ஊராட்சி மன்றத் தலைவர் - சத்தி .திருமதி.மலர்விழி சரவணக்குமார்
திருமதி.மலர்விழி சரவணக்குமார் அவர்கள் 06.03.1981-இல் ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகேயுள்ள சதுமுக நடுப்பாளையம் கிராமத்தில் திரு.நஞ்சுண்ட நாயக்கர்- திருமதி. சரோஜா அம்மாள் தம்பதியினருக்கு மகளாகப் பிறந்தார். மேல்நிலைக்கல்வி வரை பயின்றுள்ளார். சத்தியமங்கலம் அருகேயுள்ள தாசநாயக்கனூர் கிராமத்தைச் சேர்ந்த திரு.சரவணக்குமார் (இவரைப்பற்றிய முழுவிபரங்களைப் பார்க்க நீலநிறத்திலுள்ள அவரின் பெயர் மீது விரல் வைக்கவும்) அவர்களை மணம்புரிந்துள்ள திருமதி.மலர்விழி அவர்களுக்கு S.சல்மாஸ்ரீ என்ற மகளும் S.முகில்தர்ஷன் என்ற மகனும் உள்ளனர்.
பொதுவாழ்வில் நீண்டநாள் பயணித்து வரும் திரு.சரவணக்குமார் அவர்களை மணமுடித்துள்ள திருமதி.மலர்விழி அவர்களுக்கு, பொதுவாழ்வின் பரிட்சயம் ஒன்றும் புதிதல்ல. அரசூர் ஊராட்சியில் மகளிர் சுயஉதவிக்குழு கூட்டமைப்பின் தலைவராக நீண்ட நாட்களாக பதவி வகித்து வருவதன் மூலம், அடித்தட்டு மக்களுடன் நேரடித் தொடர்பில் இருந்துவருபவர் திருமதி.மலர்விழி சரவணக்குமார் அவர்கள். கணவரின் அரசியல் அனுபவமும், மகளிர் சுயஉதவிக்குழுக்களின் மூலம் பொதுமக்களிடம் மக்களிடம் பழகக்கிடைத்த வாய்ப்பையும் பெற்றிருந்த திருமதி.மலர்விழி சரவணக்குமார் அவர்கள், அரசூர் ஊராட்சிமன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் வாய்ப்பைப்பெற்றார். அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி கடந்த 2019- டிசம்பர் மாதம் நடைபெற்ற உள்ளாட்சித்தேர்தலில், அரசூர் ஊராட்சிமன்றத் தேர்தலில் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்றார்.
அடித்தட்டு மக்களுக்கு நேரடி சேவை செய்யும் வாய்ப்பினை பெற்றுள்ள திருமதி.மலர்விழி சரவணக்குமார் அவர்கள், சாதி,மத,இன, மொழி பேதமின்றி அனைவருக்காகவும் சிறப்புடன் செயலாற்றி, மக்களின் மனதில் நீங்கா இடம்பெற்று, சமுதாயத்திற்கும், சார்ந்துள்ள கட்சிக்கும் பெருமை சேர்த்திட வேண்டுமாய் அன்புடன் வேண்டி வாழ்த்துகிறோம்.