அரசியல் வானில் ஒளிரும் நட்சத்திரம்-திருச்சுழி.திரு. T.மலைராஜ்
திரு.T.மலைராஜ் அவர்கள் 21.11.1982-இல் விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகேயுள்ள ரெங்கையன்பட்டி கிராமத்தில் திரு.தங்ககுருசாமி- திருமதி.காசியம்மாள் தம்பதியினருக்கு விவசாயக்குடும்பத்தில் மகனாகப் பிறந்தார். நடுநிலைப்பள்ளி வரை படித்தவர் பின்னர் பெற்றோர்களுக்கு உதவியாக விவசாயப் பணியில் ஈடுபட்டார். இவருக்கு திருமணமாகி திருமதி.M.பாண்டியலட்சுமி என்ற மனைவியும், T.மதுஸ்ரீ என்ற மகளும், T.மதன்குமார் என்ற மகனும் உள்ளனர்.
திரு.மலைராஜ் அவர்களின் தந்தையார் திரு.தங்ககுருசாமி அவர்கள் அஇஅதிமுக-வில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக கிளைக்கழக செயலாளராக பணியாற்றிவருகிறார், எனவே அரசியல் பின்னனி என்பது இயல்பாகவே திரு.மலைராஜன் அவர்களுக்கு கிட்டியது. இருந்தபோதிலும், முழுநேர அரசியலில் அதிக நாட்டமில்லாதவர், தொழில்துறையில் விருப்பம் கொண்டு கட்டுமானத்துறையில் கால்பதித்தார். தற்பொழுது திருச்சுழி மற்றும் அருப்புக்கோட்டை பகுதிகளில் கட்டுமானப்பணிகளை மேற்கொண்டுவருகிறார். திரு.மலைராஜன் அவர்களுக்கு அரசியலில் ஆர்வமில்லாவிட்டாலும் சமுதாயப்பணியில் அதிகம் நாட்டம் கொண்டிருந்தார். அந்தவகையில் அருப்புக்கோட்டையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தில் முக்கிய செயல்பாட்டாளர் திரு.மலைராஜ். இந்த அமைப்பின் மூலம் சுற்றுவட்டாரத்திலுள்ள பல்வேறு கிராமங்களுக்கு சென்று சமுதாயப்பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் 2019-டிசம்பர் மாதம் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் சேதுபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் வேட்பாளராக தனது துணைவியார். திருமதி.பாண்டியலட்சுமி மலைராஜ் அவர்களை களமிறக்கி வெற்றிவாகை சூடியுள்ளார். சமுதாயப்பணியின் பின்னனியோடு பொதுவாழ்விற்கு வந்திருந்தாலும், திரு.மலைராஜ் தம்பதியினர் தங்களை ஆதரித்து வெற்றிவாய்ப்பளித்த மக்களுக்கு சாதி,மதம், இனம்,மொழி பாகுபாடின்றி அனைவருக்கும் அர்ப்பணிப்புடன் பணியாற்றி தங்களை அனைத்து தரப்பினருக்குமான தலைவராக மக்கள் நம்பும்படி செயலாற்றிடவேண்டும். இளம் அரசியல் தலைவராக உருவெடுக்கும் திரு.மலைராஜ் அவர்கள் அரசியல் களத்தில் அடுத்தடுத்த நிலைகளில் உயர்ந்து சமுதாயத்திற்கு பெருமை சேர்க்க வேண்டுமாய் அன்புடன் வேண்டி வாழ்த்துகிறோம்.