அரசியல் பிரபலங்கள் - மணிமங்கலம் - திரு.K.யுவராஜ்
திரு.K.யுவராஜ் அவர்கள் 29.04.1967-இல் கரூர் மாவட்டம், மணிமங்கலம் அருகேயுள்ள மணல்மேடு கிராமத்தில் திரு.கந்தசாமி நாயக்கர் – திருமதி.ராமாயிஅம்மாள் தம்பதியினருக்கு விவசாய குடும்பத்தில் மகனாகப்பிறந்தார். வரலாற்று துறையில் இளங்கலை (B.Sc) பட்டம் பெற்றுள்ளார். இவருக்கு திருமணமாகி திருமதி.Y.விஜயலட்சுமி என்ற மனைவியும் Y.தனலட்சுமி என்ற மகளும், Y.சதிஷ் குமார் என்ற மகனும் உள்ளனர்.
மாணவப்பருவத்திலிருந்தே அதிமுக பற்றாளராக வளர்ந்தவர், கட்சியின் அடிமட்டத்தொண்டராக இணைந்து பணியாற்றி வந்தார். கட்சியின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் ஆற்வமுடன் பங்கேற்று வந்தவர்,பொதுக்கூட்டங்கள், மாநாடுகள், போராட்டங்களில் பங்கேற்றதுடன், தேர்தல் பிரச்சாரங்களிலும் தீவிரமாக ஈடுபட்டு வந்துள்ளார். 1996 முதல் 2001 வரை மணல்மேடு கூட்டுறவு சங்கத்தின் தலைவராக பொறுப்பு வகித்து வந்துள்ள திரு.யுவராஜ் அவர்கள், அதனைத் தொடர்ந்து 2001 ஆம் ஆண்டு முதல் கிளைக்கழக செயலாளராக பொறுப்பு வகித்துள்ளார்.
2011 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு தாளப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார். திரு.யுவராஜ் அவர்கள் ஊராட்சி மன்ற தலைவராக பணியாற்றிய காலத்தில் ஏழை-எளியவர்களுக்கு தொகுப்பு வீடுகள், முதியோர் உதவித்தொகை, விவசாய மானியம் தவிர, அடிப்படைத் தேவைகளான குடிநீர் வசதி, தெருவிளக்குகள், சாலை வசதி, சுகாதார கழிப்பிட வசதி, சாக்கடை வசதி, பள்ளிசுற்றுச்சுவர், அங்கன்வாடி மையம், மயானப்பாதை, தகனமேடை போன்ற பல்வேறு நலத்திட்டங்களையும் சிறப்பாக நிறைவேற்றியுள்ளார்.
தனது பதவிக்காலத்திற்குப்பிறகும், தொடர்ந்து இயக்கத்திலும், பொதுவாழ்விலும் ஈடுபட்டு வரும் திரு.யுவராஜ் அவர்கள், சாதி,மத,இன,மொழி பாகுபாடின்றி, அனைத்து தரப்பு மக்களின் சுக-துக்கங்களிலும் பங்கெடுத்து, சாமானியர்கள் எளிதில் அணுகி, குறைகளை நிவர்த்தி செய்யும் வகையில் எளிமையான வாழ்க்கைக்கு சொந்தக்கார்ர். எதிர்வரும் காலங்களில் மேலும் பல வெற்றிகளை குவித்து, புதிய பொறுப்புகளை அடைந்து, சார்ந்துள்ள கட்சிக்கும், சமுதாயத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டி அன்புடன் வாழ்த்துகிறோம்.