🔴 LIVE | முப்பெரும் விழா 2023


அரசியல் வானில் ஒளிரும் நட்சத்திரம்-சத்தியமங்கலம்.T.T.சரவணக்குமார்

திரு.T.T.சரவணக்குமார் அவர்கள் 16.06.1972-ல் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகேயுள்ள தாசநாயக்கனூர் கிராமத்தில் திரு. திம்மநாயக்கர் – திருமதி. ஜெயலட்சுமி தம்பதியினருக்கு, விவசாயக் குடும்பத்தில் மகனாகப் பிறந்தார். இவர் கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் கூட்டுறவுத் துறையில் B.A.,(Co-Op) இளங்கலைப் பட்டம் பெற்றுள்ளார். இவருக்கு திருமணமாகி திருமதி.S.மலர்விழி (இவரைப்பற்றிய முழுவிபரங்களைப் பார்க்க நீலநிறத்திலுள்ள அவரின் பெயர் மீது விரல் வைக்கவும்) என்ற மனைவியும்   S.சல்மாஸ்ரீ  என்ற மகளும் S.முகில்தர்ஷன் என்ற மகனும் உள்ளனர்.


இளங்கலை பட்டதாரியான இவர் 1995 முதல் 1999 வரை ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகேயுள்ள வாளிபாளையம் கூட்டுறவு சங்கத்தில் பணியாளராக பணியாற்றினார். 1999 ஆம் ஆண்டு அப்பதவியிலிருந்து விலகியவர், அஇஅதிமுகவில் இணைந்து அரசூர் ஊராட்சிக் கழக செயலாளரக   நியமிக்கப்பட்டார். 1999 முதல் இன்றுவரை அப்பொறுப்பில் சிறப்பாக செயலாற்றி வருபவர், 2001-ல் அக்கிராம மக்களின் வேண்டுகோளை ஏற்று உள்ளாட்சித் தேர்தலில் களம்கண்டு ஊராட்சிமன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றிவாகை சூடினார். தான் பதவிவகித்த காலத்தில் அவ்வூராட்சிக்குட்பட்ட அனைத்து கிராமங்களிலும் காங்க்கிரீட் சாலை அமைத்தல், நிழல்கொடை அமைத்தல், தெருக்குழாய்கள் அமைத்து குடிநீர் வசதியை மேம்படுத்துதல், உயர்மட்ட டேங்க் அமைத்தல், இந்திரா நினைவு குடியிருப்பு திட்டத்தின் மூலம் ஏழை-எளிய மக்களுக்கு கான்கிரீட் வீடு கட்டிக்கொடுத்தல் போன்ற பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தினார். இவரின் சிறந்த நிர்வாக செயல்பாட்டின் காரணமாக அம்மாவட்டத்தின் சிறந்த ஊராட்சிகளுக்கான தேர்வில் மூன்றாவதாக தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசு வழங்கப்பட்டது.

தீவிர அரசியல் தவிர விவசாயப் பணியையும் மேற்கொண்டு வருபவர், சமுதாய வளர்ச்சியிலும் அக்கறை கொண்டவர். தவீக பண்பாட்டுக் கழகத்தில் தாசநாயக்கனூர் கிளையின் தலைவராக 1995 ஆம் ஆண்டில் பொறுப்பேற்றுக்கொண்டவர், இன்று வரையில் அப்பதவியில் தொடர்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தவீக பண்பாட்டுக் கழகத்தின் கொடியை அப்பகுதி முழுவதும் பட்டொளி வீசிப்பறக்கச் செய்தவர், பல்வேறு கூட்டங்களை ஏற்பாடு செய்து சமுதாய மக்களிடையே ஒற்றுமையையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறார். அக்கிராமத்திலுள்ள பெருமாள் கோவிலின் முக்கிய காரியதர்சியாக இருப்பவர், அக்கோவிலுக்கு பாத்தியப்பட்ட கோவை,திருப்பூர், நமக்கல்,கரூர் மாவட்டத்திலுள்ள தன் கொடிவழி உறவுகளுடன் சிறந்த நட்பைப் பேணிவருகிறார்.


கால்நூற்றாண்டு காலத்திற்கும் மேலாக பொதுவாழ்வில் ஈடுபட்டு வருபவர், அப்பகுதில் கட்சியிலும், சமுதாயத்திலும் முக்கிய தலைவர்களில் ஒருவராக உள்ளார். கடந்த 2019-டிசம்பர் மாதம் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் அரசூர் ஊராட்சிமன்றத் தலைவர் வேட்பாளராக தன் துணைவியார் திருமதி. மலர்விழி சரவணக்குமாரை (இவரைப்பற்றிய முழுவிபரங்களைப் பார்க்க நீலநிறத்திலுள்ள அவரின் பெயர் மீது விரல் வைக்கவும்) களமிறக்கி வெற்றிவாகை சூடினார்.

பல்வேறு நலத்திட்டங்களை அக்கிராமத்திற்கு செயல்படுத்தும் முனைப்பிலுள்ள திரு.சரவணக்குமார் அவர்கள், மேலும் பல அதிகார பதவிகளைப் பெற்று சமுதாயத்திற்கு சேவையாற்றிட வேண்டுமாய் அன்புடன் வேண்டி வாழ்த்துகிறோம்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved