அரசியல் வானில் ஒளிரும் நட்சத்திரம்-ஸ்ரீவில்லிப்புத்தூர்.திரு.C.கோவிந்தராஜ்.
திரு.C.கோவிந்தராஜ் அவர்கள் 05.06.1972-இல் விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகேயுள்ள பிள்ளையார்நத்தம் கிராமத்தில் திரு.சின்னபொம்மைய நாயக்கர் – திருமதி.கிருஷ்ணம்மாள் தம்பதியினருக்கு விவசாயக் குடும்பத்தில் மகனாகப் பிறந்தார். இவர் நடுநிலைப்பள்ளி வரை கல்வி பயின்றுள்ளவர், பின்னர் பெற்றோர்களுக்கு ஆதரவாக விவசாயப்பணிகளில் ஈடுபட்டார். இவருக்கு திருமணமாகி திருமதி.G.சுந்தரி என்ற மனைவியும் G.சந்தியா. M.Sc., என்ற மகளும் G.பாலாஜி என்ற மகனும் உள்ளனர்.
நேரடி அரசியலில் பங்கெடுக்காவிட்டாலும் திரு.கோவிந்தராஜ் அவர்களின் தந்தையார் காலத்திலிருந்தே திமுக அனுதாபியாக இருந்த குடும்பம். ஆகையால் திரு.கோவிந்தராஜ் அவர்களும் திமுக அனுதாபியாகவே வளர்ந்தவர். 1990 ஆம் ஆண்டிலிருந்து திமுக-வில் அடிப்படை உறுப்பினராக இணைத்துக்கொண்டார். அதிலிருந்து பிள்ளையார்நத்தம் திமுகழக கிளைச்செயலாளராக சுமார் 30 ஆண்டுகளாக இருந்து வருகிறார். கட்சி பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருபவர், கட்சி நடத்தும் பல்வேறு மாநாடுகள், பொதுக்கூட்டங்கள், மற்றும் தேர்தல் பணிகளில் கலந்துகொண்டு வந்துள்ளார். 2006- ஆண்டில் ஒன்றிய விவசாய அணி செயலாளராக நியமிக்கப்பட்டவர், அப்பொறுப்பில் சிறப்பாக பணியாற்றி வருகிறார்.
2006-ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் கழகத்தின் கட்டளையை ஏற்று மகளிருக்கு ஒதுக்கப்பட்ட ஸ்ரீவில்லிப்புத்தூர் 3-ஆவது வார்டு ஒன்றியக்குழு உறுப்பினர் வேட்பாளராக தன் துணைவியார் திருமதி.சுந்தரி கோவிந்தராஜ் அவர்களை களமிறக்கி வெற்றிவாகை சூடினார். இந்தப் பதவி காலத்தில் கிராமத்தின் அடிப்படைத் தேவையான குடிநீர் வசதி, காங்கிரீட் சாலைவசதி, தெரு விளக்குகள், போன்றவற்றிற்கு முன்னுரிமையளித்து நிறைவேற்றியுள்ளார். அதுதவிர, தொகுப்பு வீடுகள், ஆழ்துழாய் கிணறுகள், அங்கன்வாடி கட்டிடம், சமுதாயக்கூடம், ஊரணி பராமரிப்பு, மயானக் கூரை அமைத்தல் போன்ற பணிகளை நிறைவேற்றியுள்ளார். ஏழை-எளிய மக்களுக்கு இலவச பட்டா, விவசாயிகளுக்கு பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை, கேஸ் இணைப்பு போன்ற பல்வேறு உதவிகளை மக்களுக்குப் பெற்றுத்தந்துள்ளார். தவிர, அண்ணா மறுமலர்ச்சி திட்டம், நமக்கு நாமே திட்டம் மூலம் மேற்கொள்ளப்பட்ட பணிகளை செவ்வனே நிறைவேற்றியுள்ளார்.
அரசியலில் நீண்டகாலமாக பயணித்து வரும் திரு.கோவிந்தராஜ் அவர்கள், தான் பதவியில் இல்லாத காலகட்டங்களிலும் பொதுமக்களின் சேவகனாக மக்களின் ஒருவனாக இருந்து அவர்களின் சுக-துக்கங்களில் பங்கேற்று, அவர்களின் தேவைகளை நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று குறைகளைப் போக்கியுள்ளார். மீண்டும் 2019-டிசம்பர் மாதம் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் திமுகழகம் சார்பில் போட்டியிடும் வாய்ப்பினைப் பெற்ற திரு.கோவிந்தராஜ் அவர்கள் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஒன்றியம் 3-ஆவது வார்டு ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு தன் துணைவியார் திருமதி. சுந்தரி கோவிந்தராஜ் அவர்களை களமிறக்கி மகத்தான வெற்றியை ஈட்டியுள்ளார். மக்கள் தங்களுக்களித்த இந்த மகத்தான மக்கள் பணியில் சீறும் சிறப்புமாக செயல்பட்டு, சாதி,மதம், மொழி,இனம் கடந்து அனைவருக்காகவும் பாகுபாடின்றி பணியாற்றி பிறந்த சமுதாயத்திற்கும், வாய்ப்பளித்த கட்சிக்கும் பெருமை சேர்க்க வேண்டுமாய் அன்புடன் வேண்டி வாழ்த்துகிறேன்.