ஒன்றியக்குழு உறுப்பினர்-மதுரை.திருமதி.தீபா சுந்தர்.
திருமதி.தீபா சுந்தர் அவர்கள் 1.11.1985-இல் தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகேயுள்ள ஆச்சி அட்டணம்பட்டி கிராமத்தில் திரு.S.செல்வராஜ் – திருமதி. செல்வி தம்பதியினருக்கு மகளாகப் பிறந்தார். தொடக்கக் கல்விவரை பயின்றுள்ளவர், மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகேயுள்ள கப்பலூரைச் சேர்ந்த திரு. சுந்தர் (ஏ) அழகர்சாமியை (இவர் பற்றி மேலும் விபரங்களை அறிய நீலநிறத்திலுள்ள பெயரை க்ளிக் செய்யவும்) மணமுடித்துள்ளார். இத்தம்பதியினருக்கு, A.ஷிவானி என்ற ஒரே மகள் உள்ளார்.
எளிய குடும்பத்தின் மருமகளாக திருமதி.தீபா அவர்கள் கணவரின் அனைத்து தொழில் முயற்சிகளுக்கும் ஆதரவாகவும், ஊக்கமளிப்பவராகவும் இருந்து தன் பங்களிப்பை சிறப்பான முறையில் நிறைவேற்றி வந்துள்ளார். பெரிய பொருளாதார பின்புலம் இல்லாத நிலையிலும், கணவர் சொந்த தொழிலில் சற்று தடுமாறியபொழுதும் துவண்டுவிடாமல் திரு.சுந்தர் அவர்களுக்கு வழிகாட்டியாகவும்,ஊன்றுகோளாகவும் இருந்து வழிநடத்தியதன் மூலம் இன்று தன் கணவரை பலச்சரக்குக்கடை முதலாளியாக்கியுள்ளார் திருமதி.தீபா அவர்கள். படித்தவர்களும், பழுத்த அனுபவமுள்ளவர்களும் தங்கள் சார்ந்த துறைகள் வீழ்ச்சியுறும் பொழுது, தங்களை மீட்டெடுக்க தடுமாறிவருகையில், ஒரு சாதாரண விவசாயக் கூலித்தொழிலாளியின் மகனை கரம்பற்றி, தானும் அதிகம் கற்றவரில்லை, தன் கணவரும் அதிகம் கற்றவரில்லை என்ற நிலையில், தோல்வியிலிருந்து மீள்வது என்பது மிக எளிதான காரியம் அன்று. ஆனால் தன் பொறுமையாளும், நிதானமான அணுகுமுறையாலும் இளம் வயதிலேயே சாதித்துக்காட்டியுள்ளார் இப்பெண்மணி.
கணவர் தொழிலில் தோல்வி கண்டபொழுது மட்டுமல்ல, அரசியல் தோல்விகளிலும் தோள்கொடுத்து உதவியவர் திருமதி.தீபா அவர்கள். தீவிர கேப்டன்.விஜயகாந்த் இரசிகரான திரு.சுந்தர் (எ) அழகர்சாமியை (இவர் பற்றி மேலும் விபரங்களை அறிய நீலநிறத்திலுள்ள பெயரை க்ளிக் செய்யவும்) மணமுடித்ததின் மூலம் அரசியல் வாழ்க்கையும் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது திருமதி.தீபா அவர்களுக்கு. தேமுதிக-வில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றிய திரு.சுந்தர் அவர்களுக்கு, 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி மன்றத்தேர்தலில்,மளிருக்கு ஒதுக்கப்பட்ட திருமங்கலம் ஒன்றியம் 7-ஆவது ஒன்றியக்குழு உறுப்பினர் தேர்தலில் போட்டியிடக் கட்சி கட்டளையிட்டபொழுது, கணவரின் கடும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் போட்டியிட்ட திருமதி.தீபா அவர்கள் வெற்றியின் விளிம்பு வரை வந்து சொற்ப வாக்குகளில் வெற்றி வாய்ப்பை இழந்தார். 2011-க்குப்பின் தேமுதிக கட்சி தேர்தல்களில் அடுத்தடுத்து பெரும் தோல்விகளையும், வாக்கு சதவீதத்தில் பெரும் சரிவையும் சந்தித்து வந்தது. ஆனால் இதற்கெல்லாம் துவண்டுவிடாமல் ,தாங்கள் பதவிகளுக்கோ, பணத்திற்கோ இயக்கதில் இணைந்தவர்களல்ல என்பதை மெய்ப்பிக்கும்பொருட்டு, தன் கணவரின் அரசியல் செயல்பாடுகளுக்கு தொடர்ந்து ஒத்துழைப்பை நல்கிவந்தார் திருமதி.தீபா அவர்கள். அதற்கு பலன் கிட்டாமல் போகவில்லை, கடந்த 2019-டிசம்பர் மாதம் நடைபெற்ற உள்ளாட்சி மன்றத்தேர்தலில் அதே ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு தேமுதிக சார்பில் போட்டியிட்டு, திருமங்கலம் ஒன்றியம், 7-ஆவது வார்டு ஒன்றியக்குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் திருமதி.தீபா அவர்கள்.
எளிய மக்களாக இருந்தபொழுதிலும், கொண்ட கொள்கையில் சமரசமில்லாமல், பணம், பதவிகளுக்கு ஆசைப்படாமல், ஆட்சிக்கு வரும் வாய்ப்பு அதிகம் தென்படாத கட்சியில் பயணிப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. ஆளுகின்ற கட்சி அல்லது ஆண்ட கட்சிகளில் பணியாற்றுவது வேறு, ஆனால் அதற்கு வாய்ப்பில்லாத கட்சிகளில் பயணிக்கையில் செலவளிக்கப்படும் ஒவ்வொரு காசும் எந்தப் பயனையும் பெற்றுத்தர உத்தரவாதமில்லாதது. அப்படிப்பட்ட நிலையில் கொள்கையுறுதியோடு பயணித்து, தங்கள் யாருக்கும் சளைத்தவர்களல்ல என்று நிரூபித்துள்ளனர் திருமதி.தீபா தம்பதியினர். தங்களுக்குக் கிடத்த இந்த பொன்னான வாய்ப்பை பயன்படுத்தி சாதி,மதம்,இனம், மொழி பாகுபாடின்றி அனைத்து தரப்பு மக்களுக்கும் உழைத்து சமுதாயத்திற்கு, வாய்ப்பளித்த கட்சிக்கும் பெருமை சேர்த்திட வேண்டுமாய் அன்புடன் வேண்டி வாழ்த்துகிறோம்.