல வெற்றிகளைப் பெற்று சார்ந்துள்ள கட்சிக்கும், சமுதாயத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டுமாய் அன்புடன் வேண்டி வாழ்த்துகிறோம்.