வளரும் நட்சத்திரம் - ஆயக்குடி - திரு.C.கார்த்திகேயன்
திரு.C.கார்த்திகேயன் அவர்கள் 20.05.1969-இல் திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகேயுள்ள ஆயக்குடி கிராமத்தில் திரு.சின்னசாமி – திருமதி.மாணிக்கம்மாள் தம்பதியினருக்கு விவசாயக்குடும்பத்தில் மகனாகப்பிறந்தார். இவர் கட்டிடத்துறையில் பட்டயம் பெற்றுள்ளார். இவருக்கு திருமணமாகி திருமதி.K.சுதாமணி என்ற மனைவியும் K.விஷ்ணு பிரசாத் என்ற மகனும் K.யேகவஷினி என்ற மகளும் உள்ளனர்.
மாணவப்பருவத்திலிருந்தே தி.மு.க வில் அடிப்படை உறுப்பினராக இணைந்து பணியாற்றி வரும் திரு.கார்த்திகேயன் அவர்கள், 1989-ஆம் ஆண்டு T.K.N.புதூர் கிளைக்கழக பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். கல்லூரி மாணவராக இருந்தபொழுது இலங்கைத்தமிழர் பிரச்சினை, இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டங்களில் பங்கேற்றுள்ளார். தொடர்ந்து கட்சி நடத்தும் அனைத்து போராட்டங்கள், மறியல், ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொண்டு பலமுறை கைதாகியுள்ளார். 1997 முதல் 2002 வரை பழனி ஒன்றிய இளைஞர் அணி துணைஅமைப்பாளராக பொறுப்பு வகித்துள்ளார். 2003-2011 திண்டுக்கல் மாவட்ட பிரதிநிதி. கட்சிப்பணிகளில் தீவிரமாக பணியாற்றும் திரு.கார்த்திகேயன் அவர்கள், கட்சியின் நிகழ்ச்சிகள், பொதுக்கூட்டம், மாநாடுகளுக்கு பெருமளவு தொண்டர்களைத் திரட்டி கலந்து கொள்வார்.
திரு.கார்த்திகேயனின் சிறப்பான கட்சிப்பணியால் 2006-ஆம் ஆண்டு நடைப்பெற்ற உள்ளாட்சி மன்றத் தேர்தலில் ஆயக்குடி பேரூராட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிடும் வாய்ப்பைப்பெற்றவர், இதில் மகத்தான வெற்றிபெற்று 2011-வரை பேரூராட்சித் தலைவராக பணியாற்றினார். பேரூராட்சித் தலைவராக இருந்தபொழுது பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் காங்கிரீட் சாலைகள், நீர்தேக்கத்தொட்டிகள், உயர்மட்ட டேங்குகள், தெருவிளக்கு, குடிநீர் வசதி, மயான வசதி, அங்கன்வாடி மையம், ரேசன் கடைகள், ஏழை-எளியவர்களுக்கு வீடுகள், முதியோர் உதவித்தொகை, விவசாய மானியம், இலவச வீட்டுமனைப்பட்டா போன்ற பல்வேறு அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றியுள்ளார்.
2012-முதல் இன்று வரை ஆயக்குடி பேரூர்கழகச் செயலாரக பொறுப்பு வகித்து வரும் திரு.கார்த்திகேயன் அவர்கள், கடந்த சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களில் கட்சிக்கு மிக அதிக வாக்குகளை பெற்றுக்கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது கொரானோ நிவாரணப்பணிகளில் தீவிரமாக பங்கெடுத்து வருபவர், ஆயிரக்கணக்கானவர்களுக்கு நிவாரண உதவி வழங்கி வருகிறார். மாணவப்பருவத்திலிருந்து தீவிர அரசியலில் பங்கேற்று வரும் திரு.கார்த்திகேயன் அவர்கள் வரும்காலங்களில் கட்சியிலும் ,நிர்வாகத்திலும் மிகப்பெரிய பதவிகளைப்பெற்று, சார்ந்துள்ள கட்சிக்கும், சமுதாயத்திற்கும் பெருமை சேர்க்க அன்புடன் வேண்டி வாழ்த்துகிறோம்.