🔴 LIVE | முப்பெரும் விழா 2023


அரசியல் வானில் ஒளிரும் நட்சத்திரம்-மதுரை.திரு.A.சுந்தர்.

திரு.A.சுந்தர்(எ) அழகர்சாமி அவர்கள் 06.12.1981-இல் மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகேயுள்ள கப்பலூரில் திரு.அழகர்சாமி – திருமதி.பாண்டியம்மாள் தம்பதினருக்கு விவசாயப்பணியாளர்கள் குடும்பத்தில் மகனாகப் பிறந்தார். இவர் நடுநிலைப்பள்ளி வரை கல்வி பயின்றுள்ளார். இவருக்கு திருமணமாகி திருமதி.A.தீபா (இவர் பற்றி மேலும் விபரங்களை அறிய நீலநிறத்திலுள்ள பெயரை க்ளிக் செய்யவும்) என்கிற மனைவியும், A.ஷிவானி என்ற மகளும் உள்ளனர்.


விவசாயக் கூலித்தொழிலாளர் குடும்பத்தில் பிறந்து, உயர்கல்வி பயில்வதற்க்கு வாய்ப்புகிட்டாமல் போனாலும், அதுபற்றியெல்லாம் கவலைப்படாமல் கிடைத்த வேலைகளில் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வந்தார். அந்நிலையில், சுய தொழிலில் நாட்டம் ஏற்படவே அதிலும் முயன்று பார்த்தவர், சிலகாலம் சணல்கோணி அரவை ஆலை ஒன்றை நிறுவி நடத்திவந்தார். தொழில்புரட்சியால் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்துவிடவே, அத்தொழில் நலிவுற்ற நிலையில் தற்பொழுது பலசரக்குகடை நடத்தி வருகிறார் திரு.சுந்தர் அவர்கள்.

புரட்சிக் கலைஞர்.கேப்டன்.விஜயகாந்த் அவர்களின் நற்பணிமன்றத்திலிருந்து அரசியலுக்கு வந்தவர் திரு.சுந்தர் அவர்கள். கேப்டன் அவர்கள் தேமுதிக வை 2005-ல் துவங்கியதிலிருந்து அக்கட்சியில் இணைந்து தீவிரமாகப் பணியாற்றி வருகிறார். 2005-லிருந்து தேமுதிக-வில் மாவட்டப் பிரதிநியாக சுமார் 6 ஆண்டுகள் பணியாற்றியவர்,கட்சி நடத்திய விலைவாசி உயர்வுக்கெதிரான போராட்டம், கரும்பு விவசாயிகளுக்கான போரட்டம், கேஸ் சிலிண்டர் விலை உயர்வுக்கெதிரான போராட்டம் என பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டுள்ளார். தன் தீவிரமான கட்சிப்பணியின் காரணமாக கடந்த 8 வருடங்களாக ஒன்றிய துணைச்செயலாளராகப் பணியாற்றி வருகிறார். சமுதாயப் பணி செய்பவர்களை ஆதரித்து தன்னால் இயன்றதை கொடுத்து உதவி வருகிறார் திரு.சுந்தர் அவர்கள்.

தேர்தல் களத்தை 2011-ஆம் ஆண்டு முதல் சந்தித்து வருகிறார் திரு.சுந்தர் அவர்கள். இவர் வகிக்கும் பகுதி மகளிருக்கு ஓதுக்கப்பட்ட தொகுதியாக இருப்பதால் தன் துணைவியார் திருமதி.தீபா சுந்தர் (இவர் பற்றி மேலும் விபரங்களை அறிய நீலநிறத்திலுள்ள பெயரை க்ளிக் செய்யவும்) அவர்களை 2011-ஆம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிக சார்பில் திருமங்கலம் ஒன்றியம் 7-ஆவது ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு களமிறக்கியவர் மிக சொற்ப ஓட்டுகளில் வெற்றி வாய்ப்பை இழந்தார். இந்தத் தோல்வி சாதாரண மனிதனான திரு.சுந்தர் அவர்களின் மனஉறுதியை அசைத்துவிட முடியவில்லை. கட்சி 2014,2016, 2019-களில் நடைபெற்ற தேர்தல்களில் கடும் தோல்வியை சந்தித்தபொழுதும், சோர்ந்துவிடாமல் கட்சிப்பணியையும், பொதுமக்கள் சேவையையும் தொடர்ந்து வந்தார். இதனால் இவருக்கான வாய்ப்பு களத்தில் அப்படியே காத்துக்கிடந்தது. 2019-டிசம்பர் மாதம் நடைபெற்ற உள்ளாட்சித்தேர்தலில் மீண்டும் அதே தொகுதியில் கூட்டணிக்கட்சியான அஇஅதிமுக ஆதரவுடன், தேமுதிக-சார்பில் தன் துணைவியார் திருமதி.தீபா சுந்தரைக் களமிறக்கி வெற்றிவாகை சூடினார்.


வசதி வாய்ப்பு, கல்வித்தகுதி,சமுதாய பலம் என அனைத்தும் வாய்த்தும் பலர் அரசியலில் இருபது, முப்பது ஆண்டுகளாக தொடங்கிய அதே இடத்தில் பயணித்து வருபவர்கள் சமுதாயத்தில் நிரம்பியுள்ளதைக் காண்கிறோம். இந்த வாய்ப்புகள் ஏதுமற்ற, எளிய மனிதன் திரு.சுந்தர் அவர்கள், எதையும் குறையாகவோ, தடையாகவோ எண்ணிவிடாமல் துணிந்து அரசியல் களம் கண்டு கட்சிப் பதவியானாலும், அரசியல் பதவியானாலும் தனக்கான இடத்தை தக்கவைத்துக்கொண்டு முன்னேறி வருவது உண்மையில் மகிழ்ச்சியைத் தரும் விசயம் என்றால் மிகையல்ல. திரு.சுந்தர் போன்ற இளைய தலைமுறை தலைவர்களால் சமுதாயம் பெருமை கொள்கிறது. தனக்கு கிடைத்த இந்தப் பொன்னான வாய்ப்பைப்பயன்படுத்தி சாதி,மத,மொழி,இன,கட்சி பேதமின்றி சகலருக்கும் பணியாற்றி சமுதாயத்திற்கும், சார்ந்திருக்கும் கட்சிக்கும் பெருமை சேர்க்க வேண்டுமாய் அன்புடன் வேண்டி வாழ்த்துகிறோம்

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved