🔴 LIVE | முப்பெரும் விழா 2023


ஒன்றியக்குழு உறுப்பினர் -கோவை.திருமதி.ஜெயஸ்ரீ செல்வக்குமார்

திருமதி. ஜெயஸ்ரீ செல்வக்குமார் அவர்கள் 25.12.1977-இல் கோயமுத்தூர் மாவட்டம், கோவைப்புதூரில் திரு.கிருஷ்ணசாமி – திருமதி.அமுதா தம்பதியினருக்கு விவசாயக் குடும்பத்தில் மகளாகப் பிறந்தார். மேல்நிலைப்பள்ளி வரை கல்வி பயின்றுள்ளார். கோவை மாவட்டம், ஆறுமுகக்கவுண்டனூரைச் சேர்ந்த திரு. செல்வக்குமார் (இவர் பற்றி மேலும் விபரங்களை அறிய நீலநிறத்திலுள்ள பெயரை க்ளிக் செய்யவும்) அவர்களை மணமுடித்துள்ள இத் தம்பதியினருக்கு, S.அருண்குமார் மற்றும் S. பிரசன்னகுமார் என்ற இரு மகன்கள் உள்ளனர்.


மிகநீண்ட திராவிட இயக்க அரசியல் பாரம்பரியமிக்க குடும்பத்தில் மருமகளானதிலிருந்தே அரசியலை நேரடியாக கண்காணித்து வருபவர், அந்த வகையில் அரசியல் பரிட்சயம் உள்ளவரே திருமதி.ஜெயஸ்ரீ அவர்கள். தனது கணவர் 2001, 2006 மற்றும் 2011 உள்ளாட்சித் தேர்தல்களில் களம்கண்டபொழுது நேரடி அரசியல் பிரச்சாரத்திலும் பங்கேற்ற அனுபவமுள்ளவருக்கு, தேர்தல் அரசியலைத்தாண்டி கட்சி அரசியல் மட்டுமே புதியது எனலாம். திமுகழகத்தின் கிளைக்கழக செயலாளர், ஊராட்சிக்கழக செயலாளர் என கணவர் திரு.செல்வக்குமார் அவர்கள் பணியாற்றி வரும் நிலையில் குடும்பம், தொழில் மற்றும் விவசாய நிர்வாகத்தை திறம்படக் கையாள்வதின் மூலம், திரு.செல்வக்குமார் அவர்கள் தனது அரசியல் பணியை முழுவீச்சில், அர்ப்பணிப்புடன் பணியாற்றும் வாய்ப்பை பெறுகிறார். அந்தவகையில் திருமதி.ஜெயஸ்ரீ அவர்கள் முழுநேரத்தொண்டரை இயக்கத்திற்கு ஒப்படைத்திருந்த நிலையில், ஆகஸ்ட்'2020-ல் நடைபெற்ற உள்கட்சித்தேர்தலில் திருமதி.ஜெயஸ்ரீ அவர்களுக்கும் கோவை கிழக்கு மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டதின் மூலம் தன்னையும் முழுநேர கழகத்தொண்டராக அர்ப்பணித்துள்ளார். 

இதுவரை கட்சி அரசியல் நேரடியாகத் தொடர்புபடுத்திக்கொள்ளும் வாய்ப்பில்லாமல், கணவரின் அரசியல் பணிக்கு துணைநின்றவர், 2019-டிசம்பர் மாதம் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் மூலம் நேரடி அரசியலில் ஈடுபடவேண்டிய சூழல் ஏற்பட்டது.கணவரின் உழைப்பை அங்கீகரித்து தொண்டாமுத்தூர் ஒன்றியம், 8-வது ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் வாய்ப்பினை வழங்கியபொழுது, மகளிருக்கு ஒதுக்கப்பட்டிருந்த அந்த தொகுதில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராகக் களமிறங்கி ஒன்றியக்குழு உறுப்பினராக வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


உள்ளாட்சி மன்றத் தேர்தல் மூலம் சமுதாயத்திற்கு நல்ல தகுதியும், திறமையுமிக்க பெண்தலைவர்களைப் பெறும் வாய்ப்பினைப் பெற்றுள்ளதில் மிக்க மகிழ்ச்சியே. சமுதாய ஆண்மக்கள் தங்கள் தகுதியை வளர்த்துக்கொண்டு அடுத்தடுத்த நிலைகளுக்கு செல்வதில் தயக்கம் காட்டும் சூழலில், பெண்கள் துணிந்து களமிறங்கி வெற்றிவாகை சூடுவது சமுதாயத்தை பெருமைகொள்ளச் செய்கிறது. எனவே சமுதாயம் இப்படிப்பட்ட மகளிருக்கு தங்களின் ஒட்டுமொத்த ஆதரவையும், ஊக்கத்தையும் வழங்க வேண்டும். தனக்குக் கிடைத்த இந்த வாய்ப்பின் மூலம் திருமதி.ஜெயஸ்ரீ அவர்கள் சாதி,மதம், இனம், மொழி தாண்டி அனைவருக்காகவும் மிகச் சிறப்பாக பணியாற்றி, வாய்ப்பளித்த கட்சிக்கும், மக்களுக்கும் பெருமை சேர்த்திட வேண்டுமாய் அன்புடன் வேண்டி வாழ்த்துகிறோம்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved