ஒன்றியக்குழு உறுப்பினர் -பவானி-திரு.M.நல்ராஜ்.
திரு.M.நல்ராஜ் அவர்கள் 05.06.1968-இல் ஈரோடு மாவட்டம், பவானி அருகேயுள்ள வளையக்காரப்பாளையம் கிராமத்தில் திரு.மாச நாயக்கர் – திருமதி. மல்லம்மாள் தம்பதியினருக்கு விவசாயக் குடும்பத்தில் மகனாகப் பிறந்தார். உயர் நிலைப்பள்ளி வரை கல்வி பயின்றவர், பின்னர் பெற்றோர்களுக்கு உதவியாக விவசாயப்பணிக்கு திரும்பினார். இவருக்கு திருமணமாகி திருமதி.R.ராஜேஸ்வரி என்ற மனைவியும் N.நந்தகோபால் B.E., என்ற மகனும் N.ப்ரியதர்ஷினி B.Sc.,B.Ed.,என்ற மகளும் உள்ளனர்.
புரட்சித்தலைவி. ஜெ.ஜெயலலிதா அவர்களின் வருகைக்குப்பின், 1990-ஆம் ஆண்டு அஇஅதிமுக-வில் இணைந்தார். அதிலிருந்து அக்கட்சியில் அடிப்படை உறுப்பினராக இருந்து வரும் திரு.நல்ராஜ் அவர்கள் 2001-ஆம் ஆண்டு முதல் சுமார் இருபது வருடங்களாக தட்டாங்குளம் கிளைக் கழக செயலாளராகப் பணியாற்றி வருகிறார். ஆளும் கட்சியின் கிளைக்கழக செயலாளராக, அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் மக்களைச் சென்றடைய பாடுபட்டுள்ளார். மேலும் முதியோர் உதவித்தொகை, ரேசன் கார்டு போன்ற உதவிகளை மக்களுக்கு செய்து வந்துள்ளார்.
சுமார் 20 ஆண்டுகளாக கட்சிக்கும், தலைமைக்கும் விசுவாசமாக பணியாற்றி வரும் திரு.நல்ராஜ் அவர்கள் 2001-ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி மன்றத் தேர்தலில் பெரியபுலியூர் ஊராட்சி மன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2006-வரை அப்பதவியில் இருந்தவர்,சாலைவசதி,தெரு விளக்குகள், குடிநீர் விநியோகம் ஆகியவற்றை சிறப்புடன் நிறைவேற்றியுள்ளார். அதன் பிறகு நீண்ட நாட்களாக தேர்தல் களத்தை சந்திக்காதவர் கடந்த 2019-டிசம்பர் மாதம் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில், அஇஅதிமுகழகம் சார்பில் பவானி ஒன்றியம் 17-ஆவது வார்டு ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் வாய்ப்பினைப் பெற்ற திரு.நல்ராஜ் அவர்கள் மகத்தான வெற்றி பெற்றுள்ளார். தனக்கு கிடைத்த இந்த பொன்னான வாய்ப்பைப் பயன்படுத்தி சாதி,மதம், இன,மொழிகளுக்கு அப்பாற்பட்டு அனைத்து தரப்பு மக்களுக்காகவும் உழைத்து வாய்ப்பளித்த கட்சிக்கும், சமுதாயத்திற்கும் பெருமை சேர்த்திட அன்புடன் வேண்டி வாழ்த்துகிறோம்.