🔴 LIVE | முப்பெரும் விழா 2023


அரசியல் வனில் ஒளிரும் நட்சத்திரம்-கோவை. திரு.A.செல்வக்குமார்

திரு.A.செல்வக்குமார் அவர்கள் 05.05.1975-இல் கோயமுத்தூர் மாவட்டம், பேரூர்-செட்டிபாளையம் அருகேயுள்ள ஆறுமுகக்கவுண்டனூர் கிராமத்தில் திரு.அய்யாசாமி – திருமதி.பாப்பம்மாள் தம்பதியினருக்கு விவசாயக் குடும்பத்தில் மகனாகப் பிறந்தார். மேல்நிலைப்பள்ளி வரை கல்வி பயின்றவர் பெற்றோருக்கு உதவியாக விவசாயப்பணிக்கு திரும்பினார். இவருக்கு திருமணமாகி திருமதி.S.ஜெயஸ்ரீ (இவர் பற்றி மேலும் விபரங்களை அறிய நீலநிறத்திலுள்ள பெயரை க்ளிக் செய்யவும்) என்ற மனைவியும், S.அருண்குமார் மற்றும் S. பிரசன்னகுமார் என்ற இரு மகன்களும் உள்ளனர்.


திரு.செல்வக்குமார் அவர்களின் தந்தையார் திரு.அய்யாசாமி அவர்கள் தீவிர திராவிட இயக்கப்பற்றாளராக இருந்தவர், தி.மு.கழகத்தில் கிளைக்கழக செயலாளராக நீண்டகாலம் பணியாற்றியுள்ளார். அந்தவகையில் இயல்பிலேயே, கால்சட்டைப் பருவத்திலிருந்தே திமுக-வுக்காக பல்வேறு பணிகளை மேற்கொண்டு வந்துள்ளார் திரு.செல்வக்குமார் அவர்கள். தனது தந்தையார் 2000-ஆவது ஆண்டில் மறைந்ததையடுத்து, அவர் வகித்துவந்த கிளைக்கழக செயலாளர் பொறுப்பையேற்று பொதுவாழ்க்கையில் தீவிரமாக செயல்படத்துவங்கினார். 2001 மற்றும் 2006-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல்களில் பேரூர்-செட்டிபாளையம் ஊராட்சி மன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றவர், மக்களின் அடிப்படைத்தேவைகளை நிறைவேற்றியுள்ளார். 2011 ஆம் ஆண்டு அஇஅதிமுக ஆட்சி காலத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பேரூர்-செட்டிபாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு சொற்ப வாக்குகளில் வெற்றி வாய்ப்பை இழந்தார்.

பேரூர்-செட்டிபாளையம் ஊராட்சியை உள்ளடக்கிய கிணத்துக்கடவு தொகுதி இயல்பிலேயே அஇஅதிமுக-வின் கோட்டை என்பதைத் தாண்டி, மிகவும் செல்வாக்குமிக்க உள்ளூர் அமைச்சரின் சொந்தத் தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது. அப்படிப்பட்ட தொகுதில் எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர் என்பதைத்தாண்டி, மைனாரிட்டி சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரான தனக்கு பெரிய அளவில் கட்சி பொறுப்புகளையோ, பதவிகளையோ கட்சி வழங்கிவிடாது என்பதை அறிந்தும், அதுபற்றியெல்லாம் கவலை கொள்ளாமல், ஏற்றுக்கொண்ட கட்சிக்கும், தலைமைக்கும் விசுவாசமாக, கட்சி அறிவிக்கும் பல்வேறு போராட்டங்களானாலும், மறியல்களானாலும், பொதுக்கூட்டங்களானாலும் கட்சியினரை பெருமளவில் திரட்டி கலந்து கொள்வதில் முதன்மையானவர் திரு.செல்வக்குமார் அவர்கள். 2011 தேர்தலில் தோல்வியுற்ற பின்னரும் தீவிர களப்பணியிலும், பொதுமக்கள் சேவையிலும் இடையறாது உழைத்து வந்தவர், ஜாதி, மதம் கடந்து அனைத்து மக்களின் சுக-துக்கங்களிலும் பங்கெடுத்து மக்களின் ஒருவனாக வலம் வந்தார். மேலும் கோவில் திருவிழாக்கள், விஷேசங்கள் என அனைத்திலும் தன் பங்களிப்பை உறுதி செய்து வந்தவர், 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற உள்கட்சித் தேர்தலில் பேரூர்-செட்டிபாளையம் ஊராட்சிக் கழகச் செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட  திரு.செல்வக்குமார் அவர்கள் பதிவான 85 வாக்குகளில் 80 வாக்குகளை பெற்று வெற்றுபெற்று அப்பதவியைக் கைப்பற்றினார்.

