ஊராட்சி மன்றத் தலைவர்-சின்னமனூர். திருமதி.மலர்க்கொடி சேகர்
திருமதி.மலர்க்கொடி சேகர் அவர்கள் 1977-இல் தேனி மாவட்டம், சின்னமனூர் அருகேயுள்ள புலானந்தபுரம் கிராமத்தில் திரு. பாலுச்சாமி நாயக்கர் – திருமதி.முத்துலட்சுமி தம்பதியினருக்கு, விவசாயக் குடும்பத்தில் மகளாகப் பிறந்தார். மேல்நிலைக் கல்வி வரை பயின்றவர், ஆசிரியர் பயிற்சி முடித்துள்ளார். உள்ளூரைச் சேர்ந்த தன் மாமன் மகன் திரு.M.சேகர் (இவரைப் பற்றி மேலும் விபரங்களுக்கு நீலநிறத்திலுள்ள பெயர் மீது விரல் வைக்கவும்) அவர்களை மணந்துள்ள இத்தம்பதியினருக்கு S.ராஜசேகர் என்ற மகன் உள்ளார்.
திருமணத்திற்க்குப்பின் தனியார் பள்ளியொன்றில் ஆசிரியையாகப் பணியாற்றி வந்தார். புலானந்தபுரம் கிராமத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களை உருவாக்கி பெண்களின் பொருளாதார மேம்பாட்டிற்கு உறுதுணையாக இருந்து வந்தார். கணவரின் அரசியல் பணிகளுக்கு ஊக்கமளிக்கக் கூடியவராக இருப்பவர் திருமதி.மலர்க்கொடி அவர்கள்.
கணவரின் அரசியல் பணிக்காக கிடைத்த வாய்ப்பைத் தவறவிடாமல் புலானந்தபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் வேட்பாளராக போட்டியிட்டு மாபெரும் வெற்றி பெற்றார் திருமதி.மலர்க்கொடி அவர்கள். ஆசிரியையாக பணியாற்றிய அனுபவத்தால், ஊராட்சி மன்றத்தை நிர்வாகிக்கவும், செயல்படும் ஆற்றலையும், கூர்மதியையும் பெற்றிருப்பவர் திருமதி.மலர்க்கொடி என்றால் மிகையல்ல. தனக்கு கிடைத்த இந்த வாய்ப்பை சாதி,மதம்,மொழி,இனம் கடந்து அனைத்து தரப்பு மக்களுக்காகவும் பாரபட்சமின்றி செயலாற்றி சமுதாயத்திற்கு பெருமை சேர்த்திடவேண்டுகிறோம். மேலும்,இராஜ கம்பள மக்கள் மிக அதிகப்படியான மக்கள் வசிக்கும் மாவட்டமாக இருந்தும், குறிப்பிடத்தக்க, ஆளுமைமிக்க தலைவர்கள் இன்றி சமுதாயம் தள்ளாடுவதையும் கருத்தில் கொண்டு, தன் கணவரின் அரசியலை இன்னும் துரிதப்படுத்தி, அந்த மாவட்டத்தின் சமுதாயத்தின் அடையாளமாக திரு.சேகர் அவர்களை உருவாக்கிட, அனைத்து தரப்பு மக்களையும் அரவணைத்து, செயலாற்றி, சமுதாயத்தினரின் அன்பையும், ஆதரவையும் பெற்று, தேனி மாவட்டத்திலிருந்து ஒரு தலைவரை உருவாக்கித்தர வேண்டுமாய் அன்புடன் வேண்டி வாழ்த்துகிறோம்.