அரசியல் வானில் ஒளிரும் நட்சத்திரம் -திருப்பூர்- திரு.R.இரத்தினசாமி
திரு.R.ரத்தினசாமி அவர்கள் 16.06.1977-இல் திருப்பூர் மாவட்டம், பாரப்பாளையம் கிராமத்தில் திரு.ரங்கசாமி-திருமதி.பொன்னம்மாள் தம்பதியினருக்கு விவசாயக் குடும்பத்தில் மகனாகப் பிறந்தார். இவர் நடுநிலைப்பள்ளி வரை கல்வி பயின்றவர்,பின் பெற்றோர்களுக்கு உறுதுணையாக விவசாயப் பணிகளில் ஈடுபட்டார். இவருக்கு திருமணமாகி திருமதி. R. விஜயலட்சுமி என்ற மனைவியும் R. பிரபாகரன் என்ற மகனும் R.ஸ்ருதி என்ற மகளும் உள்ளனர்.
திரு.ரத்தினசாமி அவர்களின் 13-ஆவது வயதில், 1990-ஆம் ஆண்டு, பாரதிய ஜனதாவின் நிறுவன தலைவர்களில் ஒருவரும், முன்னாள் உள்துறை அமைச்சராகவும் பதவி வகித்த திரு.லால் கிஷன் அத்வானி அவர்கள், அயோத்தியில் இராமர்கோவில் கட்டவேண்டி மேற்கொண்ட இரத யாத்திரையின் மூலமாக, அதில் கவரப்பட்டு பிஜேபி-யின் பால் ஈர்க்கப்பட்டவர். அதிலிருந்து பிஜேபி -யின் தீவிர ஆதரவாளராக, கட்சின் பிரச்சாரக்கூட்டங்கள், ஆலோசனைக் கூட்டங்களில் கலந்து கொண்டு வந்தார். இதனைத் தொடர்ந்து 1996-ஆம் ஆண்டு திருப்பூர் மன்னரை ஊராட்சி மன்றப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். 1998-வரை அப்பொறுப்பில் இருந்தவர், பின்னர் திருப்பூர் ஒன்றிய இளைஞரணிச் செயலாளராக 2004-வரை பொறுப்பு வகித்தார்.
தனது திருமணத்திற்குப் பின்னர், குடும்பத்தை நிலைநிறுத்திக்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டவர், தீவிர கட்சிப்பொறுப்புகளிலிருந்து ஓய்வு பெற்றுக்கொண்டு ,2004-இல் நண்பர்களுடன் இணைந்து, ப்ரித்வி என்ற நிறுவனத்தை துவங்கி, கார்மென்ட் தொழிலில் ஈடுபட்டார். அதன் பின்னர் ரியல் எஸ்டேட் துறையிலும் கால்பதித்தவர், தீவிரமாக செயல்பட்டு 2008-வரை, சுமார் நான்காண்டு காலத்திற்குள் ஒரளவு தொழில் நுணுக்கங்களையும், சூட்சமங்களையும் கற்றுக்கொண்டு, மீண்டும் அரசியல் பக்கம் திரும்பினார்.
2008-இறுதிவாக்கிலிருந்து தீவிர கட்சிப்பணிக்கு திரும்பியவர், முன்பைவிட அதிக அனுபவத்தையும், பக்குவத்தையும் பெற்றிருந்தார். தற்போது திருப்பூர் வடக்கு மாவட்ட இளைஞரணிச் செயலாளராக பொறுப்பு வகித்து வரும் திரு.ரத்தினசாமி அவர்கள், கட்சிப்பணிக்கு என சில திட்டங்களை வகுத்துக்கொண்டு செயல்படுகின்றார். பட்டங்கள் பெற்றவரில்லை, வசீகரத்தோற்றம் கொண்டவரில்லை, மிகப்பெரிய பொருளாதார பின்புலம் கொண்டவரில்லை, மிகச்சிறந்த சொற்பொழிவாளருமில்லை. மத்திய வர்க்க குடும்பம் மட்டுமே. ஆனால் இது எதுவும் அரசியலில் முன்னேறிச்செல்ல திரு.ரத்தினசாமிக்கு தடையாக இருக்கவில்லை. நமது சமுதாயத்திலுள்ள பெரும்பாலான அரசியல் பிரமுகர்கள், 30-40 ஆண்டுகளாக அதே கிளைக்கழக செயலாளர் பொறுப்பிலும், அதிக பட்சம் பஞ்சாயத்து தலைவர் பதவியிலும் உள்ளூருக்குள் காலங்கடத்திக்கொண்டு, அரசியல் நட்பு வட்டத்தை கிராம எல்லைக்குள்ளும், அதிகபட்சம் வட்டார எல்லைக்குள் சுறுக்கிக் கொண்டவர்களுக்கு மத்தியில், திரு.ரத்தினசாமி அவர்கள் தனது நட்பு வட்டத்தை வட்டம்,மாவட்டம், மட்டுமல்ல மாநிலம் தாண்டி தேசிய அளவில் விரிவுபடுத்தியுள்ளார். எதிலும் துணிந்து காரியம் சாதிக்கும் துணிச்சலும், சாதுர்யமும் மிக்கவர், தமிழக அளவிலும் தேசிய அளவிலும் பிஜேபி கட்சின் பல முன்னனி தலைவர்களின் அறிமுகத்தையும், ஆதரவையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறந்த களப்பணியாளரான திரு.ரத்தினசாமி அவர்கள், மன்னரை தொடக்கப்பள்ளி விரிவாக்கத்திற்காக இடப்பற்றாக்குறை நிலவியபொழுது, அருகிலுள்ள நில உரிமையாளரிடம் சுமூகமாகப்பேசி பெற்றுக்,கொடுத்துள்ளார். இதுபோலா, மன்னரையில் சாலைகளை இணைக்க வேண்டிய தேவை வந்தபொழுது, நில உரிமையாளர்களிடம் பேசி அனுமதியைப் பெற்றுத்தந்தார். இதுதவிர பாரதப் பிரதமரின் முத்ரா திட்டத்தின் மூலம் சிறு-குறு தொழில்முனைவோருக்கு நிதியுதவி பெற்றுத்தந்துள்ளார். தவிர, விவசாயிகளுக்கு மத்திய அரசு வழங்கும் நிதியினை அவர்களுக்கு எந்தவித அலைச்சலுமின்றி பெற்றுக்கொடுத்துள்ளார். மேலும், கேஸ் மானியம், ஆதார் கார்டு,ரேசன் கார்டு, முதியோர் உதவித்தொகை உள்ளிட்டவற்றை ஏழை-எளியோருக்குப் பெற்றுக் கொடுத்துள்ளார். திருப்பூர் ஆர்கேஜி நகரில் ரெயில்வே “கேட்” கிராஸிங்கில் எற்படும் கடும் போக்குவரத்து நெரிசலால் பொதுமக்களுக்கும், மாணவ-மாணவியரும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகிய நிலையில், தனது அரசியல் வழிகாட்டியும், பிஜேபியின் முன்னாள் மாநில தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான திரு.சி.பி.இராதாகிருஷ்ணன் அவர்களின் உதவியுடன் மத்திய அமைச்சரை நேரடியாக சம்மந்தப்பட்ட இடத்திற்கே அழைத்துச்சென்று தீர்வு கண்டவர் இந்த எளிய மனிதன் திரு.ரத்தினசாமி அவர்கள்.
கட்சிப்பணி தவிர சமுதாயப்பணியிலும் தீவிர ஆர்வமுடையவர்,இராஜகம்பள மஹாஜனசங்கம் தலைமை செயலிழந்து விட்டாலும், தங்கள் பகுதியில் இராஜகம்பள மகாஜன சங்கத்தை இன்னும் உயிர்ப்புடன் வைத்திருக்க காரணமாக உள்ளார். இந்த அமைப்பின் சார்பில், மாவீரன் கட்டபொம்மன் சிலையை முதன் முதலில் மேற்கு மாவட்டத்தில் திறப்பதற்கு முக்கிய காரணமானவர்களில் திரு.ரத்தினசாமியும் ஒருவர். இதுதவிர, வருடம் தோறும் மாவீரனின் பிறந்தநாளைச் சிறப்புடன் கொண்டாடுவதுடன், மோட்டார் வாகனப் பேரணியை ஏற்பாடு செய்து இன்றுவரை சிறப்புடன் நடத்துவதற்கு தன் பங்களிப்பை அளித்து வருகிறார். தவிர, சாதி மோதல் நிலவிய காலகட்டங்களில் தன்னுடைய ஆசான் திரு.சி.பி.ஆர் அவர்களை நேரடியாக களத்திற்கு அழைத்து வந்து இருதரப்பிற்கும் சமாதானாம் ஏற்பட முக்கிய காரணமாக இருந்துள்ளார் திரு.ரத்தினசாமி அவர்கள்.
சிறந்த மதிநுட்பத்தாலும்,பரந்துபட்ட நட்பாலும், திட்டமிட்ட களப்பணியாளும் அரசியலில் அடுத்தடுத்த நிலைகளைப்பெற்று உயர்ந்து வரும் திரு.ரத்தினசாமி அவர்கள் அனைத்து தரப்பு மக்களுக்கும் இன,மொழி,சாதி,மத பாகுபாடின்றி பணியாற்றி சமுதாயத்திற்கும், சார்ந்துள்ள கட்சிக்கும் பெருமைசேர்த்திட அன்புடன் வாழ்த்துகிறோம்.