உட்கட்சிப் பதவியையே போட்டியிட்டு போராடி வென்றவர், 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், மக்களின் ஆதரவைப் கட்சிக்குப் பெற்றுக்கொடுத்து தனது ஆளுமையை நிரூபித்தார். ஆம், இவர் ஊராட்சிக் கழக செயலாளராக பொறுப்பு வகிக்கும் பேரூர்-செட்டிபாளையம் வாக்குச்சாவடியின் முப்பதாண்டுகால வரலாற்றில், 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தான் முதல்முறையாக அதிமுக வேட்பாளரைவிட சுமார் 1000 வாக்குகள் திமுகழக வேட்பாளர்க்கு கூடுதலாகப் பெற்றுத்தந்தார். அப்போது நடந்த தேர்தலில் உள்ளூர் அமைச்சரின் செல்வாக்கு நாடறிந்தது என்பதை சொல்லித் தெரியவேண்டியதில்லை.

இதனைத் தொடர்ந்து 2019-டிசம்பர் மாதம் நடைபெற்ற உள்ளாட்சி மன்றத் தேர்தலில் தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றியம் 8-வது வார்டு ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் வாய்ப்பை கட்சி திரு.செல்வக்குமாருக்கு வழங்கியது. ஒன்றியக்குழு உறுப்பினருப்பினருக்கான வாக்காளர் எண்ணிக்கை பெரும்பாலும் 5000 என்பது என்றாலும், இந்த வார்டில் மட்டும் வாக்காளர்கள் எண்ணிக்கை இருமடங்காக சுமார் 9500  வாக்காளர்களைக் கொண்டதாக இருந்தது. மேலும் ஆளும்கட்சி, பணபலம், உள்ளூர் அமைச்சர் என பல்வேறு சவால்களையும் தனது சேவையின் மீது நம்பிக்கைவைத்து எதிர்கொள்ளத்துணிந்தார். மகளிருக்கு ஒதுக்கப்பட்டிருந்த இத்தொகுதில் தனது துணைவியார் திருமதி.ஜெயஸ்ரீ செல்வக்குமாரை திமுகழக வேட்பாளராகக் களமிறக்கி, பதிவான வாக்குகளில் சுமார் 60 சதவீதமான வாக்குகளைப்பெற்று, 1000 க்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் மனைவி திருமதி.ஜெயஸ்ரீ (இவர் பற்றி மேலும் விபரங்களை அறிய நீலநிறத்திலுள்ள பெயரை க்ளிக் செய்யவும்) அவர்களை வெற்றி பெறவைத்து, தொண்டாமுத்தூர் ஒன்றியத்தின் 8-ஆவது வார்டை திமுகழகத்தின் கோட்டையாக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


தன் இடைவிடாத அரசியல் பணிகளுக்கிடையே பூர்வீக விவசாயத்துடன் செல்வக்குமார் இண்டஸ்ட்ரீஸ் என்ற பெயரில் லேத் ஓர்க்ஷாப்பும், ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். சோடைபோகாத கடின உழைப்பு,சேவையை தாண்டி, ஜாதி, மதம், மொழி, இனம் தாண்டி சக மனிதனை நேசிக்கும் பண்பாலும், தொகுதி மக்களின் அன்பைப்பெற்று வளர்ந்து வரும் திரு.செல்வக்குமார் அவர்கள், தன் தொடர்சேவையால் சமுதாயத்தை பெருமைகொள்ளச் செய்யவேண்டுமாய் அன்புடன் வேண்டி, அரசியலில் மென்மேலும் பல உயரங்களைத்தொட வாழ்த்துகிறோம்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved