🔴 LIVE | முப்பெரும் விழா 2023


ஊராட்சி மன்றத் தலைவர்-திருப்பூர்.திருமதி.பேபி அப்புசாமி

திருமதி.பேபி அப்புசாமி அவர்கள் திருப்பூர் மாவட்டம், திருப்பூர் அருகேயுள்ள பாப்பநாயக்கனூர் கிராமத்தில் திரு.நடராஜ்-திருமதி.மாரம்மாள் தம்பதினருக்கு விவசாயக் குடும்பத்தில் மகளாகப் பிறந்தார். நடுநிலைப்பள்ளி வரை பயின்றுள்ளார். திருப்பூர், ஊத்துக்குளி அருகேயுள்ள ரெட்டைகிணறு திரு.அப்புசாமி (இவர் பற்றி மேலும் விபரங்களை அறிய நீலநிறத்திலுள்ள பெயரை க்ளிக் செய்யவும்) அவர்களை மணமுடித்துள்ள இத்தம்பதியினருக்கு A.தாரணி என்ற மகளும் A.நந்தகோபால் என்ற மகனும் உள்ளனர்.


திருமணத்திற்கு முன்பிருந்தே தீவிர அரசியலில் ஈடுபட்டுவரும் திரு.அப்புசாமி அவர்களை மணந்ததின் மூலம் அன்றிலிருந்தே அரசியலை பார்த்து வந்தவர் என்கிற வகையில் அரசியல் இவருக்கு புதிதல்ல. அதைத்தாண்டி கணவர் சார்ந்திருக்கும் மதிமுக இயக்கம் தமிழக அரசியல் வரலாற்றில் தேர்தல் அரசியலில் பெரும் தோல்விகளையும், சறுக்கள்களையும், விமர்சனைங்களையும் சந்தித்த இயக்கம் என்பது எல்லோரும் அறிந்த ஒன்று. அதேவேளையில் மிக அதிகப்படியான போராட்டங்களையும், வழக்குகளையும் சந்தித்த இயக்கமும் கூட. இவற்றையெல்லாம் தாண்டி மக்களின் நேரடித்தொடர்புக்கு அதிக வாய்ப்பில்லாத ஒரு மாநிலங்களவை உறுப்பினரால் தோற்றுவிக்கப்பட்டு, ஆட்சி அதிகாரத்தின் வாசமில்லாமல் கால் நூற்றாண்டுகாலத்திற்கும் மேலாக இயங்கிக்கொண்டிருக்கும் கட்சியில், தனது கணவர் ஒன்றியத் துணைச்செயலாளராக பணியாற்றி வருவது என்பது நிச்சயம் பதவி, பொருளாதார ஆதாயம் தேடாமல் ஏற்றுக்கொண்ட கொள்கைக்கு விசுவாசமாக இருப்பது என்பது மதியுடையோர் எளிதில் புரிந்துகொள்ளக்கூடியது. அந்தவகையில் கணவரின் கொள்கை சார்ந்த அரசியலைப் பார்த்தும், கேட்டும், வளர்ந்து பக்குவம் பெற்றவர் திருமதி.பேபி அவர்கள். ஆதலால் தான் கணவர் இருமுறை போட்டியிட்டு தோல்வியடைந்த பொழுதும் அவரால் கணவருக்கு ஆதரவாகவும், ஊக்கமளிப்பவராகவும் இருக்க முடிந்தது.

சார்ந்திருக்கும் கட்சியைப்போலவே கணவர் தொடர்தோல்விகளை சந்தித்தபொழுதும், அவரின் 15 ஆண்டுகால காத்திருப்பில் பெரும்பங்காற்றியவர், 2011-ஆம் ஆண்டில் திரு.அப்புசாமி அவர்கள் பள்ளவராயன்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டபொழுது இன்னும் கூடுதலான பக்குவத்தைப்பெற்றார். அரசியல் அதிகாரத்திலிருப்பவர்களின் வீழ்ச்சிக்கு குடும்பத்தார்களின் அத்துமீறல்களும், ஆணவப்போக்குகளும் காரணமாக இருந்துள்ளதை நாம் சமகால அரசியலில் பார்க்கின்றோம். ஆனால் திருமதி.பேபி அவர்கள் அதிலிருந்து முற்றிலும் மாறுபட்டிருந்தார். அந்த அணுகுமுறைக்கு பலனில்லாமல் போகவில்லை, தொகுதி மறுசீரமைப்புக்குப்பின் 2019-டிசம்பர் மாதம் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பள்ளவராயன்பாளையம் ஊராட்சி மகளிருக்கு ஒதுக்கப்பட்டபொழுது களம் கண்ட திருமதி.பேபி அவர்கள் மகத்தான வெற்றி பெற்றார்கள்.


கணவரின் நீண்ட கால அரசியலை பார்த்து அனைத்தையும் உள்வாங்கிக்கொண்டு, எதிர்பாராத சந்தர்ப்பத்தில் களம்காண வேண்டிய சூழலில் துணிச்சலாக போட்டியிட்டு வெற்றிவாகை சூடியதின் மூலம் திரு.அப்புசாமி (இவர் பற்றி மேலும் விபரங்களை அறிய நீலநிறத்திலுள்ள பெயரை க்ளிக் செய்யவும்)   அவர்களின் அரசியலுக்கு வலுசேர்த்துள்ளார் திருமதி.பேபி அவர்கள்.  ஊராட்சி மன்றத்தலைவராக திருமதி.பேபி அவர்கள் சாதி,மத,மொழி,இன பாகுபாடின்றி அனைவருக்காகவும் பணியாற்றி, சார்ந்திருக்கும் கட்சிக்கும், சமுதாயத்திற்கும் பெருமை சேர்த்திட வேண்டுமாய் அன்புடன் வேண்டி வாழ்த்துகிறோம்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved