அரசியல் வானில் ஒளிரும் நட்சத்திரம்-அரவக்குறிச்சி.திரு.A.ஆனந்தகுமார்.
திரு.A.ஆனந்தகுமார்.M.Sc.,B.Ed., அவர்கள் 18.02.1987-ல் கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி, அருகேயுள்ள கரடிபட்டி கிராமத்தில் திரு.M.அண்ணாதுரை – திருமதி.A.ரேவதி தம்பதியினருக்கு விவசாயக் குடும்பத்தில் மகனாகப் பிறந்தார். இவர் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை (M.Sc) பட்டம் பெற்றவர், பின்னர் நாமக்கல் பாவை கல்வியியல் கல்லூரியில் கல்வியியல் (B.Ed) பட்டம் பெற்றார். இவருக்கு திருமணமாகி A.சங்கீதா என்ற மனைவியும் A. சாய் வெற்றிவேல் என்ற மகனும், A.மீனாட்சி என்ற மகளும் உள்ளனர்.
சமுதாயத்திலும்,அரசியலிலும் நீண்ட நெடிய பாரம்பரியமும், புகழுக்கும் உரிய குடும்பத்தைச் சேர்ந்தவர் திரு.ஆனந்தகுமார் அவர்கள். திராவிட இயக்கத்தில் மிகுந்த பற்றுக்கொண்ட இவரின் தாத்தா திரு. S.மல்லையன் அவர்களும், தந்தையார் திரு.M.அண்ணாதுரை அவர்களும் அரவக்குறிச்சி ஒன்றிய பெருந்தலைவர்களாகவும், பேரூராட்சித் தலைவர்களாகவும், பதவி வகித்த பெருமைக்குரியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தவிர திரு.S.மல்லையன் (இவர் பற்றி மேலும் விபரங்களை அறிய நீலநிறத்திலுள்ள பெயரை க்ளிக் செய்யவும்) அவர்கள் திமுகழகத்தின் அரவக்குறிச்சி ஒன்றிய செயலாளராக நெடுங்காலம் பதவி வகித்தவர். அதேபோல் தந்தையார் திரு.M.அண்ணாதுரை (இவர் பற்றி மேலும் விபரங்களை அறிய நீலநிறத்திலுள்ள பெயரை க்ளிக் செய்யவும்) அவர்கள் திமுகழகத்தின் அரவக்குறிச்சி நகரச் செயலாளர்களாக நீண்ட காலம் பதவி வகித்து வருகிறார்.
பூர்வீகமாக திராவிட முன்னேற்ற கழகத்துடன் இரண்டரக்கலந்து விட்ட அரசியல் குடும்பமாக இருப்பதால், இவரும் குழந்தைப் பருவத்திலிருந்தே திராவிட முன்னேற்றக் கழக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது இயல்பாகிப்போனது என்றால் மிகையல்ல. தனது கல்லூரி படிப்பை முடித்த கணத்திலிருந்து நேரடி அரசியலில் தீவிரமாக பங்கெடுத்தவர், 2011- ஆம் ஆண்டு முதல் திராவிட முன்னேற்றக் கழகத்தில் அரவக்குறிச்சி நகர இளைஞர் அணி அமைப்பாளராக பொறுப்பு வகித்து வருகிறார். அரசியல், விவசாயம் தவிர தொழில்துறையிலும் நாட்டமுடையவர் ஸ்ரீ மீனாட்சி பிளக்ஸ் பிரிண்டிங் கம்ப்யூட்டர் & ஜெராக்ஸ் என்ற நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். சமுதாயத்தின் மீது மிகுந்த பற்றுக்கொண்டவர், பல்வேறு சமுதாய அமைப்புகள் நடத்தும் விழாக்களில் பங்கேற்கத் தவறுவதில்லை.
நமது சமுதாயத்தில் வளர்ந்து வரும் இளம் அரசியல் தலைவரான திரு.ஆனந்தகுமார் அவர்கள் பொதுவாழ்வில் சாதி,மத, இனம், மொழி அடையாளங்களைக் கடந்து அனைவருக்கும் பணியாற்றுவதே சமுதாயத்திற்கு பெருமையும், வலுச்சேர்ப்பதாகவும் அமையும். திரு.ஆனந்தகுமார் அவர்கள் அரசியல் வானில் பன்னெடுங்காலம் பயணித்து, பணுயாற்றிட அன்புடன் வாழ்த்துகிறோம்.