அரசியல் பிரபலங்கள் - தூத்துக்குடி - திரு.முருகபூபதி
திரு.முருகபூபதி அவர்கள் 10.03.1962-இல் தூத்துக்குடியில் திரு.போடிராஜ் நாயக்கர் – திருமதி.குமரவேலம்மாள் தம்பதியினருக்கு விவசாயக் குடும்பத்தில் மகனாகப் பிறந்தார். இவர் மேல்நிலைப் பள்ளி கல்வி வரை பயின்றுள்ளார். இவருக்கு திருமணமாகி திருமதி.M.பாக்கியலட்சுமி என்ற மனைவியும் M.முல்லை சித்ரா, M.இராஜகுமாரி என்ற இரு மகள்களும் M.இராஜகோபாலன் என்ற மகனும் உள்ளனர். தூத்துக்குடியில் பைனான்ஸ் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
இளம் வயதிலிருந்தே அரசியலில் மிகுந்த ஆர்வம் கொண்ட திரு.முருகபூபதி அவர்கள் 1977 ஆம் ஆண்டு திமுக-வில் அடிப்படை உறுப்பினராக இணைந்தார். 1989 முதல் தொடர்ந்து பத்து வருடங்களாக தூத்துக்குடி வட்ட செயலாளராக பணியாற்றியுள்ளார். அதன் பின் 1993-ஆம் ஆண்டு திரு.வைகோ அவர்கள் மதிமுக-வைத் துவங்கியபொழுது, அக்கட்சியில் இணைந்து வட்ட செயலாளராக நான்கு ஆண்டுகளாக பணியாற்றினார். 1997 ஆம் ஆண்டு மாநகர இளைஞரணி செயலாளராக பணியாற்றினார். 2005 ஆம் ஆண்டு மாநகர துணைச்செயலாளராக பணியாற்றினார். 2016 முதல் தற்பொழுது வரை மாநகர செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார். கட்சி நடத்தும் பொதுக்கூட்டங்கள், மாநாடுகள், மறியல், போராட்டங்கள் போன்றவற்றில் தவறாமல் கலந்து கொண்டு வருகிறார்.
அரசியல் பணியில் மட்டுமல்ல சமுதாய பணியிலும் சிறந்து விளங்கும் திரு.முருகபூபதி அவர்கள் பாஞ்சாலங்குறிச்சி ஆலய கமிட்டியின் துணைத்தலைவராக இருபது வருடங்களாக தொடர்ந்து வருகிறார். மாவீரன் கட்டபொம்மன் பிறந்தநாள், நினைவுநாளன்று தூத்துக்குடியில் கட்டபொம்மன் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்துவதுடன், விளையாட்டு போட்டிகள் நடத்தியும், அன்னதானம் வழங்கியும் வருகிறார்.
2006 , 2011 நடைபெற்ற தேர்தலில் தூத்துக்குடி மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். தோல்விக்குப் பின்னரும் அரசியலிலும், பொதுமக்கள் சேவையிலும் தொடர்ந்து ஈடுபட்டு வரும் திரு.முருகபூபதி அவர்கள் பல்வேறு பதவிகளையும், பொறுப்புகளையும் பெற்று சார்ந்திருக்கும் கட்சிக்கும், சமுதாயத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டுமாய் அன்புடன் வேண்டி வாழ்த்துகிறோம்.