🔴 LIVE | முப்பெரும் விழா 2023


வளரும் நட்சத்திரம் - திண்டுக்கல் - திரு.ஸ்ரீதர் வேலுச்சாமி.

திரு.ஸ்ரீதர் வேலுச்சாமி அவர்கள் 20.09.1975-இல் திண்டுக்கல்  மாவட்டம், குஜிலியம்பாறை அருகேயுள்ள சின்னழகு நாயக்கனூர் கிராமத்தில் திரு.வேலுச்சாமி – திருமதி.தனலட்சுமி தம்பதியினருக்கு விவசாயக்குடும்பத்தில்  மகனாகப்பிறந்தார். வரலாற்று துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளார்.  இவருக்கு திருமணமாகி திருமதி.செல்வி என்ற மனைவியும் S.ஜீவா என்ற மகனும் S.மதிவதனி என்ற மகளும் உள்ளனர்.

மேலும்,  திரு.ஸ்ரீதர் வேலுச்சாமி அவர்கள் சுதந்திர போராட்ட வீரர் திண்டுக்கல் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் விருப்பாச்சி கோபால நாயக்கரின் மூத்தமகன் முத்துவேல் நாயக்கரின் நேரடி வாரிசுகளுள் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.


மாணவப்பருவத்திலிருந்து தி.மு.க வில் அடிப்படை உறுப்பினராக இணைந்து பணியாற்றி வந்த திரு.ஸ்ரீதர் வேலுச்சாமி அவர்கள் 1989 ஆம் ஆண்டு தி.மு.க கிளைக்கழக பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றினார். 1993-ஆம் ஆண்டு திரு.வைகோ அவர்கள் மதிமுகவைத் துவங்கியபொழுது அக்கட்சியில் அடிப்படை உறுப்பினராக இணைந்தார். பின் 1996-1998 வரை வேடசந்தூர் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளராக பணியாற்றினார். 1998 முதல் 2006 வரை திண்டுக்கல் மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளார் சிறப்பாக பணியாற்றியவர், அதனைத் தொடர்ந்து 2006 லிருந்து 2011 வரை திண்டுக்கல் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் தேர்ந்தெடுக்கப்பட்டு பதவி வகித்து வந்தார். ம.தி.மு.க அறிவித்த பல்வேறு மக்கள் நலப் போராட்டங்களில் கலந்து கொண்டு கைதாகியுள்ளார். மேலும் 1993-இலிருந்து மதிமுக நடத்திய அனைத்து மாநாடுகளிலும் கலந்து கொண்டு வருகிறார்.

திரு.ஸ்ரீதர் வேலுச்சாமி அவர்கள் ஒன்றிய கவுன்சிலராக பணியாற்றிய காலங்களில் அடிப்படை தேவைகளான 40 குடிநீர் போர்வெல்கள், சிமெண்ட் சாலை வசதி, 3 அங்கன்வாடி மையம், 2 நாடகமோடைகள், சாக்கடை வசதி, தெருவிளக்குகள், பள்ளி சுற்றுச்சுவர், மயான வசதி, நிழற்குடை, போன்ற பல்வேறு வசதிகளை  ஐந்து வருடகாலத்தில் 72 லட்சம் செலவில் செய்து கொடுத்துள்ளார். 


திரு.ஸ்ரீதர் அவர்களின் தந்தையார் திரு.வேலுச்சாமி அவர்கள் இந்தியா விமானப்படையில் வேலை பார்ந்தபொழுது,  1971 ஆம் ஆண்டு நடைப்பெற்ற  இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைப்பெற்ற “பதான்கோட்” தாக்குதலில் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. திரு.ஸ்ரீதர் அவர்கள் வருடம் தோறும் மாவீரன் கட்டபொம்மன் பிறந்தநாளை மாவட்ட வாரியாக நடக்கும் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு மாலை அணிவித்து மரியாதை செய்வது  வழக்கம்.   

1996 மற்றும் 2001 ஆம் ஆண்டு நடைப்பெற்ற உள்ளாட்சித் தேர்தலில் R.கோம்பை ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். அதன்பின் 2006 ஆம் ஆண்டு R.கோம்பை ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கு மதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். 2011 ஆம் ஆண்டு நடைப்பெற்ற உள்ளாட்சி தேர்தலில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு துணைவியார் திருமதி.செல்வி அவர்களை களமிறக்கி சொற்ப வாக்குகளில் வெற்றி வாய்ப்பை இழந்தபொழுதிலும். தொடர்ந்து அரசியல் களத்தில் பணியாற்றி வரும் திரு.ஸ்ரீதர்  வேலுச்சாமி அவர்கள், வரும்காலத்தில் அரசியலில் மிகப்பெரிய வெற்றிகளையும், பதவிகளையும் பெற்று, சார்ந்துள்ள கட்சிக்கும், சமுதாயத்திற்கும் பெருமை சேர்க்க அன்புடன் வாழ்த்துகிறோம்.  

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved