🔴 LIVE | முப்பெரும் விழா 2023


அரசியல் பிரபலங்கள் - கரூர் - திரு.B.பழனிவேல்

திரு.பழனிவேல் 02.06.1974-ல் கரூர் மாவட்டம், கரூர் நகரில் திரு.பொம்மா நாயக்கர் – திருமதி. பொம்மாயி அம்மாள் தம்பதியினருக்கு விவசாயக் குடும்பத்தில் மகனாகப் பிறந்தார். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் அரசியல்துறையில் இளங்கலை பட்டம் (B.A.,Political Science) பெற்றுள்ளார். இவருக்கு  திருமணமாகி திருமதி.P.காயத்திரிதேவி என்ற மனைவியும், A.P.மோகன்குமார், என்ற மகனும்,  P.பிருத்திகா என்ற மகளும் உள்ளனர். 


கல்லூரி படிப்பை முடித்து டெக்ஸ்டைல்ஸ்துறையில் கால்பதித்த திரு.பழனிவேல் அவர்கள் மோனா டெக்ஸ்டைல்ஸ் என்ற நிறுவனத்தில் இணைந்து உற்பத்தி மற்றும் விற்பனை என இரண்டுதுறையிலும் 5 ஆண்டு காலம் அனுபவம் பெற்றார். பின்னர் சொந்தமாக Texworths  என்ற நிறுவனத்தை தொடங்கி, வீட்டு உபயோகங்களுக்கான பொருட்களை உற்பத்தி செய்து கனடா, இங்கிலாந்து, ஸ்வீடன், டென்மார்க், அமெரிக்கா போன்ற பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துவருகிறார். 

மாணவப்பருவத்திலிருந்தே அரசியலில் தீவிர ஆர்வமுடைய திரு.பழனிவேல் அவர்கள், தந்தையார் திரு.பொம்மா நாயக்கர் அவர்களின் அடியோற்றி திமுக-வில் இணைந்து பணியாற்றத் துவங்கினார். திமுக-வில் நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக இருந்த திரு.வைகோ அவர்களின் நாடாளுமன்ற உரைகளிலும், மேடைப்பேச்சிலும் கவரப்பட்ட திரு.பழனிவேல் அவர்கள், திரு.வைகோ அவர்களின் தீவிர ஆதரவாளராக இருந்துவந்தார். இந்நிலையில் 1993-ல் திரு.வைகோ அவர்கள் மறுமலர்ச்சி தி.மு.க-வைத் துவங்கியபொழுது மதிமுக-வில் இணைந்தவர், 1995 ஆம் ஆண்டு தாந்தோணி நகர செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1997-ல் ஒன்றிய மாவட்ட மாணவரணி துணைச்செயலாளர் பதவியில் நியமிக்கப்பட்ட திரு.பழனிவேல் அவர்கள், அதன்பின் மாவட்ட இளைஞரணி அமைப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். நகரம், ஒன்றியம், மாவட்டம் என கட்சியில் படிப்படியாக அடுத்தடுத்த நிலைக்கு உயர்ந்த திரு.பழனிவேல் அவர்கள், 2018-இல் மாநில மாணவரணி துணைச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றிவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


கடுமையான பணிநெருக்கடிக்கிடையில் கட்சிப்பணிகளிலும் ஈடுபட்டுவரும் திரு.பழனிவேல் அவர்கள், திரு.வைகோ அவர்களின் மேற்கொண்ட எழுச்சி நடைபயணம், முல்லைப்பெரியாறு விழிப்புணர்வு நடைபயணங்களில் கலந்துகொண்டுள்ளார். மேலும் கட்சி நடத்திய அனைத்து மாநாடுகளிலும் கலந்து கொண்டுள்ள திரு.பழனிவேல் அவர்கள், கட்சியின் பொதுக்கூட்டங்கள், நிகழ்ச்சிகளிலும், மறியல், ஆர்ப்பாட்டம், போராட்டங்களிலும் பங்கேற்றுள்ளார்.

திரு.வைகோ அவர்களின் நேரடி தொடர்புடன் அன்பையும், நன்மதிப்பையும் பெற்றவரான திரு.பழனிவேல் அவர்கள் சமுதாயத்தில் குறிப்பிடத்தக்க அரசியல் தலைவர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. சமுதாய மக்களிடையே நல்ல தொடர்பும், நம்பிக்கையையும் பெற்றுள்ள திரு.பழனிவேல் அவர்கள் அரசியல் மற்றும் தொழில்துறையிலும் புதிய உச்சங்களை தொட்டு, பொதுவெளியில் சமுதாயத்தின் முக்கிய முகமாக திகழ அன்புடன் வாழ்த்துகிறோம்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved